'மாமன் மகனுக்காக ரயில்வே மேம்பாலம் அமைய வேண்டிய இடத்தையே மாற்றப் பார்க்கிறார்!’ என்று பதற்ற மாக ஒரு தகவல் வந்தது, அமைச்சர் ரமணா பற்றி. உடனே விசாரணையில் இறங்கினோம்.

சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கிறது வேப்பம்பட்டு. இங்கு இருந்துதான் பூந்தமல்லி செல்லும் சாலை பிரிகிறது. இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்னைக்கும் திருப்பதிக்கும் சென்று வருகின்றன. இடையில் வேப்பம்பட்டு ரயில் நிலையம் உள்ளதால், இதைத் தாண்டித்தான் வாகனங்கள் செல்லவேண்டும். வேப்பம்பட்டு ரயில்வே கேட் மூடப்படும் வேளையில், நீண்ட நேரம் வாகனங்கள் காத்திருக்க வேண்டும் அல்லது ஐந்து கி.மீ. தூரம் சுற்றிச் செல்லவேண்டும். இந்த சிரமத்தைத் தவிர்ப்பதற்காக, இங்கே ரயில்வே மேம்பாலம் அமைக்க மாநில நெடுஞ்சாலைத் துறையும் ரயில்வே நிர்வாகமும் முடிவு செய்தது. இதில்தான் தற்போது வில்லங்கம்.

வேப்பம்பட்டைச் சேர்ந்த ஏழுமலை என்பவர், ''மேம்பாலம் கட்டுவதற்கு நான்கு இடங்கள் வரைபடங்களாக தயார் செய்யப்பட்டன. அதில் நான்காவது இடத்தைத் தேர்வு செய்து பாலம் அமைக்க வல்லுனர் குழு முடிவெடுத்தது. நெடுஞ்சாலைத் துறையும் வருவாய்த் துறையும் அந்த நான்காவது இடத்திலேயே மேம்பாலம் அமைக் கலாம் என உறுதி செய்தன. அந்த இடத்தில் இருக்கும் நிலம் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் 58 பேருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான கூட்டம் திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், காரணமே சொல்லப் படாமல் கூட்டம் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு ஒன்பது மாதங்கள் கழித்தே கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. நில உரிமையாளர்கள் 58 பேரில் அமைச்சர் ரமணாவின் மாமன் மகன் உமாபதி மட்டும் எதிர்ப்பு தெரிவித்தார். 'எங்க நிலத்துக்கு அருகில் உள்ள குடியிருப்புப் பகுதியில் 40 அடி சாலை உள்ளது. வல்லுநர் குழு காட்டிய பட்டியலில் முதலாவதாக இடம்பெற்றுள்ள அங்கே வேண்டுமானால் மேம்பாலம் அமைக்கலாம். இந்த இடத்தில் வேண்டாம்’ என்று மனு தந்தார்.

நான்காவது இடத்தில் மேம்பாலம் அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டு, அட்டவணையும் வெளியிடப்பட்ட நிலையில்... தற்போது உமாபதி குறிப்பிட்ட வேறொரு இடத்தில் மேம்பாலம் கட்டும் வகையில் முடிவு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதனால் 2012-க்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டு இருந்த மேம்பாலப் பணி மேலும் இழுத்துக்கொண்டே போகிறது'' என்றார் ஆதங்கத்துடன்.

அதே பகுதியைச் சேர்ந்த காளப்பன் என்பவர், ''ஏற்கெனவே வல்லுனர் குழு உறுதி செய்த இடம் தான் சரியானது. பெருமளவு காலி இடம் அங்கு உள்ளது. தனிநபர்கள் அதிகம் பேருக்கு பாதிப்பு உண்டாகாது. உமாபதி காட்டும் இடத்தில் மேம்பாலம் கட்டினால் ஏராளமானவர்கள் பாதிக்கப்படுவார்கள். அதோடு, ஒரு தனியார் பள்ளிக்கூடத்தின் வாசலை ஒட்டி பாலம் இறங்கும். இதனால் அதிவேகமாக விரையும் லாரிகளால் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆபத்து நேரவும் வாய்ப்பு உள்ளது. நான்காவது இடத்தில் மேம்பாலம் அமைத்தால் மாமன் மகன் உமாபதிக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் 34 சென்ட் சேதமாகுமாம். அந்த ஒரே காரணத்துக்காகத்தான் இந்தக் குழப்பம்'' என்று கொதிக்கிறார்.

வேப்பம்பட்டு தி.மு.க. கிளை கழகச் செயலாளர் முரளி பேசும்போது, ''கடந்த ஆண்டு, நான்தான் பஞ்சாயத்துத் துணைத் தலைவராக இருந்தேன். மேம்பாலம் கட்டுவது என்று முடிவு செய்யப்பட்ட பிறகு மாஸ்டர் பிளான்படி எல்லை தேர்வு செய்யப் பட்டது. இப்போது எந்தக் காரணமும் சொல்லாமல் வேறு எல்லையைத் தேர்வு செய்துள்ளார்கள். முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் ஏன் மேம்பாலம் கட்டவில்லை என்று கேட்டதற்கு எந்தப் பதிலும் இல்லை. ரமணாவுக்குச் சொந்த ஊர் பெருமாள்பட்டுதான். மாமா மகன் உமாபதிக்காக தான் இப்படி மாற்று வழியைத் தேர்ந்தெடுக்க உதவியிருக்கிறார்'' என்கிறார்.

இதுபற்றி உமாபதியிடம் விளக்கம் கேட்டோம். ''நான்காவது இடத்தில் பாலம் கட்டினால் எனது நிலத்தில் கொஞ்சம் பாதிக்கப்படுகிறது என்பது உண்மைதான். ஆனால், அதற்காக நான் எதிர்க்கவில்லை. முதல் இடத்தில் மேம்பாலம் அமைப்பதுதான் யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுத்தாது. அந்தக் காரணத்துக்காகத்தான் அந்தப் பகுதியில் மேம்பாலம் அமைக்க மனு கொடுத்தேன். மேம்பாலம் அமைக்கப்படுவதால் குடியிருப்புப் பகுதிக்கும் பள்ளிக்கூடத்துக்கும் எந்த பாதிப்பும் இருக்காது என்பதே உண்மை. மற்றபடி, இதற்கும் அமைச்சருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை'' என்றார்.

குற்றச்சாட்டு குறித்து சுற்றுச்சூழல் துறை அமைச் சர் ரமணாவிடம் பேசினோம். ''மாமன் மகனுக்காக நான் பாலத்தை வேறு இடத்துக்கு மாற்றியதாகச் சொல்வதைக் கேட்கும்போது சிரிப்புதான் வருகிறது. உமாபதிக்காக நான் எதையும் செய்யவில்லை. எந்தப் பாதையில் மேம்பாலம் அமைப்பது என்பதில் நான் தலையிடவே இல்லை. சப்-வே அமைக்க வேண்டும் என்று மக்கள் பிரதிநிதிகள் சிலர் என்னிடம் மனு கொடுத்தார்கள். அதனால், வேப்பம்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பெருமாள்பட்டு ரயில்வே கேட்டுக்கு சப்-வே அமைக்க உதவினேன். மற்றபடி மேம்பாலம் அமைப்பதில் எனக்குத் துளியும் தொடர்பு இல்லை'' என்றார் அமைதியாக.

இந்த விவகாரம் குறித்துப் பேச ரயில்வே அதிகாரிகள் முன்வராத நிலையில், உண்மையைச் சொல்லப்போவது யார்?

- க.நாகப்பன், படங்கள்: ந.வசந்தகுமார்