நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டு இருக்கும் திருத்தணி எம்.எல்.ஏ. அருண் சுப்ரமணியம், அகர வரிசைப்படி தே.மு.தி.க-வின் முதல் எம்.எல்.ஏ.!

கடந்த 19-ம் தேதி திருவள்ளூர் மணவாள நகரில் உள்ள தன் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த எம்.எல்.ஏ. அருண் சுப்ர மணியத்தைத் தட்டி எழுப்பினர் டி.எஸ்.பி. பாலசந்திரன் தலைமை யிலான போலீஸார். 'வரதராஐபுரம் மக்கள் பயன்படுத்தி வரும் ஆற்றுப் பகுதியை ஒட்டிய பொதுப் பாதையை அருண் சுப்ரமணியன் ஆக்கிரமித்து வைத்திருக்கிறார்’ என்று இருளர் முன்னேற்றச் சங்கத்தினர் கொடுத்திருந்த புகாரின் பேரில்தான் இந்த அதிரடி.

அந்தச் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட நிறுவனர் பிரபுவைச் சந்தித்தோம். ''எம்.எல்.ஏ. அருண் சுப்ரமணியத்தின் வீடு இருக்கும் மணவாள நகரின் விரிவாக்கப் பகுதிதான் வரதராஜ நகர். இந்த ஏரியாவில் ஆற்றுப் பகுதியை ஒட்டிய இடத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் இருளர் இன மக்கள் என 150 குடும்பங்கள் காலம் காலமாக வசித்து வருகிறோம். எங்களுக்கான வாழ்வாதாரம் என்பதே துணிகள் துவைப்பதும் மீன் பிடிப்பதும்தான். இந்த ஆற்றுப் பகுதியை ஒட்டிய இடத்தில் அருண் சுப்ரமணியத்துக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம் இருக்கிறது. அவருடைய இடத்தில் மட்டும் கம்பி வேலி அமைத்து இருந்தால், எந்த பிரச்னையும் இல்லை. நாங்கள் பயன்படுத்தி வந்த பாதையையும் மறிப்பது போல், ஆறு வருடங்களுக்கு முன்னர் கம்பி வேலி அமைத்தார். அந்த கம்பி வேலி காரணமாக நாங்கள் இரண்டு கி.மீ. தூரம் சுற்றிச் செல்லவேண்டி இருந்தது. அதனால், இருளர் சங்கம் மூலமாகத் தீர்வு காண களத்தில் இறங்கினோம். கடந்த 16-ம் தேதி எங்கள் மக்களை ஒன்றுதிரட்டி கலெக்டர், எஸ்.பி., நகராட்சி ஆணையர் என்று எல்லோருக்கும் மனு கொடுத்தோம். ஆனால் இவ்வளவு சீக்கிரத்தில் நடவடிக்கை எடுத்து எம்.எல்.ஏ-வை கைது செய்யும் அளவுக்குப் போவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை'' என்றார், நடப்பு அரசியல் தெரியாதவராக.

எம்.எல்.ஏ-வின் வழக்கறிஞர் மகேந்திரனிடம் பேசினோம். ''இடத்தை எம்.எல்.ஏ. ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கிறது. சமூக விரோதிகள் சிலர் ஆற்றுப் பகுதிக்குச் சென்று மது அருந்துவது, பலான பெண்களுடன் செல்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டனர். அதனால், இருளர் பகுதியைச் சேர்ந்த சிலரே கம்பி வேலி அமைத்து இருக்கிறார்கள். ஆனால் அந்த வேலியை எம்.எல்.ஏ. அமைத்ததாக, தவறானப் புகாரில் கைது செய்திருக்கிறார்கள்'' என்றார்.

கைது நடவடிக்கை குறித்து மாவட்ட காவல் துறை உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். ''எம்.எல்.ஏ-வுக்குச் சொந்தமான நிலத்தின் அருகிலேயே நகராட்சிக்குச் சொந்தமான சாலை இருக்கிறது. அந்த இடத்தில வேலி போட்டதோடு ஷெட்டும் போட்டிருக்கிறார். அது பயன்பாடு இல்லாத இடமாக இருந்திருந்தால், அவர் சொல்கிறபடி சிவில் மேட்டராக நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் தாழ்த்தபட்டவர்களின் போக்குவரத்துக்குப் பாதையை மறிப்பது அல்லது தடை ஏற்படுத்துவது சட்டப்படி கிரிமினல் குற்றமாகும். அதனால் கைது நடவடிக்கை எடுக்கவேண்டியதானது'' என்றார்.

தன்னுடைய கட்சி எம்.எல்.ஏ. தவறு செய்ய வில்லை என்றும் இது பழி வாங்கும் நடவடிக்கை என்றும் விஜயகாந்த் ஆவேசமாக அறிக்கை விட்டிருக்கிறார். எது உண்மை என்பதை நீதிமன்றம்தான் சொல்லவேண்டும்.

- எஸ்.கிருபாகரன்