Published:Updated:

''கான்ட்ராக்ட் கேட்டு துப்பாக்கியைத் தூக்கினார்!''

அதிரடி செய்தாரா நெல்லை ஆளும் கட்சி பிரமுகர்?

''கான்ட்ராக்ட் கேட்டு துப்பாக்கியைத் தூக்கினார்!''

அதிரடி செய்தாரா நெல்லை ஆளும் கட்சி பிரமுகர்?

Published:Updated:
##~##

ரசு ஒப்பந்தங்களை தனக்கு வேண்டப்பட்ட கான்ட்ராக்டர்களுக்கு ஒதுக்காத பொதுப்பணித் துறை அதிகாரியை அடித்து உதைத்து துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக நெல்லை ஆளும் கட்சிப் பிரமுகர் மீது பரபரப்புக் குற்றச்சாட்டு கிளம்பி இருக்கிறது! 

நெல்லை தாமிரபரணி வடிநில கோட்டப் பொதுப் பணித் துறை அலுவலகத்தில் செயற்பொறியாளராக இருப்பவர் சந்திரசேகரன். இவர் மீது சிந்துராஜா என்ற கான்ட்ராக்டர் கடந்த 17-ம் தேதி, நெல்லை போலீஸ் கமிஷனர் கருணாசாகரிடம் புகார் கொடுத்தார். அதில், 'அரசு ஒப்பந்ததாரராகிய நான்,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''கான்ட்ராக்ட் கேட்டு துப்பாக்கியைத் தூக்கினார்!''

தாமிரபரணி வடிகால் கோட்ட அலுவலகம் கோரி இருந்த 27 பணிகளுக்கு ஜூன் 5-ம் தேதி டெண்டர் போட்டேன். மறுநாள் திறக்க வேண்டிய டெண்டரை, ஆட்கள் பற்றாக்குறையைக் காரணம் காட்டி செயற்பொறியாளர் தள்ளி வைத்து விட்டார். அதன்பிறகு தகவலே இல்லை என்றதும் ஒரு மாதம் கழித்து அலுவலகத்துக்குப் போய் கேட்டதற்கு, 'ஒப்பந்தம் விடப்பட்டு வேலை முடிவடையும் நிலையில் இருக்கிறது. என்னுடைய குவார்ட்டர்ஸுக்கு வா... அங்கே வைத்துப் பேசிக்கலாம்’ என்றார். அதன்படி, கடந்த 16-ம் தேதி இரவு அங்கே சென்ற போது வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அவதூ றாகப் பேசி என்னை பிடித்துத் தள்ளிவிட்டார்'' என்று

''கான்ட்ராக்ட் கேட்டு துப்பாக்கியைத் தூக்கினார்!''

புகாரில் தெரிவித்து இருந்தார். இவர் ஆளும் கட்சியைச் சேர்ந்த நான்குநேரி சட்டமன்றத் தொகுதிச்செயலாளர் ஆர்.எஸ்.முருகனுக்கு நெருக்கமானவர்.

இந்த நிலையில் கடந்த 19-ம் தேதி செயற்பொறியாளர் சந்திரசேகரன், போலீஸ் கமிஷனர் கருணாசாகரை சந்தித்து ஆர்.எஸ்.முருகனுக்கு எதிராக புகார் கொடுத்திருப்பதுதான் ஏரியாவில் சூட்டைக் கிளப்பி உள்ளது.

சந்திரசேகரிடம் பேசினோம். ''கடந்த 17-ம் தேதி ஆர்.எஸ்.முருகன் உள்ளிட்ட சிலர் எனது அறைக்குள் அத்துமீறி நுழைஞ்சாங்க. ஆவேசத்துடன் தரக்குறைவான வார்த்தைகளைப் பேசினாங்க. தாமிரபரணி வடிகால் மற்றும் கண்மாய்ப் பராமரிப்பு பணிகள் மொத்தத்தையும்

''கான்ட்ராக்ட் கேட்டு துப்பாக்கியைத் தூக்கினார்!''

ஆர்.எஸ்.முருகனின் மனைவி சிந்துவுக்கே கொடுக்கணும்னு வற்புறுத்தினாங்க. 'இந்தப் பகுதியில் கடந்த 15 வருஷமா நான்தான் எல்லா டெண்டரையும் எடுக்குறேன். நீ மட்டும் ஏன் கொடுக்க மாட்டேங்குற? நான் சொல்ற ஆளுக்கு வேலையைக் கொடுக்கலைன்னா உன்னை சுட்டுக் கொல்வேன்’னு சொல்லிக் கிட்டே துப் பாக்கியைக் காட்டினார். அப்போது, அவருடன் வந்திருந்த சிலர் என்னைத் தாக்கினாங்க. நல்லவேளையாக அந்த சமயத்தில் வேறு சிலர் தற்செயலாக அறைக்குள் நுழைந்ததால், ஆர்.எஸ்.முருகனும் அவரோட ஆட்களும் வெளியே போயிட்டாங்க. இந்தச் சம்பவத்துக்குப் பிறகும் எனக்குத் தொடர்ந்து மிரட்டல்கள் வருவதால் கமிஷனரிடம் புகார் கொடுத்திருக்கேன்'' என்று படபடத்தார்.

கான்ட்ராக்டர்கள் சிலரிடம், என்னதான் நடந்தது என்று விசாரித்தோம். ''ஆட்சி மாறிய பிறகு அ.தி.மு.க-வினரின் கை ஓங்கிடுச்சு. ஆர்.எஸ்.முருகன் தரப்பினர் கான்ட்ராக்ட்களில் அதிகமா தலையிடுறாங்க. கடந்த ஆட்சியில்கூட எல்லோருக்கும் வேலையைப் பிரிச்சுக் கொடுத் தாங்க. இப்போது, ஆர்.எஸ்.முருகனுக்கு வேண்டப்பட்டவங்க மட்டும்தான் வேலை செய்ய முடியுது. மூத்த அமைச்சர்கள் சிலருக்கு மிகவும் நெருக்கமாக இருப்பவர் முருகன். அவர் சொல்வதைக் கேட்காத அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர் ஆகிடு றாங்க. சந்திரசேகரன் கொடுத்த புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதில் இருந்தே ஆர்.எஸ்.முருகனுக்கு அதிகாரிகள் மட்டத்தில் என்ன பவர் இருக்குங்கறதை தெரிஞ்சுக்கலாம்'' என்றார்கள் ஆற்றாமையுடன்.

இது பற்றி ஆர்.எஸ்.முருகனிடம் பேசினோம். ''என் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுக்கள் எல்லாமே

''கான்ட்ராக்ட் கேட்டு துப்பாக்கியைத் தூக்கினார்!''

பொய் யானது. செயற்பொறி யாளர் மீது ஏற்கெனவே கொடுக்கப்பட்ட புகாரில் உண்மை இருப்பதால், போலீஸார் வழக்குப் பதிவு செஞ்சிருக்காங்க. அதற்குப் பழி வாங்கும் நோக்கத்தில் என் மீது பொய்யான புகாரைச் சொல்லி இருக்கார் சந்திரசேகரன். சம்பவம் நடந்ததாக அவர் சொல்லி இருக்கும் தினத்தில், நான் சென்னையில் இருந்தேன். அவர் சொல்லி இருக்கும் நேரத்தில் நான் விமானத்தில் சென்றதற்கான டிக்கெட் என்னிடம் இருக்கிறது. இதன் பின்னணியில் எங்க கட்சிக்காரங்க சிலரும் இருக்காங்க. குறிப்பாக பாப்புலர் முத்தையா போன்றவர்கள் அந்த அதிகாரியைத் தூண்டிவிட்டு என் மீது புகார் செய்ய வச்சிருக்காங்க'' என்றார் காட்டமாக.

அ.தி.மு.க-வின் நெல்லை மாநகர மாவட்ட முன்னாள் செயலாளர் பாப்புலர் முத்தையாவிடம் பேசினோம். ''எனக்கும் அந்தப் புகாருக்கும் துளியும் தொடர்பு கிடையாது. ஆர்.எஸ்.முருகன் எனது உறவுக்காரர். என்னிடம் பாசமாக இருப்பவர். அவர் எதற்காக எனது பெயரை இதில் இழுத் தார் என்பதே புதிராக இருக்கிறது'' என்றார் சோக முகத்துடன்.

இருதரப்பும் புகார் செய்திருக்கும் நிலையில், இதுபற்றி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் கருணாசாகரிடம் பேசினோம். ''ஏற்கெனவே, செயற்பொறியாளர் சந்தி ரசேகரன் மீது ஒருவர் புகார் கொடுத்தார். அதை விசாரித்ததில் உண்மை இருப்பது தெரிய வந்ததால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இப்போது, செயற் பொறியாளர் ஒரு புகாரைத் கொடுத்து இருக்கிறார். அந்தப் புகார் தொடர்பாக விசாரணை நடத்த சொல்லி இருக்கிறேன். யார் தவறு செய்திருந்தாலும் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுப்போம்'' என்றார் திட்டவட்டமாக.

'தோட்டா பாய்ச்சுவேன்' என்று கோட்டா சீனிவாசராவ் ரேஞ்சுக்கு அரசு அதிகாரியிடம் தன் கட்சிக்காரர் அதகளம் நடத்தினாரா என்பதை உடனே விசாரித்து அறிய வேண்டாமா முதல்வர்?

- ஆண்டனிராஜ்