Published:Updated:

விருத்தாசலம் அருகே அரசுப் பள்ளியில் 22 லேப்டாப்புகள் திருட்டு! - முகமூடி கொள்ளையர்களைத் தேடும் போலீஸார்

ஜி.சதாசிவம்
எஸ்.தேவராஜன்

விருத்தாசலம் அருகே அரசுப் பள்ளியில் 22 லாப்டாப்கள் திருட்டு. வேப்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

சேப்பாக்கம் அரசுப் பள்ளி
சேப்பாக்கம் அரசுப் பள்ளி

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சேப்பாக்கம் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. நேற்று பள்ளி முடிந்து ஆசிரியர்களும் மாணவிகளும் சென்றுவிட்டனர். பள்ளி காவலாளி கலியன் இரவுப் பணியில் இருந்துள்ளார்.

சேப்பாக்கம் அரசுப் பள்ளி
சேப்பாக்கம் அரசுப் பள்ளி

பள்ளியில் பூட்டிய அறையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகளுக்கு வழங்க 39 இலவச லாப்டாப்கள் இருந்துள்ளன. நள்ளிரவில் முகமூடி அணிந்து வந்த 4 நபர்கள் கலியனைக் கத்தியைக் காட்டி மிரட்டி, அறையின் பூட்டை உடைத்துள்ளனர். அங்கு இருந்த 22 லேப்டாப்களை அதன் மேலிருந்த இருந்த அட்டைப் பெட்டிகளைத் தூக்கி எறிந்துவிட்டு, ஒரு சாக்கில் கட்டி எடுத்து சென்றுவிட்டனர்.

Vikatan

இன்று இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் தேவசேனா வேப்பூர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சம்வப இடத்துக்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேப்பாக்கம் அரசுப் பள்ளி
சேப்பாக்கம் அரசுப் பள்ளி

மாணவிகளுக்கு வழங்க வைத்திருந்த லேப்டாப்களைத் திருடர்கள் கொள்ளையடித்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.