Published:Updated:

சிறுநீர் குடிக்கச் சொன்னார்களா?

பெரம்பலூர் ஆ'சிறியர்கள்'!

சிறுநீர் குடிக்கச் சொன்னார்களா?

பெரம்பலூர் ஆ'சிறியர்கள்'!

Published:Updated:
##~##

னியார் பள்ளிகளில் 'நைட் ஸ்டடி’ என்ற பெயரில் மாணவர்களைத் துன்புறுத்துகிறார்கள் என்ற பொதுவான குற்றச்சாட்டு உண்டு. ஸ்டடி நேரத்தில் சிறுநீர் கழிக்க அனுமதி கேட்ட குற்றத்துக்காக, சிறு நீரைக் குடிக்க கட்டாயப்படுத்தி அடித்து சித்ரவதை செய்ததாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு தமிழகத்தை அதிரச் செய் திருக்கிறது. பெரம்பலூர் மாவட்டம், அகரம்சிகூர் கிராமத்தில் உள்ள சிறுமலர் மேல்நிலைப் பள்ளியை மையம் கொண்டுதான் இந்த விவகாரம்! 

கும்பகோணம் அருகே உள்ள சோழன் மாளிகையைச் சேர்ந் தவர் தேசிங்குராஜன். இவரது மூத்த மகன் பரத்ராஜை கடந்த ஜூன் 17-ம் தேதி சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பில் சேர்த்துள்ளார். ஹாஸ்டலில் தங்கிப் படித்து வந்த பரத்ராஜை, மூன்று ஆசிரியர்கள் கொடூரமாகத் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. அவர் இப்போது, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிறுநீர் குடிக்கச் சொன்னார்களா?

சிகிச்சையில் இருந்த பரத்ராஜை சந்தித்தோம். ''19-ம் தேதி அன்னிக்கு நைட் ஸ்டடியில் இருந்தப்ப, அவசரமா ஒண்ணுக்கு வந்துச்சு. அங்கிருந்த இளையராஜா சார்கிட்ட பெர்மிஷன் கேட்டேன். 'உனக்கு

சிறுநீர் குடிக்கச் சொன்னார்களா?

மட்டும் என்னடா அடிக்கடி ஒண்ணுக்கு வருது?’னு கேட்டு ஹோஸ் பைப்பால அடிச்சார். அப்புறம், 'இப்பவே, இங்கேயே ஒண்ணுக்குப் போ’னு சொல்லி மிரட்டினார். அடி தாங்க முடியாம பேன்ட்லயே ஒண்ணுக்குப் போயிட்டேன். அங்க வந்த சக்திவேல் சார், கருப்பையா சார் ரெண்டு பேரும், 'ஒண்ணுக்கை கையால பிடிச்சுக் குடிடா’னு சொல்லி, மூங்கில் குச்சியாலேயே மாத்தி மாத்தி அடிச்சாங்க. வலி தாங்க முடியாமத் துடிச்சேன். ராத்திரி முழுக்க உடம்பெல்லாம் செம வலி'' என்றவனால் மேற்கொண்டு பேச முடியவில்லை.

தொடர்ந்தார் பரத்ராஜின் தாய் பூங்கொடி. ''பொழுது விடிஞ்சதும் ஹாஸ்டல்ல இருந்து வெளியேறி ஊருக்கு வந்து, எங்ககிட்ட நடந்ததைச் சொல்லி அழுதான். அவனோட சட் டையைக் கழட்டி பார்த்தப்ப இரக்கம் இல்லாம மாட்டை அடிக்கற மாதிரி அவனை அடிச்சது தெரிஞ்சது. அவன் கையாலேயே, அவன் மூத்திரத்தை பிடிச்சுக் குடிக்கச் சொல்லி இருக்காங்களே...'' என்று கதறினார்.

சிறுநீர் குடிக்கச் சொன்னார்களா?

பரத்ராஜின் தந்தை தேசிங்குராஜன், ''21-ம் தேதி எங்களைத் தேடி வந்த பள்ளி தலைமை ஆசிரியர் தங்கவேல், 'நடந்த எதுவும் எனக்குத் தெரியாது. அவங்க அடிச்சது தப்புதான். பிரச்னையை பெருசு பண்ணாதீங்க’ன்னு கெஞ்சினார். அதன்பிறகு, பரத்கிட்டேயும் வெளியில எதுவும் சொல்ல வேணாம்னு கேட்டுக்கிட்டார். யார்கிட்டேயோ போன்ல பேசச் சொன்னார். ஆனா, பத்திரிகைகாரங்ககிட்ட, என் மகன் புகையிலை போட்டதாலதான் வாத்தியாருங்க அடிச்சதா பேட்டி கொடுக்கிறார். என் பையனுக்கு புகையிலை பழக்கமே கிடையாது. தெரியா மத்தான் கேக்குறேன்... ஹாஸ்டல்ல தங்கிப் படிக்கிற பையனுக்கு எப்படிப் புகையிலை கிடைக்கும்? பசங்களுக்கு இவங்க வாங்கிக் கொடுக்கிறாங்களா?'' என்றார் கோபமாக.

இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி

சிறுநீர் குடிக்கச் சொன்னார்களா?

அதிகாரி மல்லிகா பள்ளியில் 21-ம் தேதி விசாரணை நடத்தினார். அவரிடம் பேசியபோது, ''பரத்ராஜை அடித்த மூன்று ஆசிரியர்களையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டு உள்ளேன். பரத்ராஜிடம் நான் விசாரித்தபோது, அவனை சிறுநீர் குடிக்க வைக்கவில்லை என்று சொன்னான்'' என்று தெரிவித்தார். பரத்ராஜின் வீட்டுக்கு வந்த தலைமை ஆசிரியர்தான், அவனை கல்வி அதிகாரியிடம் அப்படிப் பேச வைத்திருக்கிறார் என்று மனித உரிமை ஆர்வலர்கள் சொல்கிறார்கள்.

பள்ளியின் தாளாளர் முத்தமிழ்ச்செல்வனிடம் பேசினோம். ''புகையிலை பாக்கெட்டை பரத்ராஜ் பையில் வைத்து இருந்ததைப் பார்த்த மாணவர்கள் ஆசிரியர்களிடம் சொல்லி இருக்கிறார்கள். ஆசிரியர்கள் முதலில் அவனைக் கண்டித்து அறிவுரை கூறி உள்ளனர். அதன் பின்னரும், புகையிலை பாக்கெட்டை வைத்து இருந்ததால், கண்டிப்பதற்காக அடித்து இருக்கிறார்களே தவிர, சிறுநீரைக் குடிக்கச் சொல்லி சித்ரவதை செய்யவில்லை'' என்றார்.

இந்த நிலையில் ஆசிரியர்கள் மூவரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து மங் கலமேடு இன்ஸ்பெக்டர் செல்வத்திடம் பேசினோம். ''பரத்ராஜின் தந்தை கொடுத்த புகாரின்படி சித்ரவதை செய்தல், கொடூரத்தனமாக அடித்தல் போன்ற பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து ஆசிரியர்களைக் கைது செய்து இருக்கிறோம். அவர்களிடம், மாணவனை சிறுநீர் குடிக்க வற்புறுத்தியது குறித்து விசாரித்து வருகிறேன்'' என்றார்.

ஆசிரியர் - மாணவர் உறவு தொடர்ந்து சின்னாபின்னமாகி வருவது வேதனைதான்.

- சி.சுரேஷ், சி.ஆனந்தகுமார்

படங்கள்: எம்.ராமசாமி, செ.சிவபாலன்

சிறுநீர் குடிக்கச் சொன்னார்களா?

அப்ரோ விளக்கம்

அப்ரோ அறக்கட்டளை நிறுவனம் தொடர்பாக வெளியான செய்தியைத் தொடர்ந்து அதில் உறுப்பினராக உள்ள பெண்கள் நம்முடைய அலுவலகத்துக்கு நேரில் வந்தார்கள். ''கட்டுரையில் வெளியான தகவல்கள் தவறானவை'' என்றும் ''இது எங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு களங்கமும் உள்நோக் கமும் கற்பிப்பதாக இருக்கிறது'' என்று அந்த உறுப்பினர்கள் கூறினர். இச்செய்தியை வெளியிட்டதில் நமக்கு எந்தவித உள்நோக்கமும் இல்லை. இருப்பினும் இந்தத் தவறான தகவல் வெளியிட்டமைக்கு நாங்கள் வருந்துகிறோம்!