Published:Updated:

கெட்ட வார்த்தை பேசுவோம்

ஜூ.வி. நூலகம்

கெட்ட வார்த்தை பேசுவோம்

ஜூ.வி. நூலகம்

Published:Updated:

பெருமாள்முருகன், கலப்பை, 9/10, 2-ம் தெரு, 2-ம் தளம், திருநகர், வடபழனி,

சென்னை-26. விலை

கெட்ட வார்த்தை பேசுவோம்

100  

##~##

வார்த்தைகளில் நல்ல வார்த்தை, கெட்ட வார்த்தை என்று உண்டா? ஆண்குறி, பெண்குறி, உடல்உறவு சம்பந்தமான வார்த்தைகள் கெட்ட வார்த்தைகளாகவும் மற்றவை நல்ல வார்த்தைகளாகவும் பொதுப்புத்தியில் கட்டமைக்கப்பட்டு உள்ளன. ஆனால் இன்று, 'சோறு’ என்ற சொல்லே அவமானம் தரும் வார்த்​தையாக மாறிவிட்டது. சாப்பாட்டுக் கூடங்களில், திருமண வீடுகளில், 'சோறு போடுங்க’ என்று கேட்ப​வரை கேவலமாகப் பார்ப்பதும்... 'ஒயிட் ரைஸ் கொடுங்க...’, 'சாதம் போ​டுங்க’ என்பவர்கள் கௌரவமாக நடத்தப்​படுவதும் யதார்த்தமாகி விட்டது. பல பள்ளிக்கூடங்களில் தமிழில் பேசுவதே கெட்ட செயலாகி விட்டது. பன்னாட்டு நிறுவனங்களில் தமிழைத் தெரிந்திருப்பதே கேவலமாகி விட்டது.

கெட்ட வார்த்தை பேசுவோம்

ஆனால் தமிழ், எந்தச் சொல்லையும் ஒதுக்கவில்லை. எந்தச் செயலையும் உதாசீனப்படுத்தவில்லை. 'எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்பது மாதிரி எல்லாச் சொல்லும் மரியாதைக்கு உரியனவே என்று காட்டியவர்கள் நம்முடைய மூதாதைத் தமிழ்ப் புலவர்கள்.

அதீத அறம் பாடிய வள்ளுவர், 'மயிர்’ என்ற சொல்லைப் பொருத்​​​தமான இடத்தில் பயன்படுத்தி உள்ளார். தெய்வீகக் காப்பியம் கண்ட கம்பன், பெண்குறியை வர்ணிக்கவும் தயங்கவில்லை. கற்பனை நயத்துக்கு இன்றும் வியந்து பேசப்படும் காளமேகப்புலவர் ஆண்குறி குறித்தும் கவி பாடியுள்ளார். இவை அனைத்தும் பிற்கால இலக்கியங்களில் இல்லாமல் போனதற்கு என்ன காரணம்? அந்த வருத்தத்தைப் பதிவு செய்ய வந்திருக்கும் புத்தகம் இது!

பழந்தமிழ்க் காப்பியங்களைப் பதிப்பிக்கும் மகத்தான பணியைச் செய்ய வந்த பதிப்பாசிரியர்களும் உரையாசிரியர்களும் தங்களுக்கு இருந்த கூச்ச சுபாவத்தின் காரணமாக, உண்மைப் பொருட்களை லேசாக மாற்றியும் அல்லது அவற்றுக்குப் பொருள் சொல்வதைத் தவிர்த்தும் விட்டார்கள். கல்லூரித் தமிழாசிரியராக இருந்த உ.வே.சாமி​நாதய்யர், 'பிரபோத சந்திரோதயம்’ என்ற பாடநூலில் இருந்த இத்தகைய சில பாட்டுக்களை மட்டும் நடத்தாமல் தவிர்த்து விட்டாராம். ஆனால், அதில்இருந்து கேள்விகள் கேட்கப்பட... மாணவர்​கள் தெளிவாகப் பதில் எழுதி இருந்தார்களாம். நடத்தாத பாடத்தைப் பற்றி மாணவர்கள் தெளிவாக எழுதி இருந்ததை, உ.வே.சா. ஒரு கட்டுரையில் மேற்கோள் காட்டுவதாக பெருமாள் முருகன் சொல்கிறார்.

கலாசாரம், பண்பாடு போன்ற வார்த்தைக் கட்டுப்பாடுகளுக்காக தவிர்க்கப்பட்ட விஷயங்கள்தான் பிற்காலத்தில் பாலியல் அழுத்தங்​களாகத் தமிழ்ச் சமூகத்தில் மாறியது என்பதை மறுப்பதற்கு இல்லை.

''எந்த ஒரு சொல்லையும் மொழி புறக்கணிப்பதில்லை. படைப்பாளன் எந்தச் சொல்லையேனும் இது நல்ல சொல்; இது மோசமான சொல் என்று பிரித்து ஒதுக்குவானா? சொல்ல வரும் கருத்துக்கும் சூழலுக்கும் பொருத்தமான சொல்லா, பொருந்தாச் சொல்லா என்றுதான் பார்ப்பானே தவிர நல்லது கெட்டது என்று பார்வை கொண்டிருக்க மாட்டான். மொழியில் உள்ள எந்த ஒரு சொல்லையும் வெறுப்பவன் படைப்புத் தொழிலில் பாகுபாடின்றி ஈடுபட முடியுமா?’ - என்று கேட்கும் பெருமாள்முருகன், நவீன படைப்​பாளிகளில் குறிப்பிடத்தக்கவர். பழந்தமிழ் இலக்கியங்களை ஆழப்படித்தவர்.

ஆக்கபூர்வமான விவாதங்களை எழுப்பக்கூடிய புத்தகம் இது!

- புத்தகன்