பிரீமியம் ஸ்டோரி

முவை வைத்து கொங்கு மண்டலம் குழம்பிப்போய் இருக்கிறது! 'குபேரன் ஆக்குமா ஈமு?’ என்ற தலைப்பில் 11.4.12 தேதி இட்ட ஜூ.வி-யில் ஒரு கட்டுரை வெளியிட்டு இருந்தோம். அதில், ஈமு கோழி வளர்ப்பில் கூடிய சீக்கிரமே பிரச்னை வரலாம். அதில் முதலீடு செய்ப வர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையும் நாம் சுட்டிக் காட்டி இருந்தோம். புகார் வந்தால் நடவடிக்கை எடுப்போம் என்று அப்போது நம்மிடம் சொன்னார் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரான சின்னைய்யா.

'ஈமுவை நம்பி ஏமாந்தோம்!'
##~##

இதோ... ஈமு கோழிக்கு எதிராக முதல் புகார் பதிவாகி இருக்கிறது. திருப்பூர் மாவட்டம் கே.என்.பாளையத்தைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணியம்தான் புகார் கொடுத்தவர். அவரை சந்தித்தோம். ''ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி எங்க ஊருக்கு ஈமு கோழி வளர்ப்புப் பத்தி பேசுறதுக்காக, கோபி செட்டிப் பாளையத்தைச் சேர்ந்த கே.ஜி. பிரைட் லைவ்ஸ்டாக் இந்தியா (பி) லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த கார்த்திக் சங்கர் என்பவர் வந்திருந்தார். அவரோட பத்து விரலிலும் பத்து மோதிரங்களைப் போட்டுவந்து, 'இது அத்தனையும் ஈமு கொடுத்தது. இதுபோல நீங்களும் மோதிரம் போடணும்னா, ஈமு வளருங்க. ஈமுவின் கறி, இறகு, தோல் என்று அத்தனையும் பணம்தான். ஈமுவில் முதலீடு செய்தால் உங்களை கோடீஸ்வரனாக்கிக் காட்டுறேன்’ என்று சொன்னார். விவசாயம் நொடிந்துபோய் இருந்த எங்களுக்கு இவருடைய வார்த்தை நம்பிக்கையைத் தந்தது. திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கோவை, திண்டுக்கல் என்று தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து இந்த நிறுவனத்தில் 400-க்கும் மேற்பட்டவங்க பல கோடி ரூபாய் பணத்தைப் போட்டிருக்காங்க. கோழி வளர்ப்புக்கு மாதம் ஏழாயிரம், வருட போனஸ் இருபது ஆயிரம் என்று சலுகைகளை அவர் அறிவிக்க எங்களுக்கு சந்தோஷம் தாங்கலை. சொன்னதுபோலவே முதல் ஏழு மாசம் பணத்தை ஒழுங்காகக் கொடுக்கவும் ஆரம்பிச்சார். அதற்குப் பிறகு அவரிடம் இருந்து பணம் வரவில்லை. அவரை நேரில் சந்தித்து பணம் கேட்டேன். ரெண்டு மாசம் பொறுத்துக்கோங்கன்னு சொன்னார்.  

'ஈமுவை நம்பி ஏமாந்தோம்!'

நாங்க நாலு மாசம் பொறுத்திருந்து பார்த்துவிட்டு விவசாயிகள் எல்லாம் ஒன்று திரண்டு போய் அவரி

'ஈமுவை நம்பி ஏமாந்தோம்!'

டம் கேட்டோம். உடனே ஒன்பது லட்சத்துக்கு ஒரு செக் கொடுத்தார். அதுலயும் பணம் இல்லை. மறுபடி யும் நாங்க ஆபீஸுக்குப் போனபோது, அவரோட மனைவி காயத்ரி எங்களை மிரட்டினாங்க. வீட்டுல இருக்கும் நகை நட்டை எல்லாம் வித்து நானும் என் மனைவியும் சேர்ந்து 12 லட்ச ரூபாய் முதலீடு செய்திருந்தோம். அனுபவப்பட்ட நான் சொல்றேன்.. ஈமுவை நம்பி இனியும் யாரும் ஏமாறாதீங்க'' என்று கலங்கினார்.

அதே ஊரைச் சேர்ந்த கண்ணம்மாள் என்பவர் நம்மிடம், ''என் வீட்டுக்காரர் பேரு வையாபுரி. விவசாயம்தான் பார்த்துட்டு இருந்தோம். ஈமு கோழியில நல்ல வருமானம் வரும்னு சொல்லி ரெண்டு லட்சம் கடன் வாங்கி ஈமு கோழியில் முதலீடு செஞ்சாரு. ஆறு மாசமா பணம் வரவே இல்லை. கடன்காரங்க வட்டி கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. கொடுத்த பணமும் போச்சேன்னு உட்கார்ந்தவரு, மாரடைப்பு வந்து இறந்துட்டாரு. இப்போது நான் அநாதையா நிக்கிறேன்'' என்று தேம்பித் தேம்பி அழுகிறார்.

கார்த்திக் சங்கர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்திருப்பதால், ஈமு கோழிப் பண்ணையை இழுத்து

'ஈமுவை நம்பி ஏமாந்தோம்!'

மூடிவிட்டு, தலைமறைவாகி விட்டார். அவரது அனைத்து செல்களும் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது.

திருப்பூர் எஸ்.பி. விடுப்பில் இருப்பதால் ஈரோடு எஸ்.பி-யிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். ஈரோடு மாவட்ட எஸ்.பி. பொன்னியிடம் பேசினோம். ''ஈமு கோழி விவகாரம்தானே... இன்ஸ்பெக்டர் செல்வத்தைத்தான் அதை விசாரிக்க சொன்னேன். அவருக்கு முழு விவரங்களும் தெரியும். அவருகிட்ட கேளுங்க'' என்று சொல்லி செல்வத்தின் நம்பரைக் கொடுத்தார்.

இன்ஸ்பெக்டர் செல்வத்தைத் தொடர்பு கொண்டு விவரம் கேட்டோம். ''புகாரின் அடிப்படையில் கார்த்திக் சங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர் தலைமறைவாகி விட்டதால் தனிப் படை அமைத்துத் தேடி வருகிறோம். ஈமு கோழியை நம்பி ஏமாற வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியரும், காவல் துறையும் பல முறை எச்சரித்து இருக்கிறோம். ஆனாலும் பணத்துக்கு ஆசைப்பட்டு மக்கள் ஏமாந்துகொண்டேதான் இருக்கிறார்கள். ஈமு கோழியை நம்பி ஏமாந்தவர்கள் யாராக இருந்தாலும் புகார் கொடுத்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம்'' என்று உறுதியாக சொன்னார்.

அரசு ஈமு விஷயத்தில் இனியும் மௌனம் சாதிப்பது நல்லது அல்ல!

- ம.சபரி, படங்கள்: க.ரமேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு