Published:Updated:

இந்திய அஞ்சல் வரலாறு

தமிழ்நாடு: ஒரு கண்ணோட்டம் ஜூ.வி. நூலகம்

பிரீமியம் ஸ்டோரி

முனைவர் க.இராமச்சந்திரன், இமயா பதிப்பகம், 6/11 இராமகிருஷ்ணா தெரு, நேரு நகர்,

குரோம்பேட்டை, சென்னை - 44. விலை

இந்திய அஞ்சல் வரலாறு

150  

##~##

ன்று காற்றில் தகவல் பரிமாற்றங்கள் நடக்கின்றன. ஆரம்ப காலத்தில் கட்டை வண்டிகளில் மாடுகளைப் பூட்டி தபால்களை எடுத்துச் சென்றார்கள். அப்புறமாய் குதிரை வண்டிகள். இந்திய ரயில்வே துறை வளர வளர, தபால் துறையும் வளர்ந்தது. இன்று செல்போன், இ-மெயில் வந்த பிறகு தகவல் பரிமாற்றம் ஒரு நொடிக்குள் சுருங்கிவிட்டது. ஆனால் ஒரு கடிதத்துக்காகக் காத்திருந்து, காத்திருந்து... அது கையில் கிடைத்ததும் கண்ணில் ஒத்திப் படித்து, பத்திரமாய் வைத்துக்கொள்வதில் இருந்த பந்தம் இப்போது எந்த மெயிலுக்காவது கிடைக்கிறதா? இல்லை என்பவர்களே நிறைய. அத்தகைய நெகிழ்ச்சி தந்த தபால் துறையின் கதை இது!

1712-ம் ஆண்டுதான் இந்தியாவுக்குள் அஞ்சல் முறை வந்தது. கிழக்கிந்தியக் கம்பெனி தன்னுடைய அதிகார விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகத்தான் ரயில்வே சேவையையும் தபால் சேவையையும் ஏற்படுத்திக் கொடுத்தார்கள். 1766-ம் ஆண்டு ராபர்ட் கிளைவ் சென்னையில் சோதனை முறையில் ஒரு தபால் நிலையத்தைத் தொடங்கினார். கம்பெனி அதிகாரிகள் அரசாங்கக் கோப்புகளுடன் தங்களின் சொந்தக் கடிதங்களையும் அதில் அனுப்பலாம் என்று அனுமதித்தார். இதைத் தொடர்ந்து 1786-ம்

இந்திய அஞ்சல் வரலாறு

ஆண்டு சென்னையில் முதல் பொது அஞ்சல் நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. இப்படிப்பட்ட வரலாற்றுத் தரவுகளைத் திரட்டிக் கொடுத்திருக்கும் இராமச்சந்திரன், புத்தகம் முழுவதுமே சுவாரஸ்யமான தகவல்களால் நிரப்பியுள்ளார்.

முந்தையக் காலத்தில் புறா மூலமாகத் தகவல் அனுப்பியதாகக் கேள்விப்பட்டுள்ளோம். அதை உறுதிப்படுத்துவதற்காக 1931-ம் ஆண்டு அசன்சாலியில் இருந்து கொல்கத்தாவுக்கு 42 புறாக்கள் பறக்கவிடப்பட்டன. இவை மூன்று மணி நேரத்தில் 132 மைல் தூரத்தைக் கடந்தது. 'முதல் புறாக் கடிதம்’ என்று இதற்குப் பெயர். அஞ்சல் பெட்டிக்கு சிவப்பு நிறத்தைக் கொடுத்ததும் இங்கிலாந்துதான். அதையே அனைத்து நாடுகளும் பின்பற்றின.

'பனியோ, மழையோ, வெப்பமோ, இரவின் மந்தமோ இந்த அஞ்சல் தூதர்களை தமது கடமையைச் செய்வதில் இருந்து தடுப்பது இல்லை’ என்ற ஹைரோடோடஸின் வரிகள் நியூயார்க் நகர அஞ்சலகத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது. அது உண்மைதான் என்பதை ஒவ்வொருவரும் உணரும் அளவுக்கு, அவரவர் வாழ்க்கையில் ஓர் அஞ்சல்காரர் நிச்சயம் இருப்பார். மிகமிகப் பின்தங்கிய கிராமப்புறங்களில் இப்போதும் இருப்பார்கள். கரை கடந்த மகனின் எண்ணத்தை, கைப்பிடிக்கப் போகும் காதலியின் இதயத்தை, தூக்கு மேடையில் நின்ற ஒருவனின் உயிரைக் காப்பாற்ற.... என அஞ்சல்காரர்கள் கடவுளின் தூதர்களாகச் செயல்பட்டு வருவதை இந்தப் புத்தகம் நன்றியோடு நினைவுகூர்கிறது!

- புத்தகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு