Published:Updated:

போலீஸ் பிடியில் 'விண்ட் மில்' ராமச்சந்திரன்!

போலீஸ் பிடியில் 'விண்ட் மில்' ராமச்சந்திரன்!

பிரீமியம் ஸ்டோரி
##~##

காற்றாலை மின் திட்டத்தில் கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்துஇருக்கும் தொழில் அதிபர்களை மிரட்டிப் பணம் பறிக்கும் ராமச்சந்திரனைப் பற்றி 29.4.2012 தேதியிட்ட ஜூ.வி. இதழில்,  'காற்றாலை அதிபர்களுக்கு 'கப்ப’ மிரட்டல்!’ என்று பதிவு செய்திருந்தோம். 

கடந்த 17 வருடங்களாக தென் மாவட்டங்களில் தொழில் செய்யும் விண்ட் மில் அதிபர்களைப் பாடாய்ப்படுத்திய ராமச்சந்திரனைப் பிடிக்க பல தனிப்படைகள் அமைக்கப்பட்டும், அவரது வசிப்பிடத்தைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. நெல்லை மாவட்டம் ஆவரைக்குளம் என்ற கிராமம் சொந்த ஊராக இருந்த போதிலும், சென்னை, மும்பை, கொல்கத்தா என அடிக்கடி இடத்தை

போலீஸ் பிடியில் 'விண்ட் மில்' ராமச்சந்திரன்!

மாற்றிக்கொண்டே இருந்த ராமச்சந்திரன், கடந்த ஜூலை 26-ம் தேதி நெல்லை மாவட்ட போலீஸாரிடம் சிக்கினார்.

ராமச்சந்திரனைக் கைது செய்த வள்ளியூர் டி.எஸ்.பி. ஸ்டான்லி ஜோன்ஸிடம் பேசினோம். ''விண்ட் மில் அதிபர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவன், ராமச்சந்திரன். நாட்டின் ஏதாவது ஒரு மூலையில் இருந்து கொண்டு விண்ட் மில் அதிபர்களை செல்போனில் தொடர்பு கொண்டு, 'அவசரமாப் பணம் தேவைப்படுது... 30 லட்சம் ரூபாயை நான் அனுப்புற ஆளிடம் கொடுத்துடு’னு சொல்லிட்டுப் போனை வச்சிடுவான். அவன் கேட்டபடி பணத்தைக் கொடுக்கலைன்னா, அந்த நிறுவனத்தின் காற்றாடிகளுக்கு அவனோட ஆட்கள் தீ வச்சிடுவாங்க. அதில் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு விடும் என்பதால் பலரும் அவனுக்குப் பயந்து 'மாமூல்’ கொடுத்திருக்காங்க.

கடந்த மூணு மாசத்துக்கு முன், ஞானதிரவியம் என்பவரிடம் 20 லட்சம்

போலீஸ் பிடியில் 'விண்ட் மில்' ராமச்சந்திரன்!

ரூபாய் கேட்டு மிரட்டியிருக்கான். அவர் கொடுக்க மறுத்ததால், அவரோட சில காற்றாலைகளின் நட்டுகளைக் கழற்றி விட்டுட்டான். சரியான நேரத்தில் அதைக் கண்டுபிடித்து விட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. அவர் போலீஸில் புகார் செஞ்சதும் ராமச்சந்திரனைத் தீவிரமாகத் தேடினோம். உடனே அவன் தலைமறைவு ஆயிட்டான்.

ஆனாலும், அவனோட கூட்டாளிகள் மூலக்கரைப்பட்டி பெரியதுரை, தெய்வ நாயகபேரி ஆறுமுகம், ஆவரைக்குளம் இளங்கோ, பிரபு ஆகியோரைக் கைது செய்தோம். அவங்க பிடிபட்டதும் அவனுக்குக் கை ஒடிஞ்ச மாதிரி ஆயிடுச்சு. இப்போ பணத்தேவை ஏற்பட்டதும் விண்ட் மில் அதிபர்களை மிரட்டினான். ஆனால், அவனுடைய கோஷ்டி ஆட்கள் யாரும் இல்லாததால், அவனே நேரில் வரவும் மடக்கிப் பிடித்து விட்டோம்'' என்றார் பெருமிதத்துடன்.

கைது செய்யப்பட்ட ராமச்சந்திரனுக்கு 57 வயது. இவர் மீது 24 வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. வள்ளியூர் நீதிமன்றத்தில் ராமச்சந்திரனை போலீஸார் ஆஜர்படுத்தியபோது மாஜிஸ்திரேட்டிடம், ''கடந்த ரெண்டு வருசமா நான் உள்ளூரிலேயே இல்லை. எனக்குப் பல நோய்கள் இருப்பதால் மும்பை ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச் சை எடுத்தேன். உள்ளூருக்குச் சொந்த விஷயமா வந்தபோது என் மீது பொய் வழக்குப் பதிவு செஞ்சு கைது செஞ்சுட்டாங்க'' என்று அப்பாவியாகச் சொல்லித் தப்பிக்கப் பார்த்தாராம்.

இனியாவது, காற்றாலை நிம்மதியாகச் சுழலட்டும்!

- ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு