Published:Updated:

கண்மாய்க்குள் பங்களா... பொது பாதையில் சேம்பர்!

ஆக்கிரமிப்பு சர்ச்சையில் அமைச்சர் கோகுல இந்திரா

கண்மாய்க்குள் பங்களா... பொது பாதையில் சேம்பர்!

ஆக்கிரமிப்பு சர்ச்சையில் அமைச்சர் கோகுல இந்திரா

Published:Updated:
##~##

முன்னாள் தி.மு.க. அமைச்சர்களை வேட்டை யாடி ஓய்ந்திருக்கும் நில அபகரிப்பு விவ காரம், இப்போது தமிழக அரசின் சுற்றுலாத் துறை அமைச்சர் கோகுல இந்திரா மீது பாய்ந்து இருக்கிறது! 

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை அடுத்துள்ள கே.வைரவன்பட்டியில் கோகுல இந்திராவின் வீடு இருக்கிறது. இதன் அருகே இருக்கும் மறவனேந்தல் கண்மாய் புறம்போக்கில் 20 சென்ட் இடத்தை ஆக்கிரமித்து கோகுல இந்திரா பங்களா கட்டி இருப்பதாகப் புகார் கிளப்பி இருக்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த கமால் முகமது. இந்த பங்களாவை ஒட்டியே சுமார் 9.5 ஏக்கரில் செங்கல் சேம்பர் நடத்துகிறார் கோகுல இந்திராவின் கணவர் சந்திரசேகர். அவரும் தன்னுடைய 11 சென்ட் இடத்தை சேம்பருக்கு ஆக்கிரமித்து இருப்பதாகச் சொல்லி நீதிமன்றப் படி ஏறி இருக்கிறார் கமால் முகமது.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கண்மாய்க்குள் பங்களா... பொது பாதையில் சேம்பர்!

கமால் முகமதுவைச் சந்தித்துப் பேசினோம். ''கே.வைரவன்பட்டியில் எங்க அம்மா பேரில் 92 சென்ட்

கண்மாய்க்குள் பங்களா... பொது பாதையில் சேம்பர்!

நிலம் இருந்துச்சு. அந்த இடத்தை ஒட்டி பொதுப் பாதை அமைக்கிறதுக்காக நான் 1970-லேயே ஆறு சென்ட் இடத்தை கிராமத் தலைவருக்குப் பத்திரம் பதிஞ்சு கொடுத்தேன். பிற்பாடு கூடுதலா ஐந்து சென்ட் தேவை என்று சொன்னதால் அதையும் விட்டுக்கொடுத்தேன். பாதைக்கு வலது பக்கம் எங்க இடம். இடது பக்கம் இருந்த இடத்தை செங்கல் சேம்பர் வைக்கிறதுக்காக கோகுல இந்திராவின் கணவர் சந்திரசேகர் 15 வருஷத்துக்கு முந்தி கிரையம் செய்தார்.

அந்த சமயத்துல, 'சொத்தை எங்களுக்கு வித்து ருங்க’னு அமைச்சர் தரப்புல இருந்து நெருக்கடி குடுத்தாங்க. நான் மறுத்துட்டேன். நாங்க பாதைக்காக விட்டுக்கொடுத்த இடம் செங்கல் சேம்பருக்குள் போயிட்டதால, இப்ப எங்களோட இடத்துக்குள்ள பாதை வந்து மேற்கொண்டு 15 சென்ட் இடத்தை நாங்க இழந்துட்டோம். கோகுல இந்திரா கண்மாயை ஆக்கிரமிச்சு வீடு கட்டி இருப்பதையும் பொதுப் பாதையை ஆக்கிரமித்து இருப்பதையும் கலெக்டரிடம் 2008-லேயே புகாராகக் கொடுத்தேன். முதலில் விசாரிச்ச தாசில்தார் சசிகலா, 'இதுக்கு எந்த ஆதாரமும் இல்லை’னு ரிப்போர்ட் கொடுத்தாங்க. உடனே கலெக்டரிடம் முறையிட்டேன். மறுபடியும் சர்வேயரை வெச்சு

கண்மாய்க்குள் பங்களா... பொது பாதையில் சேம்பர்!

அளந்ததுல, 'கண்மாயில் 20 சென்ட்டை ஆக்கிரமிச்சு சந்திரசேகர் வீடு கட்டி இருக்கிறார். அதை அப்புறப்படுத்தும்படி நோட்டீஸ் சார்பு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’னு எனக்கு திருப்பத்தூர் தாசில்தார் 19.5.10-ல் பதில் கொடுத்தார். ஆனாலும் நடவடிக்கை இல்லை.

அப்போது கே.ஆர்.பெரியகருப்பன் அமைச்சராக இருந்தார். அதனால் சாதி செல்வாக்கை வெச்சு மேல் நடவடிக்கை இல்லாத படிக்கு பாத்துக்கிட்டாங்க கோகுல இந்திரா. இடையில ரெண்டு வருஷம் எனக்கு உடல்நிலை பாதிச்சதால பேசாம இருந் துட்டேன். இனியும் மௌனமா இருந்தா காரியம் நடக்காதுன்னுதான் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குப் போட்டுட்டேன். சிவகங்கை கலெக்டர், டி.ஆர்.ஓ., தேவகோட்டை ஆர்.டி.ஓ., திருப்பத்தூர் தாசில்தார், கோகுல இந்திரா, அவரோட கணவர் சந்திரசேகர்

கண்மாய்க்குள் பங்களா... பொது பாதையில் சேம்பர்!

உள்ளிட்டவர்களையும் வழக்கில் சேர்த்திருக்கிறேன். நில அபகரிப்பு வழக்குகள் மூலம் ஊருக்கெல்லாம் நியாயம் சொல்லும் முதல்வர், தன்னோட அமைச்சர் செய்திருக்கும் நில ஆக்கிரமிப்புக்கு என்ன தீர்ப்பு சொல்றாங்கன்னு பார்ப்போம்'' என்றார்.

நம்மை ஸ்பாட்டுக்கே அழைத்து பிரச்னையை விளக்கிய அமைச்சர் கோகுல இந்திராவின் கணவர் சந்திரசேகர், ''நாங்கள் சேம்பர் மற்றும் வீடு கட்டி இருக்கும் இடம் எங்களது சின்ன தாத்தாவிடம் இருந்து வாங்கியது. இந்த இடம் 60 வருடங்களுக்கு முன்பு என்ன நிலையில் இருந்ததோ, அதில் இருந்து ஒரு அடிகூட மாற்றமில்லாமல்தான் இருக்குது. இதில் எங்கிருந்து ஆக்கிரமிப்பு வந்ததுன்னு தெரியல. 2000-ம் ஆண்டு வரை கமால் முகமது எங்களோடு சுமுகமாகத்தான் இருந்தார். போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்ததால், அவரது இடத்தில் இருந்த கருவேல முள்ளை வெட்டினாங்க. அதை நான் சொல்லித்தான் செஞ்சதா நினைச்சுக்கிட்டு கோபம் ஆகிவிட்டார்.

கார்களை பார்க்கிங் பண்றதுக்காக வீட்டுக்கு எதிர்ல ரோட்டோரமாய் இருந்த கண்மாய் பள்ளத்தில் மண்ணைக் கொட்டி மேடாக்கி வெச்சிருக்கோம். அதில் டபுள் ரோடு போட்டா தன்னோட இடத்துக்கு ஆபத்துனு அவராவே கற்பனை பண்ணிக்கிட்டாரோ, என்னவோ... 2010-ல் 'ஆக்கிரமிப்பில் உள்ள வற்றை அப்புறப்படுத்தணும்’னு எங்களுக்கு ஒரு நோட்டீஸ் வந்தப்ப, 'நாங்கள் எந்த ஆக்கிரமிப்பும் செய்யலை’னு முறையா பதில் கொடுத்துட்டோம். இப்போதும் நாங்கள் உரிய ஆவணங்களை கோர்ட்டில் சமர்ப்பித்து வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம்'' என்றார்.

ஹை கோர்ட்டும் 'அம்மா’ கோர்ட்டும் என்ன சொல்லப்போகிறதோ?

  - குள.சண்முகசுந்தரம்

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி,   எஸ்.சாய் தர்மராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism