Published:Updated:

வானில் பறக்கும் புள்ளெலாம்...

வானில் பறக்கும் புள்ளெலாம்...

வானில் பறக்கும் புள்ளெலாம்...

வானில் பறக்கும் புள்ளெலாம்...

Published:Updated:

சு.தியடோர் பாஸ்கரன், உயிர்மை பதிப்பகம், 11/29 சுப்பிரமணியம் தெரு,

அபிராமபுரம், சென்னை-18. விலை

வானில் பறக்கும் புள்ளெலாம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

115

##~##

'மனிதர்கள் இல்லாமல் இவ்வுலகு இருக்கலாம். ஆனால் பறவைகள் இல்லாமல் இருக்க முடியாது’ என்ற பறவையியல் அறிஞர் சலீம் அலியின் வார்த்தை களை வழிமொழியும் தியடோர் பாஸ்கரன், 'இந்த உலகம் பூச்சிகளின் உலகம்தான். அதில் மனிதரும் வசிக்கின்றனர். பூச்சிகள் இல்லை என்றால், காய்கறிகள், பயிர்கள் இல்லையே. மகரந்தச் சேர்க்கை எப்படி நடைபெறும்? நதிகள் உற்பத்தியாகும் காடுகள் பரவுமா?

ஆனால் பூச்சி என்றவுடன் பாரம்பர்யமாக நமக்கு அருவருப்புதான். பட்டாம் பூச்சியைத் தவிர மற்ற பூச்சிகளை நாம் போற்றுவதில்லை. தரையில் ஊறுவதைக் கண்டாலே அடித்து நசுக்கத்தான் முயல்கிறோம். உண்மையில் பூச்சிகள் இருப்பது சுற்றுச்சூழல் நன்றாக இருக்கிறது என்பதற்கு ஒரு சான்று’ என்று எழுதுகிறார். இந்த நூற்றாண்டின் இசங்களிலேயே சுற்றுச்சூழலுக்குத் தீமை பயப்பது

வானில் பறக்கும் புள்ளெலாம்...

டூரிஸம்தான் என்பது இவரது பகிரங்கமான குற்றச்சாட்டு. காடுகளைப் பராமரிப்பது இயற்கை மீதான ஆர்வத்துக்காக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர சுற்றுலா லாபங்களுக்காக அல்ல என்கிறார்.

காடுகளை வளமான மூலதனமாகப் பார்த்தது பிரிட்டிஷ் அரசுதான். நாடெங்கும் ரயில் பாதைகள் அமைப்பதற்காக மரங்களை வெட்டிப் பயன்படுத்தினார்கள். அவர்கள்தான், ஓரளவாவது காடுகளைப் பாதுகாக்கும் சட்டங்களையும் இயற்றினார் கள். சுதந்திர இந்தியாவில் அந்தச் சட்டத்தைக் கடுமையாக்கி... காட்டுப் பகுதியில் வாழும் மக்களை அங்கேயே அன்னியமாக வாழக் கட்டாயப்படுத்தினார்கள். இப்போது அங்கிருந்து மொத்தமாகத் துடைத்தெறியும் பெரும் யுத்தம் வடகிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் காலம் காலமாக காடுகளில் விலங்குகளோடு மனிதர்களும் வாழ்ந்து வந்ததற்கு ஏராளமான உதாரணங்களை தியடோர் பாஸ்கரன் காட்டுகிறார். அவர்களைத் துரத்தும் அரசியலையும் அடையாளம் காட்டுகிறார்.

'தமிழர்களைப் போல இயற்கையைப் போற்றிய வர்களும் இல்லை. தமிழர்களைப் போல இயற்கையை மறந்தவர்களும் இல்லை. தேவைக்கு இயற்கையைப் பயன்படுத்தாமல் பேராசைக்கு இயற்கையைச் சுரண்ட ஆரம்பித்த பிறகுதான், மனிதன் உணவைக் கொஞ்ச மாகவும் மாத்திரைகளை அதிகமாகவும் எடுத்துக்கொள்ள வேண்டியதாகிவிட்டது. மரம் என்பது மனிதனைப் போல பூமிக்கு பாரமான உயிர் அல்ல. தன் ஒவ்வோர் உறுப்பாலும் இந்த பூமியை ஜீவனோடு வைத்திருக்க உதவும் கருப்பொருள். பறவைகளும் விலங்குகளும் இன்னும் ஒவ்வோர் உயிரினமும் அப்படித்தான்’ என்பதை உயிரினங்களின் அழகியலுடன் தியடோர் பாஸ்கரன் சொல்லும்போது படிக்கவே சுவாரஸ்யமாய் இருக்கிறது. இந்த ஆர்வத்தை பள்ளிப் பருவத்தில் இருந்தே அனைவருக்கும் ஊட்ட வேண்டும் என்பதும் இவரது கோரிக்கை.

சக உயிரினங்கள் மீது அன்பு வேண்டும் என்பதை அழகாய்ச் சொல்லும் புத்தகம்!

- புத்தகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism