Published:Updated:

நித்தியின் பாதையில் போதானந்தா!

செக்ஸ் தப்பு செய்தாரா சீடர்?

நித்தியின் பாதையில் போதானந்தா!

செக்ஸ் தப்பு செய்தாரா சீடர்?

Published:Updated:
##~##

'நான் சிவன்... நீ பார்வதி. நாம் ஒன்று சேர்ந்தால்தான் ஜீவன் முக்தி அடைய முடியும் என்று சொல்லித்தான் நித்தி என்னை படுக்கையில் சாய்த்தார்’ என்று வாக்குமூலத்தில் சொல்லி இருந்தார் ஆர்த்தி ராவ். இப்போது நித்தியின் ஸ்டைலிலேயே அவரது சீடர் ஒருவரும் சிவன், பார்வதி கதையைச் சொல்லி மும்பை பெண் ஒருவரை வீழ்த்தியதாக ஒரு கதை அம்பலத்துக்கு வந்திருக் கிறது. 

நித்தியானந்தரின் பப்ளிகேஷன் டிபார்ட் மென்ட்டில் இருந்தவர் ஸ்ரீநித்திய தத்துவ போதானந்தா. மருத்துவம் படித்திருந்த இவரின் இயற்பெயர் விக்ரம் டிராவிட். ஆசிரமத்துக்கு வந்த பிறகு தத்துவ போதானந் தாவாக மாறினார். அவர் மீது மும்பையில் உள்ள கோலபா காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார், 32 வயதாகும் வெளிநாடு வாழ் இந்தியப் பெண்மணி ஒருவர். மும்பையைச் சேர்ந்த நீதிபதி ஒருவரின் மகளாம். அவர் கொடுத்திருக்கும் புகாரில், ''நான் நித்தியானந்தாவின் தீவிரமான பக்தை. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஆசிரமத்துக்கு அடிக்கடி செல்வேன். அங்கேதான் தத்துவ போதானந்தா அறிமுகம் கிடைத்தது. 'ஜீவன் முக்தி அடைவதற்கு எளிமையான வழிகள் இருக்கின்றன. நீ விரும்பினால் அதை உனக்குக் கற்றுத்தருகிறேன்’ என்று சொன்னார். நானும் அவரது பேச்சைக் கேட்க ஆரம்பித்தேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நித்தியின் பாதையில் போதானந்தா!
நித்தியின் பாதையில் போதானந்தா!

ஒரு நாள் தனிமையில் ஜீவன் முக்தி தொடர்பாகப் பேசிக் கொண் டிருந்த நேரத்தில், 'நான் இப்போது சிவனாக மாறப் போகிறேன். நீ பார்வதியாக மாறிவிடு’ என்று சொல்லிக் கொண்டே என் மீது கை வைத்தார். நான் தடுக்க முயற்சித்தபோது, 'சிவனும் பார்வதியும் சேர்வதில் என்ன தப்பு?’ என்று சொல்லி என்னை வீழ்த்திவிட்டார். பல நாட்கள் எனக்கு போதை பானங்களைக் கொடுத்து உறவுகொண்டார். இப்படியே இரண்டு வருடங்கள், சிவன் - பார்வதி கதையைச் சொல்லியே என்னைப் பல முறை பலாத்காரம் செய்தார். என் பெயரோ, புகைப்படமோ வெளியில் வந்தால் என் எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்படும்'' என்று அந்தப் புகாரில் சொல்லி இருக்கிறார்.

இதைத் தொடர்ந்து தத்துவ போதானந்தாவை மும்பை போலீஸ் கைது செய்தது. போலீஸ் கஸ்டடியில் இருக்கிறார். நித்தி காட்டிய வழியில் இன்னும் எத்தனை சீடர்கள் கிளம்பி இருக்கிறார்களோ?

- கே.ராஜாதிருவேங்கடம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism