Published:Updated:

ஈழத்தமிழர் காவியம்!

படைக்கிறார் வைரமுத்து

ஈழத்தமிழர் காவியம்!

படைக்கிறார் வைரமுத்து

Published:Updated:
##~##

வைரமுத்துவுக்கு சொந்த மண்ணின் பாசம் எப்போதும் அதிகம். அதை உணர்த் தும் விழா சமீபத்தில் நடந்தது! 

ஆனந்த விகடனில் தொடராக வந்து நூல் வடிவம் பெற்ற 'மூன்றாம் உலகப் போர்’ நூலில் கையப்பம் இடும் விழா, நூல் திறனாய்வு விழா, 'கவிஞர் வைரமுத்து கல்வி அறக் கட்டளை’யின் மூலம் நிதி வழங்கும் விழா என்று மூன்றும் இணைந்த இனிய நிகழ்வு கடந்த 4-ம் தேதி தேனியில்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நூலைத் திறனாய்வு செய்த வைரமுத்துவின் மகன் கபிலன், ''இதுவரை எத்தனையோ இலக்கியங்கள், கவிதைகள், நூல்கள் படைத்த என் தந்தைக்கு  இந்த விழா மூலம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். அவர் ஈழத் தமிழர்களின் அவலம்குறித்து ஒரு காவியம் எழுத வேண்டும். அதுவே அவர்களின் பிரச்னைகளை உலகுக்கு உணர்த்து வதாக அமைய வேண்டும்'' என்று கோரிக்கைவைத்தார்.

ஈழத்தமிழர் காவியம்!

அடுத்துப் பேசிய கம்பம் செல் வேந்திரன், ''ஒரு இலக்கியம் அ-வில் ஆரம்பித்து ன-வில் முடிகிறது என்றால் ஒன்று திருக்குறள்; மற்றொன்று, மூன்றாம் உலகப் போர். இது கவிஞரின் 36-வது நூல். புத்தகமாக வெளி வந்த மூன்று மாத காலத்துக்குள் மூன்று பதிப்புகளைக் கண்டுவிட்டது. கபிலன் வைத்த கோரிக்கையை நினைவில் வைத்து, ஈழத் தமிழர் காவியம் படையுங்கள்'' என்று தன் பங்குக்கும் வேண்டுகோள் வைத்தார்.

பாரதிராஜாவின் புதிய படத்துக்கான தொடக்க விழாவுக்கு வந்தபோது, வைரமுத்து ஒரு வாக் குறுதி கொடுத்தார். அதனை நிறைவேற்றும் முகமாக பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மூன்று மாணவர்கள் மற்றும் மூன்று மாணவிகளுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் வீதம் கல்வி உதவித் தொகை வழங்கி விட்டு மைக் பிடித்தார் வைரமுத்து. ''எத்தனையோ மேடைகள் ஏறி இருக்கிறேன். எவ்வளவோ புகழ்..., சந்தோஷங்கள் இருந்தாலும், சிறிய கல்வி உதவித் தொகையை இந்த ஏழை மாணவர்களுக்கு வழங்கியபோது, அவர்களின் கண்களில் தெரிந்த, வழிந்த நன்றியை பார்க்கும்போது நான் பிறந்த பலனை அடைந்துவிட்டதாக உணர்கிறேன். என் மனம் முழுவதும் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறது. இது ஒரு சிறிய தொடக்கமே. இனி, இது அடுத்த ஆண்டு ஒரு கோடி ரூபாயாக உயர வேண்டும். இருப்பவர்கள், உங்களிடம் இருப்பதை இல்லாதவர்களிடம் கொடுத்துப் பாருங்கள். அதில் அவர்கள் அடையும் மகிழ்ச்சியில் நீங்களும் மகிழலாம். அதை நான் இங்கு உணர்கிறேன்.

எல்லோரும் மகனிடம்தான் வேண்டுகோள் வைப்பார்கள். ஆனால், என் மகன் என்னிடம் வேண்டுகோள் வைத்து இருக் கிறான். நிச்சயமாக, ஈழத் தமிழர் அவலம்குறித்து காவியம் எழுதாமல் நான் போக மாட்டேன்'' என்று முடித்தபோது அரங்கம் கைத்தட்டலால் அதிர்ந்தது!

- சண்.சரவணக்குமார்

படம்: வீ.சக்தி அருணகிரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism