Published:Updated:

நெல்லைக்கு மதுரை எஸ்.எம்.எஸ்.!

நெல்லைக்கு மதுரை எஸ்.எம்.எஸ்.!

நெல்லைக்கு மதுரை எஸ்.எம்.எஸ்.!

நெல்லைக்கு மதுரை எஸ்.எம்.எஸ்.!

Published:Updated:
##~##

'ஸ்வாமி... ஒரே ஒரு சிம்மாசனத்தில் நீங்கள் மட்டும் அமர்ந்திருக்க... அந்தக் கம்பீரத்தோடு தங்களை வணங்க நான் விரும்புகிறேன். சொக்கநாதர் அருள்புரிவார்’ என்று, மதுரை ஆதீன மீட்புக் குழுவின் தலைவர் நெல்லை கண்ணன் அனுப்பிய ஒரு குறுந்தகவலுக்கு, 'ஆசீர்வாதம், நெல்லை கண்ணன். எல்லாம் நாம் விரும்புகிறபடி சிவபெருமான் அருளால் நல்லபடியே நடக்கும்’ என்று மதுரை ஆதீனத்திடம் இருந்து பதில் தகவல் பறந்து வந்திருக்கிறது. 

நித்தியானந்தாவை இளைய மடாதிபதியாக நியமித்த விஷயத்தில் மதுரை ஆதீனம் கொஞ்சம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நெல்லைக்கு மதுரை எஸ்.எம்.எஸ்.!

கொஞ்சமாக மனமாற்றம் அடைந்து வருவதைப்பற்றி நாம் தொடர்ந்து எழுதி வருகிறோம். நித்தியானந்தா நியமனத்துக்குக் கண்டனக் குரல் எழுப்பிய சைவ ஆதீனங்களை  சந்தித்து விட்டு வந்திருக்கிறார் மதுரை ஆதீனம். கடந்த 6-ம் தேதி, கும்பகோணம் அருகில் உள்ள திருப்புரம்பியம் சாட்சிநாதர் கோயிலுக்கு ஆதீனம் செல்வதாகத் திட்டம். அவருடைய மனம் ஊசலாட்டத்தில் இருப்பதைத் தெரிந்துகொண்ட திருப்பனந்தாள் காசி திருமடத்து அதிபர் காசிவாசி முத்துக்குமார சுவாமி தம்பிரான், 'சந்நிதானத்தை தரிசனம் செய்ய திருப்புரம்பியம்

நெல்லைக்கு மதுரை எஸ்.எம்.எஸ்.!

வரலாமா?’ எனத் தூதுஅனுப்ப... 'அனுமதி கேட்டுத்தான் வரணுமா... தாராளமாக வரச் சொல்லுங்கள்’ என்று உற்சாகம் ஆனாராம் ஆதீனம். இதையடுத்தே, தம்பிரானும் ஆதீனமும் திருப்புரம்பியத்தில் சந்தித்து மனம்விட்டுப் பேசினர்.

முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகளிடம் பேசியபோது, ''ஆதீனத்தின் எண்ண ஓட்டத்தில் மாற்றம் தெரிகிறது. 'நித்தியானந்தர் நியமனத்தில் அவசரப்பட்டுட்டேன். அவரைத் திருத்தி நெறிப்படுத்த முயற்சி செய்கிறேன்’னு சொன்னார். முடிவை மாத்திக்கணும்கிற எண்ணம் அவருக்கு இருக்கு. அதே நேரத்துல, மாத்த முடியுமாங்கிற பயமும் இருக்கு.'' என்று நம்மிடம் சொன்னார். இந்தநிலையில்தான், நெல்லை கண்ணனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறார் ஆதீனம்.

இதுகுறித்து, நெல்லை கண்ணனிடம் பேசினோம். ''சுவாமி ஊசலாட்டத்தில் இருக்கிறார்னு தெரிஞ்சுதான் குறுந்தகவல் அனுப்பினேன். அதுக்கு உடனே பதில் கொடுத்தார். உற்சாகப்பட்டு அவரோடு அலைபேசியில் பேசினேன். 'எதுக்கும் பயப்படாதீங்க சாமி. நாங்க ஆயிரம் பேரோட மடத்துக்குள்ள வர்றோம். தள்ளி நில்லுங்கடா... எங்க சாமியை நாங்க பாத்துக்கிறோம்னு சொல்லி நித்தியானந்தாவின் ஆட்களை வெளியேத்திடுறோம். அப்புறம் எந்தக் கொம்பன் உள்ளே வர்றான்னு பார்ப் போம். நாங்க இதைச் செய்யணும்னா... நீங்க உறுதியான தெளிவான முடிவை உடனே அறிவிக்கணும்’னு சொன்னேன். 'பொறுங்க நெல்லை கண்ணன்... நிதானமா முடிவு எடுப்போம்’னு சொல்லி பேச்சை முடிச்சுக் கிட்டார். நித்தியானந்தா குரூப்பை விட்டு வெளியில் வர முடியாதபடிக்கு ஆதீனம் பயத்துல இருப்பது தெரியுது.'' என்றார்.

விரைவில் மடத்தில் ஸ்பெஷல் பிரஸ்மீட் அறிவிப்பு வரலாம்!

  - குள.சண்முகசுந்தரம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism