Published:Updated:

தலைமைச் செயலகம்... மருத்துவமனை ஆகுமா?

பசுமை தீர்ப்பாயத்தில் புதிய சிக்கல்!

தலைமைச் செயலகம்... மருத்துவமனை ஆகுமா?

பசுமை தீர்ப்பாயத்தில் புதிய சிக்கல்!

Published:Updated:

ருணாநிதி கட்டிய புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகத்தை பல்நோக்கு நவீன சிறப்பு சிகிச்சை மருத்துவமனையாக மாற்றும் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது, டெல்லி பசுமைத் தீர்ப்பாயம். சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரச்னையைக் கிளப்பிய வழக்கறிஞர் வீரமணிதான் இங்கேயும் மனு போட்டு, தமிழக அரசுக்குக் கிடுக்கிப்பிடி போட்டு உள்ளார்.

தலைமைச் செயலகம்... மருத்துவமனை ஆகுமா?
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஓமந்தூரார் வளாகத்தில் ஏ-பிளாக் மற்றும் பி-பிளாக் என்று  கட்டடப்பட்டு, அவை புதிய தலைமைச் செயல​கமாக முந்தைய தி.மு.க. ஆட்சியில் முதல்வர் கருணாநிதியால் அமைக்கப்பட்டது. 2008-ல் கட்டுவதற்குத் திட்டமிட்டு 2010-ல் கட்ட​டத்தின் ஒரு பகுதி அவசரமாக முடிக்கப்பட்டு, 2011-ல் பிரதமர் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது. இப்போது, இரண்டு கழகங்களின் கௌரவப் பிரச்னையாக இந்தக் கட்டடம் மாறிவிட்டது. இதனால் எப்படி அல்லோலப்படுகிறது என்பதை, இந்த வழக்கைத் தொடர்ந்த வீரமணி சார்பில் டெல்லி வழக்கறிஞர் ஆர்.நெடுமாறன் தனது மனுவில் விவரமாக விளக்குகிறார். ''சட்டப்பேரவை மற்றும் அரசு அலுவலகங்களுக்கு என்று அனுமதி பெற்றுவிட்டு, இதை மருத்துவமனையாக உபயோகப்படுத்த முடியாது. தேசிய பசுமை மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் வேறு ஒரு வழக்கு ஒன்றில் கொடுக்கப்பட்ட தீர்ப்பில், 'சுற்றுச்சூழல் தடைநீக்கச் சான்றிதழ்களுக்கு ஏ, பி என இரண்டு வகை பிரிக்கப்பட்டுள்ளது. ஏ வகையில் உள்ள திட்டங்கள் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அதிகாரத்துக்கு

தலைமைச் செயலகம்... மருத்துவமனை ஆகுமா?

உட்பட்டதே தவிர, தமிழக அரசின் எஸ்.இ.ஐ.ஏ.ஏ. என்று சொல்லப்படும் செயல் விளைவுகள் மதிப்பீடு ஆணையத்துக்கு (State Level Environment Impact Assessment Authority) உட்பட்டு வராது. காரணம், சென்னையில் கிண்டி தேசியப் பூங்கா இருப்பதால் இதை ஒட்டி 10 கி.மீட்டருக்குள் இருக்கும் எந்தத் திட்டங்களும் மாநில அரசின் பிரிவில் வராது. இந்த ஓமத்தூரார் வளாகம் கிண்டி தேசிய பூங்காவில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளே இருப்பதால் இந்தப் புதிய கட்டடத்தை மருத்துவமனையாக மாற்ற அளிக்கப்பட்ட மாநில அரசின் மதிப்பீடு ஆணையத்தின் சுற்றுச்சூழல் தடைநீக்கச் சான்றிதழ் தவறானது'' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த விவகாரம் குறித்து டெல்லி வழக்கறிஞர் ஆர்.நெடுமாறனிடம் பேசினோம். ''மத்திய அரசு 2006-ம் ஆண்டு சுற்றுச்சூழல் அறிக்கை வெளியிட்டது. இதன்படி குறிப்பிட்ட மண்டலங்கள் மற்றும் 25 கோடி ரூபாய்க்கு மேலான மதிப்பில் கட்டப்படும் கட்டடங்களுக்கு சுற்றுச்சூழல் தடைநீக்கச் சான்றிதழ் பெற வேண்டும். எஸ்.இ.ஏ.சி. என்று சொல்லப்படும் தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய மதிப்பீட்டுக் குழுவினர் (State level Expert Appraisal Committee - SEAC)  முதலில் இந்தத் திட்டத்தின் சாதக பாதங்களை ஆய்வுநடத்தி அறிக்கை கொடுப்பார். அதன் பின்னர் எஸ்.இ.ஐ.ஏ.ஏ. என்று சொல்லப்படும் செயல் விளைவுகள் மதிப்பீடு ஆணையம் (State Level Environment Impact Assessment Authority) இந்த அறிக்கை மீது ஆய்வுநடத்தி சுற்றுச்சூழல் தடை நீக்கச் சான்றிதழ் வழங்கும். இதன்படி புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் கட்ட தமிழக அரசு முடிவு எடுக்க தமிழக அரசின் பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளர் 2008-ல் விண்ணப்பித்து இந்த தடை நீக்கச் சான்றிதழ் பெற்றார். இப்போது அதே கட்டடத்தை மருத்துவமனையாக புதிய அரசு மாற்றுகிறது. இதற்கும் சுற்றுச்சூழல் தடை நீக்கச் சான்றிதழ் பெற வேண்டும். புதிய சட்டப்பேரவைக்கு அனுமதி கேட்ட அதே பொதுப்பணித் துறையும் கூடுதலாக தமிழக அரசின் சுகாதாரத் துறையும் சேர்ந்து இந்தச் சான்றிதழ் கேட்டது. தமிழக அரசின் சுற்றுச்சூழல் அமைப்புகளான அதே எஸ்.இ.ஏ.சி-யும் எஸ்.இ.ஐ.ஏ.ஏ-வும் சேர்ந்து கடந்த 16.5.2012 அன்று தடை நீக்கச் சான்றிதழ் வழங்கியுள்ளனர். இது தவறானது. ஒரு கட்டடம் எந்தப் பயன்பாட்டுக்குக் கட்டப்பட்டதோ, அதே பயன்பாட்டுக்குத்தான் உபயோகிக்க வேண்டும். இப்போது முற்றிலும் வேறு பயன்பாடு எனும்போது தடை நீக்கச் சான்றிதழ் கொடுக்க மாநில செயல் விளைவுகள் மதிப்பீடு ஆணையத்துக்கு (எஸ்.இ.ஐ.ஏ.ஏ.) அதிகாரம் இல்லை. இதுபோன்ற கட்டடங்களுக்கு அனுமதி வழங்க மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் உண்டு. அரசுப் பணிகளுக்குக் கட்டப்படும் அறைகளுக்கும் மருத்துவமனைக்குத் தேவையான அறைகளுக்கும் நிறையவே வேறுபாடு உண்டு. அலுவலகம் என்றால் காலை தொடங்கி மாலையில் முடிந்து விடும். மருத்துவமனை என்றால் நோயுடன் 24 மணி நேரமும் இங்கே ஆட்கள் இருப்பார்கள். பயன்பாட்டின் நோக்கமே மாறும்போது, ஒரே கட்டடத்துக்கு இரண்டு வித உபயோகத்துக்கும் சுற்றுச்சூழல் சான்றிதழ் வழங்க முடியாது என்பதால் இந்த தடையில்லாச் சான்றிதழ் தவறானது'' என்றார்.

இந்த விவகாரம் கடந்த 7-ம் தேதி டெல்லி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்கு வந்தபோது தமிழக அரசின் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் குரு கிருஷ்ணகுமார், ''ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் இதே வழக்கைத் தொடர்ந்து இருப்பதால், இந்த மனுவை ஏற்றுக்கொள்ளக் கூடாது'' என்றார்.

ஆனால், வீரமணி மற்றும் நெடுமாறன் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் வில்சன், ''சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தமிழக அரசின் இடமாற்றக் கொள்கையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு. அதில், நீதிமன்றம் ஏற்கெனவே சில கருத்துக்களைச் சொல்லி இருக்கிறது. ஆனால் இங்குதான் நாங்கள் சுற்றுச்சூழல் தடை நீக்கச் சான்றிதழ் குறித்து முறையிட முடியும். உயர் நீதிமன்றத்தில் வாதாட முடியாது'' என்றார். தேசியப் பசுமைத் தீர்ப்பாய நடுவர்கள் நீதிபதி எம்.சொக்கலிங்கமும், நிபுணர் உறுப்பினர் ஆர்.நாகேந்திரனும் மனுவை ஏற்றுக்கொண்டனர். தமிழக அரசின் பொதுப்பணித் துறை மற்றும் சுகாகாரத் துறை செயலாளர்களுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளார்கள். செப்டம்பர் 27-ம் தேதி இந்த விவகாரம் மீண்டும் விசாரணைக்கு வரும் போது, பல்வேறு அதிரடிகள் அரங்கேறலாம்.

- சரோஜ் கண்பத்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism