Published:Updated:

மும்பையில் மூத்த பத்திரிகையாளர் சுட்டுக் கொலை!

மும்பை, ஜூன் 11,2011

மும்பையில் மூத்த பத்திரிகையாளர் சுட்டுக் கொலை!

மும்பையில் ஜே.தேய் (J Dey) என்ற மூத்த பத்திரிகையாளர் ஒருவர், அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.  ##~~##

'மிட் டே' (Mid Day) பத்திரிகையில் பணியாற்றி வந்த ஜே.தேய், நீண்ட காலமாக நிழல் உலக நடவடிக்கைகள் குறித்து செய்தி சேகரித்து எழுதி வந்தவர்.

சிறப்பு புலனாய்வு ஆசிரியரான அவர், நிழல் உலகம் பற்றி 'ஜீரோ டயல்' என்ற புத்தகத்தை எழுதியவர்.

குற்றப் பிண்ணனிகள் குறித்த எண்ணற்ற செய்திக் கட்டுரைகளை எழுதி வந்த அவருக்கு, அண்மைக் காலமாக எவ்வித அச்சுறுத்தலும் இருந்திருக்கவில்லை என்று போலீஸார் கூறுகின்றனர்.

ஜே. தேய் கொல்லப்பட்டது குறித்து மும்பை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.