Published:Updated:

உகாண்டா: இந்திய தொழிலதிபர் சுட்டுக் கொலை; கைதுசெய்யப்பட்ட போலீஸ்காரர் - தொடரும் விசாரணை

சுட்டுக் கொலை

இந்திய தொழிலதிபர் உகாண்டாவில் போலீஸ்காரர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

உகாண்டா: இந்திய தொழிலதிபர் சுட்டுக் கொலை; கைதுசெய்யப்பட்ட போலீஸ்காரர் - தொடரும் விசாரணை

இந்திய தொழிலதிபர் உகாண்டாவில் போலீஸ்காரர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Published:Updated:
சுட்டுக் கொலை

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில், 24 வயது இந்திய தொழிலதிபரை, 21 வயதான போலீஸ் அதிகாரியொருவர், அவரின் சொந்தக் கடையிலேயேவைத்து சுட்டுக் கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக ஊடகங்களில் வெளியான தகவலின்படி, இறந்தவரின் பெயர் குந்தாஜ் படேல் என்றும், அவர் ஹார்டுவேர் கடை (Hardware Shop) நடத்திவந்திருக்கிறார் என்பதும் தெரியவந்திருக்கிறது. மேலும், குந்தாஜ் படேலைச் சுட்டுக் கொன்ற போலீஸ், களப் படைப் பிரிவைச் சேர்ந்த (Field Force Unit) போலீஸ் கான்ஸ்டபிள் எலியோடா குமிஜாமு (Elioda Gumizamu) என்று கூறப்படுகிறது.

உகாண்டாவில் 24 வயது இந்திய தொழிலதிபர் போலீஸால் சுட்டுக் கொலை!
உகாண்டாவில் 24 வயது இந்திய தொழிலதிபர் போலீஸால் சுட்டுக் கொலை!
கோப்புப் படம்

இந்த நிலையில், சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் அக்டோபர் 27-ம் தேதியன்று, கண்காணிக்கப்படாத சில நபர்களுடன் குந்தாஜ் படேலின் கடைக்குள் நுழைந்த போலீஸ்காரர், குந்தாஜ் படேலை தலை, மார்பில் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து அந்த இடத்திலிருந்து தப்பியோட முயன்ற அந்த போலீஸ்காரரை அங்கிருந்த மக்கள் சுற்றிவளைத்தனர். இதற்கிடையில் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த குந்தாஜ் படேல், மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறார்.

இந்திய தொழிலதிபரை சுட்டுக் கொன்ற போலீஸ் கைது
இந்திய தொழிலதிபரை சுட்டுக் கொன்ற போலீஸ் கைது

பின்னர் இது குறித்து சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி சொன்ன கூற்றின்படி நடவடிக்கை எடுத்த போலீஸார், கொலைக் குற்றம் என்ற அடிப்படையில் சம்பந்தப்பட்ட போலீஸ் கான்ஸ்டபிளைக் கைதுசெய்தனர். இது குறித்துப் பேசிய காவல்துறை செய்தித் தொடர்பாளர் எல்லி மேட், ``பாதிக்கப்பட்டவர் ஆபத்தான நிலையில், கிசோரோ மாவட்டம், முடோலேரிலுள்ள செயின்ட் பிரான்சிஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், துப்பாக்கிச்சூட்டுக் காயத்தால் சில மணி நேரத்துக்குப் பிறகு அவர் உயிரிழந்துவிட்டார்" எனக் கூறினார்.