Published:Updated:

பெண் பாலியல் பலாத்காரம்: ஆம் ஆத்மி கட்சி தலைவர் கைது!

பெண் பாலியல் பலாத்காரம்: ஆம் ஆத்மி கட்சி தலைவர் கைது!
பெண் பாலியல் பலாத்காரம்: ஆம் ஆத்மி கட்சி தலைவர் கைது!
பெண் பாலியல் பலாத்காரம்: ஆம் ஆத்மி கட்சி தலைவர் கைது!

புதுடெல்லி: திருமணமான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் ராமன் சுவாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி ஹரிகேஷ் நகர் தலைவரான ராமன் சுவாமி, கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் தேதி திருமணமான பெண் ஒருவருக்கு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகார் குறித்து காவல் துறையினர் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன் நண்பராக பழகிய ராமன் சுவாமியிடம் அந்த பெண் வேலை வாங்கி கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதை பயன்படுத்தி, கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் தேதி ஓக்லா நகருக்கு அந்த பொண்ணை ராமன் சுவாமி வரச்சொல்லி இருக்கிறார். அங்கிருந்து, அந்த பெண்ணை காரில் அழைத்து சென்று ஒரு வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

##~~##
மேலும், இதுகுறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என்று தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த பெண், தன்னை தைரியப்படுத்தி கொண்டு புகார் அளித்துள்ளார். அவரது மருத்துவ அறிக்கையும் பாலியல் பலாத்காரம் நடந்துள்ளதை உறுதிபடுத்தியுள்ளது என்றார்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட ராமன் சுவாமியை நேற்று போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வருகின்ற 8 ஆம் தேதி வரை ராமன் சுவாமியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.