கிரானைட் ஊழல் தொடர்பாக 'கல்லைக் கரைத்த கலெக்டர்கள்’ என்ற தலைப்பில் கடந்த ஜூ.வி. இதழில் நாம் எழுதி இருந்த கவர் ஸ்டோரி, அதிகார வட்டாரத்தை அதிர வைத்துள்ளது. 'கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் கிரானைட் குவாரி முறைகேடுகளுக்கு மதிவாணன், காமராஜை மட்டும் பொறுப்பாளிகள் ஆக்குவது எந்த விதத்தில் நியாயம்? அவர்கள் இருவரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் இந்த நடவடிக்கையின் பின்னணியில் ஒளிந்திருக்கும் சதியா?’ என்று கேள்வி எழுப்புகிறார்கள் சிலர்.

பலமுறை முயற்சி செய்து மதிவாணனிடம் பேசினோம். ''மதுரை கலெக்டராக நான் பணியில் இருந்தது மொத்தமே எட்டு மாதங்கள்தான். இதில் நான்கு மாதங்கள் விடுப்பில் இருந்தேன். எந்தக் காலத்திலுமே நான் தவறுக்குத் துணைபோனவன் அல்ல. என் மீது எந்தத் தவறும் இல்லை என்ற உண்மை முதலமைச்சர் அம்மா அவர்களுக்குத் தெரிய வேண்டும். இந்த பழிச்சொல்லில் இருந்து அவர்தான் எனக்கு விடுதலை கொடுக்க வேண்டும்'' என்று தழுதழுத்தார்.

அவர் சார்பாகப் பேசியவர்கள், ''மதிவாணன் கடந்து வந்த பாதையில் இதுவரை எந்த அவச் சொல்லுக்கும் ஆளானதே இல்லை. 29.5.09 அன்று மதுரை கலெக்டராகப் பொறுப்பேற்றுக்கொண்டவர் 7.2.10 அன்று ரிலீவ் ஆகிவிட்டார். இந்த எட்டு மாதத்தில் அவர் ஏகப்பட்ட பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. மதுரையில் இருக்கும் அதி காரிகளுக்கு எப்படி எல்லாம் பிரஷர் இருக்கும் என்

பது உங்களுக்கே தெரியும். தொட்டதற்கெல்லாம் அழகிரியின் பெயரைச் சொல்லி சிலர் அதிகார தோரணையுடன் பேசி இருக்கிறார்கள். சத்துணவுப் பணியாளர் நியமனத்தில்கூட 'இதைக்கூட செய்ய மாட்டீங்களோ’ என்று குரலை உயர்த் தினார்கள். இந்த டார்ச்சர்களை எல்லாம் தாங்க முடியாமல்தான் மதி வாணன் நான்கு மாதங்கள் விடுப்பில் இருந்தார். அப்படியும் விடாமல் அவரை சில நிர்ப்பந்தங்கள் துரத்தின. அதனால்தான் அவரே டிரான்ஸ்ஃபர் கேட்டு வெளியேறினார்.

இந்தப் பிரச்னைகளுக்கு மத்தியில்தான், பி.ஆர்.பி. தரப்பு மீது முருகேசன் கொடுத்த புகாரையும் விசாரிக்க நினைத்தார். அதனால், பி.ஆர்.பி-யையும் முருகேசனையும் ஆஜராகும்படி சம்மன் அனுப்பினார். அவர் அழைத்த தேதியில் பி.ஆர்.பி-க்காக அவரது வக்கீல் ஆஜராகி இருந்தார். கனிமவளத் துறை துணை இயக்குநர் ராஜாராம் உள்ளிட்ட அதி காரிகளும் வந்திருந்தனர். ஆனால், முருகேசன் வரவில்லை. 'முருகேசன் சொல்லி இருக்கும் குற்றச்சாட்டுகளில் எதுவுமே உண்மை இல்லை, அத னால்தான் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை’ என்று, ராஜாராம் உள்ளிட்ட கீழ்மட்ட அதிகாரிகள் சொன்னதையும் அவர்கள் கொடுத்த விசாரணை அறிக்கையையும் அப்படியே மதிவாணன் நம்பி விட்டார். தனக்குக் கீழ் உள்ள அதிகாரிகள் சொன்னதை அப்படியே நம்பி அரசுக்கு அறிக்கை கொடுத்ததுதான் மதிவாணன் செய்த ஒரே தவறு. மற் றபடி ஆதாயத்துக்காக அவர் அப்படி நடந்து கொள்ளவில்லை. மதிவாணன் மதுரை கலெக்டராக வந்தபோது சால்வை போட வந்தார் பி.ஆர்.பி. அதன்பிறகு, அவரோடு மதிவாணன் போனில் கூட பேசியது இல்லை'' என்று சொன்னார்கள்.

''கலால் மற்றும் வணிக வரித் துறைகளுக்கு கலெக்டர் அனுப்பிய சம்மனை பி.ஆர்.பி-யின் ஆட்களே கையெழுத்துப் போட்டு வாங்கியதை மதிவாணன் எப்படிக் கவனிக்காமல்விட்டார்?'' என்று கேட்டதற்கு, ''தான் அனுப்பிய சம்மனை யார் கையெழுத்து போட்டு வாங்கி இருக்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டியது ஒரு கலெக்டரின் வேலையா? அப் படியானால் மற்ற அதிகாரிகள் எதற்கு இருக்கிறார்கள்? மதிவாணன் கலெக்டராக இருந்த காலத்தில், புதிதாக எந்த குவாரிக்கும் லைசென்ஸ் கொடுக் கவில்லை. 2003-2006-ல் மட்டுமே புதிதாக 97 குவாரிகளுக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிரானைட் குவாரிகளில் மோசடிகள் நடந்திருப்பதாக சகாயமே தனது அறிக்கையில் சொல்லி இருக்கிறார். இந்தக் காலகட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட கலெக்டர்கள் மதுரையில் இருந்திருக்கிறார்கள். அவர்களை எல்லாம் விட்டுவிட்டு மொத்தமே 19 மாதங்கள் மட்டுமே பணியில் இருந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த கலெக்டர்கள் மதிவாணன், காமராஜ் ஆகியோரை மட்டும் ஏன் குறி வைக்கிறார்கள்?'' என்று கேள்வி எழுப்புகிறது மதிவாணன் தரப்பு.

காமராஜிடம் இதுகுறித்து கேட்டதற்கு, ''நான் மதுரையில் கலெக்டராக இருந்த 11 மாதங்களில் மூன்று மாதங்கள் தேர்தல் பணியில் இருந்தேன். கண்மாய் ஆக்கிரமிப்புகள் தொடர்பாக முருகேசன் கொடுத்திருந்த புகார் தொடர்பாக விசாரித்து அறிக்கை தரும்படி டி.ஆர்.ஓ. தலைமையில் ஒரு குழுவை அனுப்பினேன். அவர்கள் தந்த அறிக்கையின் அடிப்படையிலேயே அரசுக்கு அறிக்கை கொடுத்தேன். இதில் நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதை வழக்கு விசாரணைக்கு வரும்போது ஆவணங்களோடு விளக்குவேன்'' என்று கூறினார்.

அவருக்காகப் பேசிய சிலர், ''ஏப்ரல் 2010-ல் மதுரை கலெக்டராக பொறுப்பேற்றார் காமராஜ்.

கண்மாய்களை ஆக்கிரமித்து குவாரிகள் தோண்டப் படுவதாக முருகேசன் அனுப்பி இருந்த புகாரானது அரசிடம் இருந்து ஜூலை மாதம் காமராஜுக்கு வருகிறது. கடந்த 15 வருடங்களில் இதுபோன்ற எத் தனையோ புகார்கள் மதுரை கலெக்டர்களுக்கு வந்தி ருக்கின்றன. ஆனால், யாருமே இதை சீரியஸாக எடுத்துக்கொண்டது இல்லை. அந்தப் புகார்கள் அப் படியே கிடப்பில் போடப்பட்டு காலாவதி ஆகிவிடும். காமராஜ்தான் மெனக்கெட்டு அந்தப் புகாரை விசாரிக்க டி.ஆர்.ஓ., தாசில்தார் அடங்கிய குழுவை குவாரிகளுக்கு அனுப்புகிறார்.

'கண்மாய்கள் எதுவும் ஆக்கிரமிக்கப்படவில்லை’ என அதிகாரிகள் கொடுத்த ரிப்போர்ட்டை அடிப்படையாக வைத்து அரசுக்கு அறிக்கை அனுப்பினார் காமராஜ். அப்போதுகூட, 'குவாரிகளில் வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் கற்களை மொத்த மொத்தமாக அடுக்கி வைத்திருக்கிறார்கள். அதை அப்புறப்படுத்துவது தொடர்பாக தங்களின் ஆலோசனை வேண்டப்படுகிறது’ என்று அந்த அறிக்கையில் தனிக்குறிப்பு எழுதி அனுப்பினார். தன் மீது போடப்பட்டுள்ள வழக்கை எதிர்கொள்ள காமராஜ் தயாராகவே இருக்கிறார். அதற்குள்ளாக, மதிவாணனும் காமராஜும்தான் ஒட்டுமொத்த கிரானைட் கற்களையே வெட்டிக் கடத்தி விட்டதுபோல் சித்திரிக்க நினைக்கிறார்கள்'' என்று சொன்னவர்கள், ''கண்மாய் ஆக்கிரமிப்புப் புகாருக்கு காமராஜ் ரிப்போர்ட் அனுப்பி இரண்டு வருடங்கள் ஆகி விட்டன. இப்போது, விசாரணைக்கு வந்திருக்கும் அதிகாரிகள் கண்மாய்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகளைப் பார்த்து விட்டு, 'காமராஜ் பொய்யான அறிக்கை கொடுத்திருக்கிறார்’ என்று சொல்கிறார்கள். அந்த ஆக்கிரமிப்புகள் காமராஜின் அறிக்கைக்குப் பிறகுகூட முளைத்திருக்கலாமே!'' என்றும் வாதம் செய்தார்கள்.

இருவர் மீதும் புகார் கொடுத்த முருகேசனோ, ''கலெக்டர் மதிவாணன் உத்தரவிட்ட விசாரணைக்கு நான் ஆஜராகவில்லை என்றால், எனக்கு இன் னொரு முறை சம்மன் அனுப்பி இருக்கலாமே? ஒரே விசாரணையில் அவசர அவசரமாய்த் தீர்ப்பு எழுத வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது? ராஜாராம் என்ன எழுதிக் கொடுத்தாலும் அதை அப்படியே அரசுக்கு அனுப்பி விடுவாரா கலெக்டர் மதிவாணன்?'' என்று கேள்வி எழுப்பியவர், ''என்னிடமும் சில முக்கியமான ஆதாரங்கள் இருக்கின்றன. இந்த வழக்கு கோர்ட்டுக்கு வரட்டும்'' என்று சஸ்பென்ஸ் வைத்தார்.

லஞ்ச ஒழிப்புத் துறையினரோ, ''ஊழலுக்கு சாதி ஏது? இவர்கள் இருவர்தான் தலித். பி.ஆர்.பி. தேவர் சாதியாச்சே! நாங்கள் விசாரிக்க ஆரம்பிச்சு 20 நாட்கள்தான் ஆகுது. அதுக்குள் இவங்க ரெண்டு பேரும் சிக்கி இருக்காங்க. இவங்க தப்பு செஞ்சதுக்கான ஆதாரங்கள் இருக்கின்றன. இன்னும் விசாரிக்க வேண்டியது நிறைய இருக்கு. கிரானைட் முறைகேடுகளுக்குத் துணை போனவர்கள் யாரும் தப் பிக்க முடியாது'' என்கிறார்கள்.

மதிவாணன், காமராஜ் விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் நலனுக்காகப் போராடும் 'எவிடென்ஸ்’ அமைப்பின் செயல் இயக்குநர் கதிர், ''மேலூர் பகுதியில் நடந்த கிரானைட் ஊழலை மிகத்துணிச்சலோடு வெளிக்கொண்டுவந்த முருகேசன் பாராட்டப்பட வேண்டியவர். மதிவாணனும் காமராஜும் அவருக்கு உரிய பாதுகாப்புக் கொடுத்து அவரது புகார்களைத் தீவிரமாக விசாரித்திருக்கலாம். அதைச் செய்யத் தவறியதற்காக இருவர் மீதும் வழக்குப் பதிவு செய் யப்பட்டு விசாரணையில் இருக்கிறார்கள். இது வரவேற்கத்தக்க விஷயமாக இருந்தாலும், கடந்த 20 வருடங்களாக மேலூர் கிரானைட் குவாரிகளில் முறைகேடுகள் நடந்துள்ளன. இதற்கு கடந்த 20 வருடங் களில் மதுரை மாவட்டத்தில் இருந்த அனைத்து ஆட்சியாளர்களும்தான் பொறுப்பு. ஆனால், இரண்டு பேர் மீது மட்டுமே நடவடிக்கை எடுத்திருப்பதை சாதித் துவேஷமாகவே பார்க்கிறோம்.

மதிவாணனும் காமராஜும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மற்ற ஆட்சியர்களும் அதிகாரிகளும் இதில் பொறுப்பு இல்லையா? வழக்கில் சம்பந்தப்பட்ட கிரானைட் முதலாளிகளோடு தமிழகத்தின் முன்னாள் முதல்அமைச்சர் கைகுலுக்கும் படங்கள் ஜூனியர் விகடனிலேயே வெளிவந்தது. அதுகுறித்து விசாரிக்காதது ஏன்?'' என்றார்.

அதானே..!

- குள.சண்முகசுந்தரம்