பள்ளி வாகனங்கள் இன்னும் எத்தனை மாணவர் களின் உயிரைக் குடிக்கப் போகின்றனவோ?

தாம்பரம் மாணவி ஸ்ருதியைப் பலிகொடுத்த பிறகு, சென்னை உயர் நீதிமன்றத்தின் தலையீட்டின் பேரில், பள்ளி நிர்வாகங்கள் கட்டாயம் கடைப் பிடிக்க வேண்டிய 15 விதிமுறைகளை உருவாக்கியது தமிழக அரசு. ஆனாலும், பள்ளி வாகனங்களில் பயணிக்கும் மாணவர்கள் உயிர் இழப்பது இன்னும் தொடர்வதுதான் வேதனை.

திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து ஆத்தூர் செல்லும் வழியில் இருக்கிறது சிக்கத்தம்பூர். இங்கு வசிக்கும் சுரேஷ்குமார் - அமுதா தம்பதியின் மூத்தமகன் கிஷோர். ஊருக்குச் சற்றுத் தொலைவில் சிக்கத்தம்பூர் பாளையத்தில் உள்ள விக்னேஷா வித்யாலயா நர்சரிப் பள்ளியில் யு.கே.ஜி. படித்தான். படிப்பில் கெட்டியாகவும் விளையாட்டில் சுட்டியாகவும் இருந்த கிஷோர், நிறையப் பரிசுகள் வாங்கி இருக்கிறான். தினமும் பள்ளிக்குச் சொந்தமான வேனில் சென்று வந்தவனை, அந்த வேனே கடந்து செப்டம்பர் 18-ம் தேதி பலிவாங்கி விட்டது.

நடந்த சம்பவத்தை நேரில் பார்த்த நாகம்மாள் நம்மிடம் விவரித்தார்.

''அரச மர பஸ் ஸ்டாப்புல என்னோட பேரப் புள்ளைங்க ரெண்டு பேரும் இன்னும் கொஞ்ச புள்ளைங்களும் வேனுல ஏறினாங்க. குழந்தைகளைப் பாத்துக்கிற ஆயாம்மா வேன் நடுவுல உக்காந்திருந்தாங்க. வேன் கிளம்பி கொஞ்ச தூரம் போனதுமே சடார்னு ஒரு சத்தம். என்னன்னு பார்த்தா... ஒரு குழந்தை ரோட்டுல விழுந்து கிடந்துச்சு. ஆனா, வேன் பாட்டுக்குப் போய்க்கிட்டே இருந்துச்சு. எல்லாரும் சத்தம் போட்டு வேனை நிறுத்தினோம். ரோட்ல கிடந்த குழந்தையைத் தூக்கினா, பேச்சு மூச்சு இல்ல. உடம்பெல்லாம் ரத்தம். உடனே, மோட்டார் சைக்கிள்ல ஒருத்தரோட குழந்தையை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவச்சோம். இவ்வளவு நடந்தும் வேனுக்குள்ளே இருந்த ஆயாம்மா இறங்கி வரவே இல்லை'' என்றார் படபடப்புடன்.

சோகத்தின் பிடியில் இருந்த கிஷோரின் அம்மா அமுதா, ''வழக்கமா ஊர் கடைசிக்குப் போய் புள்ளைங்களை ஏத்திட்டு, திரும்பி வரும்போதுதான் கிஷோர் வேன்ல ஏறுவான். அன்னிக்கு சீக்கிர மாக் கிளம்பிட்டதால, ஊருக்குள் போகும் போதே வேன்ல ஏத்திவிட்டேன். அவனுக்கு 'டாடா’ காட்டிட்டு வீட்டுக்கு வர்றதுக்குள்ள எம்புள்ள வேன்ல இருந்து விழுந்துட்டான்னு சேதி வந்துச்சு. ஓடிப் போயிப் பாத்தா...'' என்றவரால் அதற்கு மேல் பேச முடியவில்லை.

''அந்தப் பள்ளி வேனின் இடது பக்கம் இரண்டு கதவுகள் உள்ளன. முன்புறக் கதவை ஒட்டியுள்ள ஸீட்டில் கிஷோரை உட்கார வைத்திருக்கிறார் ஆயாம்மா கிரேஸி. அவர் அந்தக் கதவை சரியாக சாத்தவில்லை. அதனால், வேன் டிரைவர் கியர் மாற்றி வேகத்தை அதிகரித்ததும், கதவு தானாக திறந்துகொள்ள... ஸீட்டில் உட்கார்ந்திருந்த சிறுவன் நிலை தடுமாறி விழுந்திருக்கிறான். தலையிலும் நெஞ்சிலும் பலத்த அடிபட்டதால், ஸ்பாட்டிலேயே உயிர் போய்விட்டது. 'கதவின் அருகே ஆயாம்மா அல்லது கிளீனர் ஒருவர்தான் அமர வேண்டும்’ என்ற விதிமுறையைக் கடைப்பிடிக்காமல் ஐந்து வயது சிறுவனை உட்கார வைத்து டிரைவரும் ஆயாம்மாவும் அலட்சியம் காட்டியதால் ஒரு உயிர் அநியாயமாகப் பறிபோய் விட்டது'' என்றார்கள் அருகில் இருந்தவர்கள்.

''பள்ளியின் தாளாளர் ராமராஜ், வேன் டிரைவர் வேலுச்சாமி, ஆயாம்மா கிரேஸி ஆகியோரைக் கைது செய்து சிறைக்கு அனுப்பி உள்ளோம். அலட்சியம் காரணமாக உயிர் இழப்பு ஏற்படுத்தியதாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது'' என்றார், துறையூர் காவல் நிலைய எஸ்.ஐ. செந்தில்குமார்.

என்று நீங்குமோ இந்த அலட்சிய மரணங்கள்?

- அ.சாதிக் பாட்ஷா

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

விபத்துக்குக் காரணம் குடி போதையா..?

துறையூர் மாணவர் கிஷோர் இறந்த அதேநாளில், திருச்சி பெல் பகுதியில் 13 வயதான மிதுன் என்ற மாணவனும் பலி ஆனான். தனியார் வேனில் மிதுனை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். வேனை விட்டு இறங்கிய மிதுன், பள்ளிக்குள் செல்வதற்காக வேனின் முன்பக்கமாகக் கடந்து சென்றான். வேன் டிரைவர் செந்தில்குமார், அவனைக் கவனிக்காமல் வண்டியை எடுத்து விட்டார். கண் இமைக்கும் நேரத்தில் வேனுக்கு அடியில் சிக்கிக்கொண்டான் மிதுன். அவனைத் தூக்கிக்கொண்டு அருகில் உள்ள பெல் மருத்துவமனைக்கு ஓடியும், சில நிமிடங்களில் உயிர் இழந்து விட்டான்.

கருணாகரன் - கார்த்திகா தம்பதியின் ஒரே மகன் மிதுன். காது கேளாமலும், வாய் பேச முடியாமலும், மனநலம் குன்றிய நிலையில் மிதுன் இருந்தான். பெல் தொழிற்சாலையில் உள்ள அறிவாலயம் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்தான். சம்பவ தினத்தன்றே டிரைவர் செந்தில் குமார் உடனடியாகக் கைது செய்யப்பட்டார். அவர் குடிபோதையில் வேனை ஓட்டினாரா அல்லது கவனக் குறைவா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதுபோன்ற விபத்துகள் நடந்த பிறகும், ஓட்டுனர்கள் பாடம் படிக்கவில்லை என்றால், பிஞ்சுகள் உயிருக்கு யார்தான் பொறுப்பு?

- த.பிரியங்கா