வீட்டு நினைப்பை மறந்து நாட்டு நினைப்புடன் மட்டுமே இயங்கக்கூடிய சூழலியலாளர்களில் முக்கியமானவர் வந்தனா சிவா. இதற்காகவே, 'மாற்று நோபல் பரிசு’ பெற்றவர். இன்டர்நேஷனல் ஃபாரம் ஆன் குளோபலைசேஷன் அமைப்புக்காக இந்தியாவில் இப்போதும் அழுத்தமாகச் செயல்பட்டு வருபவர். இத்தகைய செயல்பாட்டுக்கு வருவதற்கு முன், இந்தியாவில் குறிப்பிடத்தக்க முன்னணி அறிவியலாளர்களில் ஒருவராக இருந்தார் வந்தனா சிவா. அதுவும் நியூக்ளியர் அறிவியலாளராக பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில் தன்னுடைய நேரங்களை அதிகம் செலவிட்டவர்.

''அறிவியல் என்பது வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்க வேண்டும், வாழ்க்கையை அழிப்பதாக இருக்கக் கூடாது என்ற பாடத்தை அப்போது கற்றுக்கொண்டேன். லாப நோக்கம்கொண்ட அறிவியலால் சமூகப் பொறுப்பற்ற போர்கள் உருவாக்கப்படுவதைப் புரிந்துகொண்டேன். சமூக அக்கறை உடைய அறிவியல் திட்டமிட்டு மறைக்கப்படுவதையும் ஆபத்தான அறிவியல் நுட்பங்கள் மீது நமது ஜனநாயகம் தனது கட்டுப்பாடுகளைச் செலுத்தாமல் இருப்பதையும் கண்டுகொண்டேன்'' என்று அதில் இருந்து விலகியதற்கான காரணத்தைப் பகிரங்கமாக அறிவித்த வந்தனா சிவா எழுதிய கட்டுரைகள்தான் இவை!

காற்றைப் போல இன்று பெட்ரோல் அவசிய, அத்தியாவசியப் பொருளாக மாறிவிட்டது. பெட்ரோலின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. ஆனால், அதனுடைய தட்டுப்பாடும் நாளுக்கு நாள் அதிகமாகிறது. பெட்ரோல் இல்லாமல் வாழ முடியாது என்ற நிலையை உருவாக்கி விட்டோமே தவிர, அதற்கான மாற்றுச்சிந்தனை இல்லாமல் செயல்பட்டு வருகிறோம். இந்த அபாய சூழ்நிலையைத்தான் 'எண்ணெய் மற... மண்ணை நினை’ என்று சுட்டிக் காட்டுகிறார் வந்தனா.

''பெட்ரோல் சக்தியால் ஓடுகிறது இயந்திரவியல் யுகம். புதுப்பிக்கத்தக்க மனித ஆற்றல், குதிரை, மாடு, யானை போன்ற விலங்குகளின் ஆற்றலால் இயங்கிக்கொண்டு இருந்த இடத்தில், புதுப்பிக்க இயலாத ஆற்றலைப் பொருத்தினோம். அது, வானவெளியில் கார்பன் சுழற்சியில் இடையூறு ஏற்படுத்தியது. பருவநிலை மாற்றமும் பெட்ரோல் விளிம்பு நிலைக்குப் போவதும் நமக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கைகள்'' என்று அபாயச்சங்கு ஊதுகிறார் வந்தனா.

''இன்று கார்கள் மனிதனைத் தின்னுகின்றன. நிலங்கள்... கார் நிறுத்தங்களாக, சாலைகளாக, பெருவழிச் சாலைகளாக, மேம்பாலங்களாக, கார் ஆலைகளாக மாற்றப்பட்டுள்ளன. கார்கள் செய்யத் தேவையான எஃகு, அலுமினியம், உலோகங்களுக்கான இரும்பு, பாக்ஸைட், கனிமங்கள் தோண்டி எடுக்க சுரங்கம் வெட்ட நிலம் அபகரிக்கப்படுவதால், விவசாயமும் சூழலியலும் சிதைக்கப்படுகிறது. எண்ணைய்க்கான துளையிடலும் அதிக நிலத்தைத் தின்னுகிறது. கார்களும் பெரும் பசியுடன் நிலத்தை, சூழலியலைத் தின்னுகின்றன. எண்ணெய்க் கழிவுகளால் வானப் பெருவளி விழுங்கப்படுகிறது'' என்று பருவ மாற்றம், பெட்ரோல் தாகம், உணவுப் பற்றாக்குறை ஆகிய மூன்றையும் இணைத்து முழுச் சிக்கலையும் சொல்கிறார்.

எவ்வளவு மோசமான எதிர்காலத்தை நோக்கிப் போய்க்கொண்டு இருக்கிறோம் என்பதைச் சொல்லி எச்சரிக்கிறது, இந்தப் புத்தகம்.

- புத்தகன்