மிக நீண்ட தேடுதலுக்குப் பிறகு, சிக்கி இருக்கிறார் தமீம்அன்சாரி. 'தமிழகத்தின் முக்கிய இடங்களில் நாசவேலை செய்வதற்கான திட்டம் இருந்தது. பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு இந்திய ராணுவ ரகசியங்களைச் சொல்லும் சி.டி-யைத் தயாரித்து வைத்திருந்தார்’ என்று திடுக் குற்றச்சாட்டுகளை சொல்கிறார்கள்.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டைக்கு அருகே அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் தமீம் அன்சாரி. காய்கறி வியாபாரம் செய்வதாகக் கூறி, தஞ்சாவூர் அழகம்மாள் காலனிக்கு, நான்கு ஆண்டுகளுக்கு முன் குடி வந்துள்ளார். ஊட்டி, பெங்களூரு, சென்னைக்கு அடிக்கடி சென்றுள்ளார். கடந்த 17-ம் தேதி இலங்கைக்குச் செல்ல இருந்த தமீம் அன்சாரியை, திருச்சி விமான நிலையத்தில் உளவுத் துறையினர்

மடக்கினர். அவரிடம் இருந்த லக்கேஜ்களை சோதனை செய்ததில், பகீர் விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன!

'அதிராம்பட்டினத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். லஷ்கர்-இ-தொய்பா, முஸ் லீம் பாதுகாப்புப் படை போன்ற தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு உடையவரான அப் துல்லா தவ்பீக் இந்த ஊரைச் சேர்ந்தவர். ஹை தராபாத், மும்பை ஆகிய இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் தவ்பீக் பெயர் இருக்கிறது. போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டையால், தலைமறைவாக இருந்தார். கடந்த ஆண்டு டெல்லி அருகே உள்ள நொய்டா நகரில் தவ்பீக் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து சில பெயர்கள் எங்களுக்குக் கிடைத்தன. அதில் ஒருவர்தான் தமீம் அன்சாரி'' என்கிறார்கள் உளவுத் துறையினர்.

''இவருக்கு இந்திய ராணுவ ரகசியங்களைக் கொடுத்த பெங்களூரு அதிகாரி, சென்னையில் மறைமுகமாகச் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்பு, ஊட்டியில் உள்ள வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையத்தை பற்றித் தகவல் கொடுத்த உள்ளூர் அதிகாரி எனப் பலரது அடையாளங்களையும் கண்டுபிடித்து இருக்கிறோம். எம்.ஏ. பட்டதாரியான தமீம் அன்சாரி ஏழு ஆண்டுகளுக்கு முன், இந்திய மாணவர் கூட்டமைப்பின் தஞ்சை மாவட்டச் செயலாளராக இருந்திருக்கிறார். 2001-ம் ஆண்டு வெங்காயம் ஏற்றுமதி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விரக்தியில் இருந்தவரைப் பயன்படுத்திக்கொண்ட தீவிரவாத ஏஜென்ட்கள், இவரை இலங்கைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே, பாகிஸ்தான் உளவுத் துறையோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. 'இந்தியாவின் ராணுவ பலத்தை வெளிக்காட்டும் விதமாக ஓர் ஆவணப்படம் எடுக்கிறேன்’ என்று, முன்னாள் ராணுவ அதிகாரிகள் பலரிடம் பேசி னாராம் தமீம். இந்திய ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளை எல்லாம் படம் எடுத்துள்ளார்'' என்று அதிர்ச்சி கிளப்புகிறார்கள்.

ஆஹா... எப்படி இருக்கிறது பாருங்கள் நம்முடைய நாட்டின் பாதுகாப்பு?

- சி.சுரேஷ், அ.சாதிக் பாட்ஷா