உச்ச நீதிமன்ற உத்தரவால் காவிரியில் நீர் திறந்து விடவேண்டிய கட் டாயத்துக்கு ஆளான கர்நாடகா, அன்றைய தினத்தில் மக்களைத் தூண்டிவிட்டு பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி வருகிறது. இதைக்கண்டித்து, 'நாம் தமிழர்’ அமைப்பின் சார்பில் கடந்த 5-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆவேசமாக மைக்பிடித்த சீமான், ''பிரதமர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தபோது, 'இப்போது இருக்கும் நிலையில் ஒருசொட்டு நீருக்காகக்கூட எங்கள் அணைகளின் ஷட்டர் திறக்காது’ என்று கர் நாடகா முதல்வர் ஷெட்டர் திமிறிவிட்டு வெளியேறினார். அதற்கு நெத்தியடி தரும் வகையில், 'இனி நெய்வேலியில் இருந்து ஒரு யூனிட் மின்சாரம்கூட கர்நாடகாவுக்குப் போக அனுமதிக்க மாட்டோம்’னு தமிழக முதல்வர் ஜெயலலிதா சொல்லிவிட்டு வந்திருக்க வேண்டாமா? நம்ம நிலக்கரியை எடுத்து நம் மாநிலத்தில் இயக்கப்படுகிறது நெய்வேலி அனல்மின் திட்டம். ஆனால், நம் மக்கள் இருட்டில் நாட்களைக் கழிச் சுக்கிட்டு இருக்காங்க. நெய்வேலியில் இருந்து மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ளும் கர் நாடகாவுக்கு, நமக்கு தண்ணீர் தர மட்டும் மனசு இல்லை. இப்போது, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகும்கூட, 'மூன்று மணி நேரம்தான், மூன்று நாட்கள்தான் தண்ணீர் திறப்போம்’னு கர்நாடகா அரசு, நீதிமன்ற அவமதிப்பு செய்கிறது. நீதிமன்றத்தையும் பிரதமரையும் அவமதிக்கும் மாநில அரசை இந்த நேரம் மத்திய அரசு கலைத்திருக்க வேண்டாமா? அதற்காக, நம் மாநிலக்கட்சிகள் முழுமூச்சாகப் போராட வேண்டாமா? காவிரி விவகாரம் டெல்டாவுக்கு மட் டுமான சிக்கல் அல்ல. இந்த உரிமையை இழந்தால் தமிழகம் முழுவதும் அழிந்துவிடும். நெருங்கும் சட்ட மன்றத் தேர்தலை நினைவில் வைத்து, கர்நாடகக் கட்சிகள் ஆட்டம் போடுகின்றன. இதற்குச் சரியான சூடு கொடுக்க வேண்டிய தமிழக அரசு மெத்தனம் காட்டுகிறது. வீரி யத்துடன் போராட நினைக்கும் எங்களையும் ஒடுக்கப் பார்க்கிறது. காவிரி நீர் விவகாரத்தில் நிரந்தர முடிவு எடுக்கப்படவில்லை என்றால், கர்நாடகாவுக்கு இனி ஒரு துளி மின்சாரம் போகவும் அனுமதிக்க மாட்டோம். இதற்காக எங்கள் போராட்டம் எந்த எல்லையையும் தொடும். இதை வெறும் வாய்ச்சவடால் என்று நினைக்க வேண்டாம். நெய்வேலி அனல்மின் நிலைய உலைகளைவிட அதிக உஷ்ணம் மிக்கதாக எங்கள் போராட்டம் இருக்கும். இந்த விஷயத்தில் தமிழகத்தின் மீது உண்மையான அக்கறைகொண்டவர்கள் எங்களுடன் கைகோக்க வாருங்கள்...'' என்று அழைப்பு விடுத்து முடித்தார்.

- எஸ்.ராஜாசெல்லம்