Published:Updated:

கிருஷ்ணகிரி: 25 கிலோ வெள்ளி, 30 பவுன் நகை திருட்டு; நகைக்கடை சுவரில் துளையிட்டு கைவரிசை!

திருட்டு நடந்த நகைக்கடை.

``நகைக்கடையின் பின்பக்கம் சிறிய தெருக்கள் இருப்பதால், இந்தத் தெரு வழியாக வந்த கொள்ளையர்கள், ஓர் ஆள் நுழையும் அளவுக்கு சுவரில் துளையிட்டு, நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றிருக்கின்றனர்." – போலீஸார்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே, சேலம் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள அனுமன் தீர்த்தம் பகுதியில், திருப்பத்தூரைச் சேர்ந்த சேகர் என்பவர் நகைக்கடை நடத்திவருகிறார். ‘ஸ்ரீ விக்னேஸ்வர்’ எனப்பெயர் கொண்ட இந்த நகைக்கடையை நேற்றிரவு வழக்கம்போல பூட்டிவிட்டு திருப்பத்தூர் சென்றிருந்தார் சேகர். இந்த நிலையில், இன்று காலை அருகிலுள்ள கடைக்காரர்கள், அங்குள்ள மக்கள், நகைக்கடை சுவரில் துளையிடப்பட்டிருப்பதாக, சேகருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதிர்ச்சியடைந்த சேகர் கடைக்கு வந்து பார்த்தபோது, கடையின் பின்பக்க சுவரில் துளையிடப்பட்டு கடையிலிருந்த, வளையல்கள், செயின் உட்பட 25 கிலோ அளவுக்கான வெள்ளி நகைகள், 30 பவுன் தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து அவர் ஊத்தங்கரை போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தார்.

கிருஷ்ணகிரி: 25 கிலோ வெள்ளி, 30 பவுன் நகை திருட்டு; நகைக்கடை சுவரில் துளையிட்டு கைவரிசை!

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், மோப்ப நாய், கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களைச் சேகரித்தனர். மேலும், சி.சி.டி.வி காட்சிகளைக்கொண்டு, நகைகளைத் திருடிய மர்மக் கும்பலைத் தேடிவருகின்றனர். தேசிய நெடுஞ்சாலை ஓரத்திலுள்ள கடையிலேயே திருட்டுச் சம்பவம் நடந்திருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சம்பவம் குறித்து ஊத்தங்கரை இன்ஸ்பெக்டர் அன்பழகனிடம் விசாரித்தோம். ‘‘திருட்டுச் சம்பவம் நிகழ்ந்த கடை, மெயின் ரோட்டில் இருக்கிறது. கடையின் பின்பக்கம் சிறிய தெருக்கள் இருப்பதால், இந்தத் தெரு வழியாக வந்த கொள்ளையர்கள், ஓர் ஆள் நுழையும் அளவுக்கு சுவரில் துளையிட்டு, நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றிருக்கின்றனர். தடயங்களைச் சேகரித்து, கொள்ளையர்களைத் தேடி வருகிறோம்’’ என்றார்.