Published:Updated:

8 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த ஹெச்.ஐ.வி பாதித்த நபர்! - டெல்லியில் அதிர்ச்சி

பாலியல் வன்கொடுமை ( சித்திரிப்புப் படம் )

8 வயது சிறுமி ஒருவர் ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்ட இளைஞரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

8 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த ஹெச்.ஐ.வி பாதித்த நபர்! - டெல்லியில் அதிர்ச்சி

8 வயது சிறுமி ஒருவர் ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்ட இளைஞரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
பாலியல் வன்கொடுமை ( சித்திரிப்புப் படம் )

பீகாரைச் சேர்ந்த பெண் ஒருவர் கணவர் தன்னை கைவிட்ட நிலையில், தன் 8 வயது மகளுடன் டெல்லியின் பதர்பூர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். போதிய வருமானம் இல்லாததால் அந்தப் பெண் அந்தப் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவருக்குத் தான் வசிக்கும் வீட்டை உள்வாடகைக்கு விட்டிருக்கிறார். வீட்டில் தன் மகளை விட்டுவிட்டு வேலைக்குச் செல்லும் அந்தப் பெண், மாலைதான் வீடு திரும்புவாராம்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
சித்திரிப்புப் படம்

இந்த நிலையில், அண்மையில் மாலை பணிமுடிந்து வீடு திரும்பிய அந்தப் பெண், தன்னுடைய மகள் அழுது கொண்டிருப்பதை கண்டு அவரிடம் விசாரித்திருக்கிறார். அப்போது சிறுமி அந்த வீட்டில் உள்வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகத் தெரிவித்திருக்கிறார். அந்த இளைஞரும் அங்கிருந்து தப்பியிருக்கிறார். சிறுமியின் உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த அந்தப் பெண், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது.

அதையடுத்து சிறுமியின் தாய் உடனடியாக டெல்லி போலீஸில் புகாரளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார், குற்றம்சாட்டப்படும் நபரைப் பிடிக்க 4 தனிப்படைகளை அமைத்து தேடிவந்தனர்.

இந்த நிலையில், அந்த நபர் ஹரியானா மாநிலம், பல்வால் மாவட்டத்தில் உள்ள பாமினிகேரா கிராமத்தில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அங்கு விரைந்த டெல்லி போலீஸார் அவரைக் கைதுசெய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கைது
கைது

அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டபோது அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்திருக்கிறார். ஹெச்.ஐ.வி எனப்படும் பால்வினை நோய்கொண்ட அந்த நபர், பாலியல் இச்சை காரணமாக சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அந்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய டெல்லி போலீஸார், சிறையில் அடைத்தனர்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism