Published:Updated:

தொடர் பிராங்க் கால்; ஆபாசப் பேச்சு; போலீஸை டார்ச்சர் செய்த இளம்பெண்ணுக்கு என்ன தண்டனை தெரியுமா?

கைது

25 வயது பெண் ஓருவர் போலீஸுக்குப் போன் செய்து, ஆபாசமாகப் பேசுவது, பாட்டுப் பாடுவது எனத் தொடர்ந்து தொல்லை கொடுத்திருக்கிறார்.

தொடர் பிராங்க் கால்; ஆபாசப் பேச்சு; போலீஸை டார்ச்சர் செய்த இளம்பெண்ணுக்கு என்ன தண்டனை தெரியுமா?

25 வயது பெண் ஓருவர் போலீஸுக்குப் போன் செய்து, ஆபாசமாகப் பேசுவது, பாட்டுப் பாடுவது எனத் தொடர்ந்து தொல்லை கொடுத்திருக்கிறார்.

Published:Updated:
கைது

பொதுமக்கள் அவசரகாலங்களில் போலீஸாரின் உதவியை நாடுவதற்கு ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார், கடந்த ஆண்டு ஹெல்ப்லைன் `112' என்ற திட்டத்தைத் தொடங்கிவைத்தார். இந்தத் திட்டம் மக்களின் ஆதரவுடன் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. இந்த நிலையில், கடந்த சில தினங்களாக 25 வயது பெண் ஓருவர் போலீஸ் அதிகாரிகளுக்கு பிராங்க் கால் (Prank call) செய்து, ஆபாசமாகப் பேசுவது, பாட்டுப் பாடுவது என தொடர்ந்து தொல்லை கொடுத்துவந்திருக்கிறார்.

பிராங்க் கால்
பிராங்க் கால்

ஒருகட்டத்தில் அந்தப் பெண், போலீஸுக்குப் பொறுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். இதையொட்டி, தொலை தொடர்பு காவல் கண்காணிப்பாளர் (SP) ராஜேஷ் கலியா என்பவர் பஞ்ச்குலா காவல்துறை துணை ஆணையரிடம் புகார் அளித்திருக்கிறார்.

அந்தப் புகாரில், ``ஒரு பெண் அடிக்கடி பிராங்க் கால் செய்து போலீஸ் அதிகாரிகளைத் துன்புறுத்திவருகிறார். அந்தப் பெண்ணிடமிருந்து அடிக்கடி இது போன்ற அழைப்புகள் வருவதால், நெருக்கடியிலுள்ள மக்களுக்கு அவசர சேவை கிடைப்பதில்லை. இது போன்ற செயலினால் எங்களின் நேரமும், ஆற்றலும் வீணடிக்கப்படுகின்றன. தொடர்ந்து போலீஸை சிரமத்துக்கு ஆளாக்கிவரும் அந்தப் பெண்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனத் தெரிவித்திருந்தார்.

கைது
கைது

அதைத் தொடர்ந்து, அவசர உதவி எண் 112-க்கு பிராங்க் கால் செய்தவர் எண்ணைக் கண்டுபிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், பஞ்ச்குலாவிலுள்ள பீர் காகர் பகுதியைச் சேர்ந்த சுமன் என்ற 25 வயது பெண் அடையாளம் காணப்பட்டார். அவர் மீது, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 186 (பொதுப் பணிகளைச் செய்வதில் பொது ஊழியரைத் தடுத்தல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவுசெய்யப்பட்டு, மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.