Published:Updated:

சூட்கேஸில் இருந்த இளம்பெண் சடலம்; கால்வாயில் வீசிச் சென்ற கொலையாளி! - திருப்பூரில் பரபரப்பு

சூட்கேஸில் கிடந்த இளம்பெண் சடலம்

திருப்பூரில் சூட்கேஸில் அடைத்துவைத்து பெண் சடலம் வீசப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சூட்கேஸில் இருந்த இளம்பெண் சடலம்; கால்வாயில் வீசிச் சென்ற கொலையாளி! - திருப்பூரில் பரபரப்பு

திருப்பூரில் சூட்கேஸில் அடைத்துவைத்து பெண் சடலம் வீசப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
சூட்கேஸில் கிடந்த இளம்பெண் சடலம்

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சாலையில் பொல்லிக்காளிபாளையம் அருகே புதுரோடு பகுதியில் இன்று காலை, சாலையோரக் கால்வாயில் மர்மமான சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. ரத்தக்கறையுடன் கிடந்த அந்த சூட்கேஸைப் பார்த்த பொதுமக்கள் பதறிப்போய், நல்லூர் போலீஸாருக்கு உடனே தகவல் கொடுத்துள்ளனர். அதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த நல்லூர் போலீஸார் சூட்கேஸைக் கைப்பற்றி சோதனை செய்ததில், சூட்கேஸினுள் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது.

சம்பவ இடத்துக்கு திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு மற்றும் உயரதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர். அதனையடுத்து இளம்பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

சூட்கேஸில் கிடக்கும் சடலத்தைப் பார்வையிடும் போலீஸார்
சூட்கேஸில் கிடக்கும் சடலத்தைப் பார்வையிடும் போலீஸார்

நைட்டி அணிந்தபடி, கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட அடையாளங்களுடன் சூட்கேஸினுள் சடலமாகக் கிடந்த அந்த இளம்பெண் யார்... அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்... என்ன காரணத்துக்காக அவர் கொலை செய்யப்பட்டார்... வேறு எங்காவது கொலை செய்துவிட்டு கொலையாளிகள் இங்கு வீசிவிட்டுச் சென்றார்களா என்று பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். ஆனால், தற்போது வரை இறந்தது யார், கொலையாளி யார் என்ற எந்தத் தகவலும் தெரியவில்லை. விசாரணைக்குப் பிறகே முழு விவரங்கள் தெரியவரும் என போலீஸார் கூறுகின்றனர். சூட்கேஸ் கிடந்த பகுதியைச் சுற்றியுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றியும், சடலமாகக் கிடந்த பெண்ணின் புகைப்படத்தை எடுத்து மற்ற காவல் நிலையங்களுக்கு அனுப்பிவைத்தும் போலீஸார் தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.

இளம்பெண்ணை கொன்று சூட்கேஸில் அடைத்து கால்வாயில் வீசப்பட்ட சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.