மாணவர்களை வெறும் மதிப்பெண் அள்ளும் எந்திரங்களாக மாற்றப் பார்க்கும் கல்வி முறையும்.... 'மார்க் அள்ளினால்தான் பள்ளிக்கு மரியாதை' என்று கருதும் சில ஆசிரியர்களும்.... தேர்ச்சி விகிதத்தைக் காரணம் காட்டி கட்டணத்தை உயர்த்த நினைக்கும் பேராசைப் பள்ளி நிர்வாகிகளும் சேரும்போது... வாழ்க்கை நரகமாகிறது மாணவனுக்கு. தாக்குப் பிடிக்க முடியாமல் மாணவர்கள் தங்களையே மாய்த்துக்கொள்ளும் அவலக் காட்சியை அடிக்கடி பார்க்கிறோம். சில தினங்களுக்கு முன், பட்டுக்கோட்டையில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட ஒரு மாணவன், சாகும் தறுவாயில் கொடுத்த மரணவாக்குமூலம் ஒட்டுமொத்தக் கல்வித் துறையையும் அதிர்ச்சிஅலையில் ஆழ்த்தி விட்டது!

ராசிபுரம், திருச்செங்கோடு, நாமக்கல் பகுதியில் இயங்கிவரும் அதே ஸ்டைலில், கடந்த சில ஆண்டுகளாக தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் சுமார் 15 தனியார் சுய நிதிப் பள்ளிகள் முளைத்துள்ளன. தமிழகம் முழுவதிலும் இருந்து இந்தப் பள்ளிகளில் மாணவர்கள் வந்து தங்கிப்

பயில்கின்றனர். 100 சதவிகிதம் தேர்ச்சி மற்றும் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் என்கிற குறிக்கோளை எட்டுவதற்காக இந்தப்பள்ளிகள் மாணவர்களைப் படுத்தும்பாடு கொஞ்சநஞ்சம் அல்ல. பாடப்புத்தகத்தை மனப் பாடம் மூலம் கரைத்துக் குடித்து தேர்வுத்தாள்களில் வாந்தியெடுக்கும் யுக்தியைத் தவிர வேறு எதையும் இந்தப் பள்ளிகள் சொல்லித்தருவது இல்லை என்கிறார்கள் ஊன்றிக் கவனிக்கும் நடுநிலையான கல்வியாளர்கள்.

பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் சாலையில் பள்ளி கொண்டான் எனும் இடத்தில் அமைந்துள்ளது லாரல் மேல்நிலைப் பள்ளி. இந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவன் வெங்கடேஷ் மனஉளைச்சல் தாளாமல் தீக்குளித்து உயிரைவிட... கதறித் துடிக்கிறார்கள் அந்த மாணவனின் பெற்றோர்.

நடந்தவற்றை நம்மிடம் விம்மி வெடித்தபடி பகிர்ந்துகொண்டார் வெங்கடேஷின் அப்பா ஜெயசூரியன். ''செப்டம்பர் 24-ம் தேதி... என் மகன் வெங்கடேஷ் ஆங்கிலப் பாடத்தில் குறைந்த மதிப்பெண் எடுத்ததை சுட்டிக்காட்டி, 'நீயெல்லாம் பிட் அடிச்சாக்கூட பாஸ் ஆக மாட்டே. நீ வாழ்றதே வேஸ்ட். உன்னை மாதிரி ஆளுங்க செத்துத் தொலையலாம்’ என்று திட்டியிருக்கிறார் ஆங்கில ஆசிரியர் செல்வராஜ். 'வகுப்பு மாணவர்கள் யாரும் இவனோடு பேசக் கூடாது. மீறிப்பேசினால் அவங்களுக்கு டி.சி கொடுத்து அனுப்பிடுவேன்’ என்று வேறு மிரட்டிக் கட்டளையிட்டிருக்கிறார்.

மனம் நொந்துபோன என் பிள்ளை மறுநாள் பள்ளிக்குச் சென்றபோது அவனுடன் யாரும் பேசவில்லை. இதனால் அப்செட் ஆகி, அன்று மதிய சாப்பாட்டைக்கூட சாப்பிடாமல் வேதனையோடு

இருக்கிறான். அன்று மாலை வகுப்பு முடிந்து வீட்டுக்கு வந்தவன், வீட்டின் பின்பக்கம் உள்ள தோட்டத்துக்குப் போய், தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டான். அலறல் கேட்டு ஓடிப்போய், அவனை வாரி எடுத்துக்கொண்டு போய் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கே, போலீஸாரிடமும் மாஜிஸ் திரேட்டிடமும் அவன் கொடுத்த மரணவாக்கு மூலத்தில், தனக்கு தரப்பட்ட டார்ச்சரையும்... தனிமைப்படுத்தப்பட்டதால் தனக்கு நேர்ந்த அவமானத்தையும் விளக்கமாகச் சொன்னான் வெங்கடேஷ். அந்த மரண வலியிலும், 'அந்த ஆசிரியரை தண்டிச்சுத் திருத் தணும். எனக்கு நேர்ந்த நிலைமை மறுபடி ஒரு மாணவனுக்கு நடந்துடக்கூடாது'னு அதிகாரிகளிடம் வேண்டுகோள் வைத்தான். எங்க மகன் எங்களுக்குத் திரும்பக் கிடைச்சாப் போதும் என்று தவிப்போடு காத்திருந்தோம். எங்களை ஏமாத்திட்டு, மறுநாள் அவன் போயே போய்ட்டான்'' என்ற ஜெயசூரியன், கருகிப் படுக்கையில் கிடந்த தன் மகனின் முகம் நிழலாட.... பெருங்குரல் எடுத்து அழுகையில் கரைந்தார்.

தன்னைத்தானே சற்று தேற்றிக்கொண்டவராக, ''பள்ளிக்கூடத்தில் பிரஷர் அளவுக்கு மீறிப் போவதை ஏற்கெனவே எங்களிடம் சொல்லி இருந்தான் வெங்கடேஷ். அந்த ஆங்கில ஆசிரியர் செல்வராஜ் 70 வயதைத் தாண்டியவர். முதுமையின் காரணமாக பொறுமையை அடிக்கடி இழப்பவர். அவருடைய குடும்பத்திலும் ஏதோ பிரச்னை என்பதால், அந்த விரக்தியை மாணவர்களிடம் பயங்கரமாகக் காட்டுவாராம். அவரை இந்த வயதிலும் எதற்காகப் பள்ளியில் ஆசிரியராக வைத்திருக்கிறார்கள்? மைனர் பையனைத் தற் கொலைக்கு தூண்டுபவர்கள் மீது இ.பி.கோ 305 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இதற்கு தண்டனை கடுமையானது. ஆனால், போலீஸ் 306-வது பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்தப் பிரிவைக் காரணம் காட்டி குற்றவாளி தப்பிக்க முடியுமாம். இந்த விவகாரத்தை சும்மா விடப்போவது இல்லை'' என்றார் அந்த வேதனையிலும் உறுதி மிளிர!

- நமது நிருபர்

''அவங்க குடும்பத்துல ஏதோ பிரச்னை இருக்கும்!''

லாரல் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் பாலசுப்பிரமணியனிடம் பேசினோம். ''இப்போதெல்லாம் மாணவர்கள் தேவைக்கும் அதிகமா சென்சிடிவ்வா இருக்காங்க. இருந்தாலும், அந்த ஆசிரியர் சாதாரணமாகத் திட்டியதற்காக இப்படி ஒரு முடிவை அந்த பையன் எடுத்திருப்பான் என்பதை நம்ப முடியவில்லை. அவங்க குடும்பத்தில் ஏதேனும் பிரச்னை இருந்ததா என்பதையும் பார்க்கணும். நாங்கள் மாணவர்களை 'படி படி' என துன்புறுத்துவது இல்லை. எங்கள் பள்ளி ஆரம்பித்து 12 ஆண்டு வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததில் எங்களுக்கும் வருத்தம்தான்’ என்று கடமைக்கு ஒரு 'இரங்கலை'த் தெரிவித்து முடித்துக்கொண்டார் தாளாளர்.

பட்டுக்கோட்டை நகர காவல் நிலைய ஆய்வாளர் கணேஷமூர்த்தியிடம், மாணவன் வெங்கடேஷின் வாக்குமூலம் பற்றி நாம் கேட்டதற்கு, ''மாணவர் கொடுத்த மரணவாக்குமூலத்தின் அடிப்படையில்தான் வழக்குப் பதிவு செய்துள்ளோம். தற்கொலைக்குத் தூண்டிய குற்றத்துக்காக ஆசிரியர் செல்வராஜை கைது செய்து சிறைக்கு அனுப்பியுள்ளோம்'’ என்றார் அவர்.

ஆனால், மகனை இழந்து துடிக்கும் தந்தை ஜெயசூரியனோ, வலுவில்லாத ஒரு பிரிவின் கீழ் வழக்கைப் பதிவு செய்ததன் மூலம், வெங்கடேஷின் மரணத்துக்குக் காரணமானவர்களை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்ற முயற்சி நடக்கிறது என்ற குற்றச்சாட்டில் உறுதியாக நிற்கிறார். அதோடு, ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலர், ஓர் அமைச்சர் மூலமாக தன்னிடம் 'சமாதானப் பேச்சு' நடத்தியதாகவும்.... பள்ளி மீது பழி சொல்லாமல் ஒதுங்கிப்போகும்படி தனக்கு நெருக்கடி கொடுத்ததாகவும் கூறி அதிர வைக்கிறார்.

- அ.சாதிக் பாட்ஷா