''புலி வேட்டைக்குப் போகச்சொன்னால் எலி வேட்டைக்குப் போகிறார் டி.ஆர்.பாலு. கடப்பாரையை முழுங்கி விட்டு, செரிமானத்துக்கு சுக்குக்கசாயம் குடிக்கிறார் பாலு. அவர் காலத்தில் தொடங்கப்பட்ட பல திட்டங்கள் தூங்கிக் கொண்டு இருக்கின்றன. ஆனால், அதைப்பற்றி எல்லாம் அவருக்குக் கவலை இல்லை. எரிசாராய ஆலையைக் கொண்டுவர அவர் மீண்டும் முயற்சி எடுத்தால், அதைத் தடுக்க நானே நேரடியாக மக்களோடு சேர்ந்து போராடுவேன்'' இப்படிப் பாய்ந்திருப்பது அ.தி.மு.க-வினர் அல்ல. அவரது கட்சியைச் சேர்ந்தவர். அதுவும் சாதாரணத் தொண்டர் அல்ல. மத்திய அமைச்சர். ஆம், முன்னாள் அமைச்சர் பாலுவுக்கு எதிராக பழனி மாணிக்கம் பாய்ந்திருப்பது தஞ்சைத் தி.மு.க. கோஷ்டிப் பூசலின் உச்சமாகச் சொல்லப்படுகிறது!

அமைதியானவராக அறியப்பட்ட பழனிமாணிக்கம் கடந்த சனிக்கிழமை 'தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்துக்கு வாருங்கள்’ என்று செய்தியாளர்களுக்கு அழைப்பு விடுத்து, டி.ஆர்.பாலு மீது பாய்ந்தார்.

''தஞ்சாவூர்-பட்டுகோட்டை ரயில் பாதைத் திட்டத்துக்கான, சர்வே பணிகளுக்கு அனுமதி பெறுவதில் என்னுடைய முயற்சிகள் இருந்த போதி லும், என்னை கலந்து ஆலோசிக்காமலேயே இதை வெளியிட்டு பாராட்டு வாங்கிய அண்ணன் டி.ஆர்.பாலுவுக்கு என் நன்றி'' என்று எடுத்த எடுப்பிலேயே வேகம் கூட்டினார்.

''நான்கு மாதங்களுக்கு முன், பட்டுக்கோட்டையில் நான் நடத்திய ரயில்வே துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தின் போது... காரைக்குடி - பட்டுக்கோட்டை அகல ரயில் பாதைத் திட்டத்தை உடனே நடைமுறைப் படுத்தவும், பட்டுக்கோட்டை - தஞ்சாவூர் அகல ரயில் பாதைத் திட்டத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கவும் வலியுறுத்தினேன். பட்டுக்கோட்டை - திருத்துறைப்பூண்டி அகல ரயில்பாதைத் திட்டத்தை உடனே தொடங்கவும் வலியுறுத்தினேன். தஞ்சாவூர் டு சென்னைக்கு புதிதாக ஒரு தனிரயில் இயக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் ஜோஷியிடமும் வலியுறுத்தினேன். ஆனால், செயல்படாத அமைச்சர் போலவும், தொகுதி நலனில் அக்கறை இல்லாதவர் போலவும் என்னைச் சித்திரிக்க முயல்கிறார் டி.ஆர்.பாலு. மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துறை அமைச்சராக டி.ஆர்.பாலு பதவி வகித்தபோதுதான் சேது சமுத்திரத் திட்டம் தொடங்கப்பட்டு, இப்போது முடங்கி கிடக்கிறது. அதைப் பற்றி எல்லாம் பாலுவுக்கு அக்கறை இல்லை. இவர் ஐந்து ஆண்டுகள் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தபோது கூட, நாகப்பட்டினம் - திருச்சி, தஞ்சாவூர் - புதுக்கோட்டை, தஞ்சாவூர் - பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்தும் திட்டம் நிறைவேற்றப்படவில்லை. அதற்கு இவர் எள்ளளவும் கூட முயற்சி எடுக்கவில்லை. தஞ்சாவூரில் இவரால் தொடங்கப்பட்ட பாதாளச்சாக்கடைத் திட்டம் 10 ஆண்டுகள் ஆகியும் முடியவில்லை. அதனால்தான் தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியை தி.மு.க. இழந்தது. நகரமன்றத்தையும் இழந்தது. ஆனால், தன்னுடைய குடும்பத்தினருக்குச் சொந்தமான எரிசாராய ஆலை தொடர்பான பணிகளை பார்ப்பதற்காக, வாராவாரம் தஞ்சை வரும்போதெல்லாம் தவணை அறிவிப்புகளை வெளியிடுகிறார். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தஞ்சையில் தி.மு.க. வெற்றி பெற, என்னை விட, டி.ஆர். பாலு அதிகமாக உழைக்கிறார். அவருடைய ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற அவர் கொஞ்சமாவது உழைக்க வேண்டும்'' என்று கிண்டல் அடித்த பழனிமாணிக்கம், ''வடசேரியில் எரிசாராய ஆலையைக் கொண்டுவர அவர் முயற்சி செய்தால் விவசாயிகள், பொதுமக்கள் நலன் கருதி, அவர்களோடு சேர்ந்து நானும் போராடுவேன்'' என்று பிரகடனம் செய்து முடித்தார்.

இந்த விவகாரம் குறித்து டி.ஆர். பாலுவுக்குப் பதிலாக அவரது மகன் டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. நம்மிடம் பேசினார். ''அப்பா, எந்தப் பொறுப்பில் இருந்தாலும் தமிழகத்துக்கு நிறைய திட்டங்களைக் கொண்டு வருவாங்க. இப்ப ரயில்வே நிலைக்குழு தலைவரா இருப்பதால் கோவைக்கும் வேளாங்கண்ணிக்கும் ஏகப்பட்ட ரயில்கள் விட்டிருக்கார். திருப்பதிக்குக் கூட ஒரு ரயில் விட்டிருக்கார். அப்படின்னா ஆந்திரா தேர் தல்ல நிற்கப் போறாருன்னு அர்த்தமா?'' என்று திருப்பிக் கேட்டார்.

''கடந்த முறை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்ட டி.ஆர். பாலு, வரும் தேர்தலில் தஞ்சையில் நிற்க விரும்புகிறார். இது, பழனிமாணிக்கத்தின் தொகுதி என்பதால் இப்போதே தேர்தல் யுத்தத்தைத் தொடங்கி விட்டனர்'' என்கிறார்கள் தி.மு.க. உடன்பிறப்புகள்!

அதுசரி, தி.மு.க. மேலிடம் என்ன சொல்கிறது?

- கு.ராமகிருஷ்ணன்

படங்கள்:கே.குணசீலன்