அமைச்சரின் கணவர் என்றால் அதிகாரிகள் எந்த அளவுக்குப் பதுங்கு வார்கள் என்பதற்கு உதாரணம், இந்தச் சம்பவம்!

அமைச்சர் கோகுல இந்திரா, அவரது கணவர் சந்திரசேகர் மீதான நில அபகரிப்புப் புகார் குறித்து கடந்த 15.8.12 தேதியிட்ட ஜூ.வி. இதழில் 'கண்மாய்க்குள் பங்களா... பொதுப்பாதையில் சேம்பர்! - ஆக்கிரமிப்பு சர்ச்சையில் அமைச்சர் கோகுல இந்திரா’ என்று கட்டுரை வெளியிட்டு இருந்தோம். அந்த விவகாரத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றமே உத்தரவிட்டது. ஆனாலும், அதிகாரிகள் கண்டு கொள்ளாத நிலையில் இப்போது நீதிமன்றத்துக்கு மறுபடியும் போய் இருக்கிறது விவகாரம்!

நீதிமன்ற அவமதிப்பு வழக் கைத் தாக்கல் செய்த கமால் முகமதுவிடம் பேசினோம். ''கே. வைரவன்பட்டியில் அமைச்சர் கோகுல இந்திரா, கண்மாயை ஆக்கிரமித்து வீடு கட்டி இருப்பது பற்றியும், பொதுப்பாதையை ஆக்கி ரமித்து இருப்பது குறித்தும் 2008-ம் ஆண்டிலேயே கலெக்டரிடம்

புகார் கொடுத்தேன். முதலில் விசாரித்த தாசில்தார் சசிகலா, 'இதுக்கு எந்த ஆதாரமும் இல்லை’ என்று அறிக்கை கொடுத்தார். உடனே, கலெக்டரிடம் முறையிட்டேன். அப்போது, சர்வேயரை வைத்து அளந்து, ஆக்கிரமிப்பு இருப்பதை தாசில்தார் உறுதிப்படுத்தியும் நடவடிக்கை இல்லை. இவை அனைத்தும் தி.மு.க. ஆட்சியில் நடந்தவை. இந்தநிலையில், கோகுல இந்திரா, அவருடைய கணவர் சந்திரசேகர் ஆகியோர் மீதும்,

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் 19.5.12 அன்று வழக்குத் தொடர்ந்தேன். வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிவகங்கை கலெக்டர், டி.ஆர்.ஓ., தேவகோட்டை ஆர்.டி.ஓ., திருப்பத்தூர் தாசில்தார் ஆகிய நான்கு எதிர்மனுதாரர்களும் எட்டு வாரத்துக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உத்தரவிட்டார். நீதிமன்றமே உத்தரவிட்ட பிறகும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை'' என்றார் கோபமாக!

கமால் முகமதுவின் வழக்கறிஞர் கண்ணன், 'நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் செயல்படுத்தாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து இருக்கிறோம். நீதிமன்றத்தின் கண்டனத்துக்கும், கோபத்துக்கும் அவர்கள் நிச்சயம் ஆளாவார்கள்' என்றார் உறுதியான குரலில்.

இதுபற்றி சந்திரசேகரிடம் கேட்டோம். 'அவர்கள் நீதிமன்றத்தில் மனுதான் தாக்கல் செய்து இருக்கிறார்கள். இந்தப் பிரச்னை தொடர்பாக நாங்களும் ஒரு சிவில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். எல்லாவற்றையும் பார்த்து விட்டு, உண்மையின் அடிப்படையில்தான் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்' என்றார்.

பாவம் அதிகாரிகள், இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவிக்கின்றனர்!

- கே.கே.மகேஷ்

படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ், பா.காளிமுத்து