'பைத்தியக்காரத்தனம்...முட்டாள்தனம்... அறிவால் சிந்திக்காத பொறுப்பற்ற செயல்பாடு!’- தமிழ்நாடு சர்க்கரை ஆலைகளின் கூட்டமைப்பின் செயல்பாட்டைத்தான் இத்தனை கடுமையாக சாடியுள்ளார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமன். மொலாசஸ் ஏலம் தொடர்பாக கரும்பு விவசாயிகள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு அளித்த போதுதான் இத்தனை கடுமை காட்டி இருக்கிறார்!

இந்த வழக்கில் கரும்பு விவசாயிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அருள்மொழியிடம் பேசினோம்.

''தமிழ்நாட்டில் மொத்தம் 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் உள்ளன. கரும்பு விவசாயிகள் இந்த ஆலைகளுக்கு தங்கள் கரும்புகளை விற்பனை செய்கின்றனர். அதன்பிறகு, அவை பிழிந்தெடுக்கப்பட்டு சர்க்கரையாகக் காய்ச்சப்படுகிறது. அப்போது, தேங்கும் கழிவுப்பொருளான மொலாசஸ்தான் ஸ்பிரிட் தயாரிப்பில் முக்கிய மூலப்பொருள். தமிழ்நாடு சர்க்கரை ஆலைகளின் கூட்டமைப்பு மூலம் மொலாசஸ் ஏலம் விடப்பட்டு, அதில் கிடைக்கும் தொகை அந்தந்த சர்க்கரை ஆலைகளுக்குக் கொடுக்கப்படுகிறது. அந்த ஆலைகள், அந்தத் தொகையை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கின்றனர். மொலாசஸ் நல்ல விலைக்கு விற்கப்பட்டால், கரும்பு விவசாயிகளுக்கு நல்ல தொகை கிடைக்கும். ஆனால், மூன்று தனியார் நிறுவனங்கள் அதிக லாபம் சாம்பாதிக்கும் வகையில் திட்டமிட்டே இந்த மொலாசஸின் விலையைக் குறைத்து ஏலம் விடுகிறது, தமிழ்நாடு சர்க்கரை ஆலைகளின் கூட்டமைப்பு.

கடந்த 2006 முதல் 2009 வரை மொலாசஸின் விலை அதிகரித்துக் கொண்டேதான் இருந்தது. குறிப்பாக, 2008-09 ஆண்டில் ஒரு மெட்ரிக் டன் மொலாசஸ் 4,300 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. 2009-10

ஆண்டில் கரும்பு உற்பத்தி தமிழகத்தில் மிகவும் குறைவாக இருந்ததால், அந்த ஆண்டு மொலாசஸ் ஏலம் நடக்கவில்லை. 2010-11-ம் ஆண்டு மீண்டும் தொடங்கிய மொலாசஸ் ஏலத்தில், குறைந்தபட்சத் தொகை எவ்வளவு என்பதை நிர்ணயம் செய்யாமலேயே ஏலம் நடத்தி உள்ளனர். அதனால், ஒரு மெட்ரிக் டன் 1,550 ரூபாய் என்ற மிகக்குறைந்த தொகையை அரசுக்குச் செலுத்தி தனியார் நிறுவனங்கள் மொலாசஸை எடுத்துச் சென்றன. இதே முறையைப் பின்பற்றியே 2012-ம் ஆண்டுக்கான ஏலத்தையும் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது என்பதுதான் அதிரவைக்கிறது.

வழக்கமாக, தமிழகத்தின் மொலாசஸ் விலை, பக்கத்து மாநிலமான புதுச்சேரியின் விலையை ஒட்டியே ஏலம் போகும். அங்கு மொலாசஸ் விலை 4,000 ரூபாயில் தொடங்கி 4,300 வரை இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் 1,410 ரூபாய் மட்டுமே விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது, தனியார் கம்பெனிகள் கொள்ளை லாபம் சம்பாதிப்பதற்காகத் திட்டமிட்டு செய்யப்பட்ட ஏற்பாடு. டெண்டரில் அதிக விலை கேட்ட நிறு வனம், அதற்கான சீலிட்ட உறையைக் கொடுத்த பிறகு, அதில் திருத்தம் செய்து மிகக்குறைந்த விலைக்கு ஏலம் எடுக்கிறது. இதை எதிர்த்தே நாங்கள் வழக்குத் தொடர்தோம்'' என்றார்.

நீதிமன்றத்துக்கு வந்த இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதி ஹரிபரந்தாமன், கூட்டுறவு ஆலைகளின் பொறுப்பற்ற போக்கை வன்மையாகக் கண்டித்ததுடன், தனியார் நிறுவனங்களையும் வறுத்தெடுத்தார். ''அரசு அதிகாரிகளின் இந்தச் செயல்பாடு பைத்தியக்காரத்தனமானது; முட்டாள்தனமானது. 2011-லிலேயே இந்தத் தவறு தொடங்கி உள்ளது. ஆனால், அரசாங்கம் இதை உணராமல் இருப்பது வியப்பளிக்கிறது. உள்ளூர்ச் சந்தையில் 1,500 ரூபாய்க்கு மொலாசஸ் விற்கப்பட்டதைக் கூட கருத்தில் கொள்ளாமல், அதற்கும் குறைவாக விலை நிர்ணயித்து தனியார் நிறுவனங்களுக்கு விற்றுள்ளனர். அரசு அதிகாரிகளின் மெத்தனத்தை தனியார் வியாபாரிகள் மிகத்திறமையாகப் பயன் படுத்தி உள்ளனர். இதன்மூலம் அந்த மூன்று தனியார் நிறுவனங்களும் ஒட்டுமொத்த மொலாசஸ் குத்தகையை தங்களின் ஏகபோக கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கின்றன.

டெண்டரில் பங்கேற்ற நிறுவனங்கள், முதலில் கூறிய விலையை பிறகு திருத்தி இருக்கின்றன. சீல் வைக்கப்பட்ட கவரில் இருக்கும் ஆவணங்களை அவர்களால் எப்படித் திருத்த முடிந்தது? எப்போது நடந்தது இந்தத் திருத்தம்? அதிகாரிகளின் துணையின்றி இது சாத்தியமா? தங்களின் சுயலாபத்துக்காக அரசு அதிகாரிகளும், தனியார் நிறுவனங்களும் பல ஆயிரக்கணக்கான ஏழை விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதைப் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. இதற்குமுன் நடத்தப்பட்ட ஏலத்தை நீதிமன்றம் ரத்துசெய்து உத்தரவிடுகிறது. மீண்டும் நியாயமான முறையில், உரிய விளம்பரங்கள் செய்யப்பட்டு ஏலம் நடத்த வேண்டும். அதிகாரிகளின் நடவடிக்கைகள், இதுபோல ஊழல் கறை படிந்ததாக இருப்பதை அரசாங்கம் வேடிக்கை பார்க்கக் கூடாது. தலைமைச் செயலாளர் இது குறித்து உறுதியளிக்க வேண்டும். தவறு செய்துள்ள அதிகாரிகள் மீதும், அதற்கு சூத்திரதாரியாக இருந்த தனியார் நிறுவனங்களின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விவசாயிகளின் அலைக்கழிப்புக்குக் காரணமாக இருந்த தனியார் நிறுவனங்கள் ஒவ்வொன்றும் தலா 50 ஆயிரம் ரூபாயை அவர்களுக்கு வழங்க வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.

நீதிபதியின் இந்த விளாசல் பொறுப்பற்ற அதிகாரிகளுக்கு மட்டும் அல்ல... அவர்களைக் கண்காணிக்காத அரசுக்கும்தான். நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு என்ன பதில் சொல்லப்போகிறது தமிழ்நாடு சர்க்கரை ஆலைகளின் கூட்டமைப்பு?

- ஜோ.ஸ்டாலின்