ஒரு கொள்ளை... பல சதிகளை அம்பலப்படுத்தி இருக்கிறது!

மதுரை முத்தூட் ஃபின்கார்ப் நிறுவனத்தில் சுமார் 38 கிலோ நகை கொள்ளை போன சம்பவத்தில், 20 நாட்களுக்குள் கிட்டத்தட்ட 90 சதவிகித நகைகளை போலீஸார் மீட்டு விட்டனர். கொள்ளை பற்றி கிடைத்திருக்கும் தகவல்கள் கிறுகிறுக்க வைக்கின்றன. கொள்ளைக்கு மூளையாகச் செயல்பட்டவர், மதுரை முடக்குச்சாலையைச் சேர்ந்த செல்வின் என்கிறார்கள்.

யார் இந்த செல்வின்?

செல்வினின் அப்பா ஆரோக்கியம், மதுரா கோட்ஸ் பாண்டியன் மில்லில் வேலை பார்த்து வி.ஆர்.எஸ்.

வாங்கியவர். அம்மா ரெயில்வே மருத்துவமனையில் செவிலியர் கண்காணிப்பாளராக (மேட்ரன்) இருக்கிறார். சென்னை லயோலா கல்லூரியில் விஸ்காம் படித்த செல்வினுக்கு எத்தனையோ தொழில்கள் தொடங்கிக் கொடுத்து இருக்கிறார்கள். அத்தனையும் பணால் என்ற நிலையில்தான் மதுரையில் தற்செயலாக பழைய நண்பன் சூரிய ஆனந்தைச் சந்தித்தார் செல்வின். இருவரும் சேர்ந்து முத்தூட் நிறுவனத்தில் கொள்ளை அடிக்கத் திட்டம் போட்டு இருக்கிறார்கள். ஆனால், இருவர் மட்டுமே இதைச்செய்ய முடியாது என்பதால், தன்னுடைய நட்பு, உறவு வட்டத்தில் இருந்த சிலரையும் உள்ளே இழுத்திருக்கிறார் செல்வின். செஞ்சியைச் சேர்ந்த சந்துரு, செந்தில், அரக்கோணம் முகமது இத்ரீஸ், நெல்லையைச் சேர்ந்த கார்த்திக், கொடைக்கானல் வினோத், ரவிச்சந்திரன், ராஜா... என, தனக்குத் தெரிந்த பலரையும் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் நேரடியாக ஈடுபடுத்திய செல்வின், தன்னுடைய மாமா மகள் ஜூலியா மேரி, கள்ளக்காதலி ஜெனிஃபர் ஆகியோரையும் பயன்படுத்திக் கொண்டார்.

அடேங்கப்பா கொள்ளை!

முத்தூட் ஃபின்கார்ப் நிறுவன மேலாளர்களில் ஒருவரான சதீஷ்குமார், பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் வீக் என்பதைத் தெரிந்து கொண்டார் செல்வின். உடனே, தன் மாமா மகள் ஜூலிக்கு புதிய சிம் கார்டு ஒன்றை வாங்கிக் கொடுத்து, அவரோடு பேச வைத்திருக்கிறார். அவர் சொன்ன இடத்துக்கு வந்த சதீஷ்குமார் கடத்தப்பட, அதேநேரத்தில் மற்றொரு மேலாளரான பாலசுப்பிரமணியத்தையும் கடத்தி இருவரிடம் இருந்தும் லாக்கர் சாவிகளைப் பறித்தது செல்வின் கும்பல். காவலாளியை ஏமாற்றி வேறு இடத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டு, குண்டூசி விழும் சத்தம்கூட கேட்காமல் சைலன்ட்டாக 38 கிலோ நகைகளையும் கொள்ளை அடித்து விட்டது அந்தக் கும்பல். கொள்ளை அடித்த நகைகளை எல்லாம் கள்ளக்காதலி ஜெனிஃபர் வீட்டுக்குக் கொண்டுசென்று பங்கு போட்ட கும்பல், அடைத்து வைக்கப்பட்டிருந்த மேலாளர்கள் இருவரையும் அதி காலையில் காரில் ஏற்றிச்சென்று கூடல்நகரில் இறக்கிவிட்டுப் பறந்து விட்டது.

எப்படிப் பிடித்தனர்?

''சதீஷ்குமாரிடம் பேசிய பெண்ணின் நம்பரைக் கண்டுபிடித்து, அதன் முலம் கொள்ளைக் கும்பலை நெருங்கினோம். சரண் அடைய வந்த செல்வின் கொடுத்த தகவலின் அடிப்படையில், சந்துரு, செந்தில், முகமது இத்ரீஸ், கார்த்திக், வினோத், ரவிச்சந்திரன், ராஜா, ஜூலி ஆகிய ஒன்பது பேரையும் கைது செய்தோம். இதில் கார்த்திக், ரெயில்வே போலீஸாகத் தேர்வு செய்யப்பட்டவர். கூடா நட்பால், வேலையில் சேரும் நேரத்தில் ஜெயிலுக்குப் போய்விட்டார். செல் வினின் நண்பர்களான ராஜ்குமார், சக்தி, வெங்கடேஷ், சாலமன், சாகுல்ஹமீது, மதுரை மீனாம்பாள்புரத்தில் பள்ளிக்கூடம் நடத்தும் வினோத் ஆகியோரிடம் இருந்து சுமார் 10 கிலோ நகைகளை மீட்டுள்ளோம். இவர்களில் யாரை எல்லாம் கைது செய்வது என்று இன்னும் தீர்மானிக்கவில்லை.

செல்வினின் கள்ளக்காதலியான ஜெனிஃபரின் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் பாலத்தின் அடியில், பழைய சாக்குப்பையில் மூட்டையாகக் கட்டிப்போட்டிருந்த 10 கிலோ நகைகளையும் கண்டுபிடித்தோம். ஜெனிஃபர் தன் காதலர்களில் ஒருவரான முஃபின் தாஜ் என்பவரிடம் கொடுத்து வைத்திருந்த நகைகைளையும் பறிமுதல் செய்தோம். ஆக மொத்தம், 34 கிலோ நகை மீட்கப்பட்டுவிட்டது' என்கிறார்கள் போலீஸார்.

போலீஸ் மீதும் சந்தேகம்!

'பெரும்பாலான நகைகளை மீட்டுவிட்டபோதிலும், 23-ம் தேதி நிலவரப்படி, அதிகாரபூர்வமாக வெறும் 3.810 கிலோ நகைகள் மட்டுமே மீட்கப்பட்டதாகப் பதிவுசெய்திருக்கிறார்கள் போலீஸார். கொள்ளைக்கும்பலில் பெரும்பாலானோர் பிடிபட்டுவிட்டபோதும், அவர்களைக் கைது செய்யாமல் இழுத்தடிக்கிறார்கள்'' என்று போலீஸ் மீது சந்தேகம் கிளப்பினார்கள் சில விவரப்புள்ளிகள்.

இதுபற்றி தனிப்படையினரிடம் கேட்டால், 'விஸ்வநாதபுரத்தில் தனக்கு வீடு பிடித்துக் கொடுத்த புரோக்கரான மருதுராஜிடம் சுமார் 3 கிலோ நகைகளைக் கொடுத்ததாக செல்வின் சொல்கிறார். ஆனால், செல்வின் 1 கிலோதான் கொடுத்ததாக மருதுராஜ் சொல்கிறார். இதுபோன்ற குளறுபடியால் மீதி நகைகளை மீட்பதில் தாமதம் ஏற்படுகிறது. சீக்கிரம் அவற்றையும் மீட்டு விடுவோம்'' என்கிறார்கள்.

எப்படியானாலும் போலீஸாருக்கு வெற்றிதான்!

- கே.கே.மகேஷ், படங்கள்: பா.காளிமுத்து