மின் வெட்டைப் போலவே டெங்கு நோயும் தமிழக மக்களை வாட்டி வதைக்கும் கொடுமை தொடர்கிறது. மதுரை மாவட்டத்தில் மட்டும் கடந்த 28-ம் தேதி காலை வரையிலும் மர்மக் காய்ச்சலுக்கு 25 பேர் பலியாகி இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் 16 பேர் மேலூர் மற்றும் சுற்றுப்புறத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அந்தப் பகுதியில் அலறல் நீடிக்கிறது!

கடந்த செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் மதுரை மாவட்டத்தின் கடைக்கோடியில் விருதுநகர் மாவட்ட எல்லையில் அமைந்திருக்கும் பெரிய சிட்டுலொட்டி கிராமத்தில், திடீரென மர்மக் காய்ச்சல் பரவியது. சுகாதாரத் துறையினர் யாரும் அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாததால், ஐந்து பேர் பலியானார்கள். அதைத் தொடர்ந்து வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார மேற்பார்வையாளர் ஆகியோரை சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள், 'இது டெங்கு அல்ல, சாதாரண வைரஸ் காய்ச்சல்தான்’ என்று சமாளித்தார்கள்.

அக்டோபர் 2-வது வாரத்தில் இருந்து மேலூர் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களில் மர்மக் காய்ச்சல் பரவத் தொடங்கியது. எட்டு குழந்தைகள் உள்பட 16 பேர் இறந்தனர். இதில், மேலூர் அரசு

மருத்துவமனையில் ஆண் செவிலியராக இருந்த கார்த்திகேயனும் ஒருவர். மேலூர் கடலைக்காரத் தெருவைச் சேர்ந்த ஹரிசக்தி என்ற ஆறு வயது சிறுமி, டெங்கு காய்ச்சலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். தன்னுடைய பிறந்த நாளன்று அவள் இறந்துபோகவே, சோகத்தில் அவளது குடும்பத்தினர் கதறித் துடித்தார்கள்.

மதுரை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில், சிகிச்சை பெறுபவர்கள் இறக்கும் வரையில் அவர்கள் எந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதற்கான ரத்தப் பரிசோதனை முடிவுகள்கூட வருவதே இல்லை. மாவட்டத் தலைமை மருத்துவமனையில்கூட, ராஜப்பிரியா என்ற சிறுமி இறந்த பிறகுதான், அவருக்கு டெங்கு காய்ச்சல் என்று ரிசல்ட் வந்தது. பழைய சுக்காம்பட்டி கிராமத்தில் அதிகாரிகளைக் கண்டித்து, டெங்குவால் இறந்த தொட்டிச்சி என்பவரது சடலத்தை நடுரோட்டில் வைத்து கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலூர் அரசு மருத்துவமனையில் ஆண் செவிலியர் கார்த்திகேயன் இறந்ததால், சக நர்ஸ்கள் வேலை நிறுத்தம் செய்து தங்கள் வருத்தத்தைப் பதிவுசெய்தார்கள்.

மதுரை காவல் துறை உதவி ஆணையர் வெள்ளத்துரை, தனது சொந்த சகோதரியின் மகனை டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்திருந்தார். நான்கு நாட்கள் ஆகியும் எந்த முன்னேற்றமும் இல்லை. உடலில் பிளேட்லெட் செல்கள், ரத்த வெள்ளை அணுக்கள் போன்றவை மிகவும் குறைந்து சாகும் நிலைக்கு அந்த இளைஞன் போய்விட்டார். ஆனாலும், அவருக்குப் பயிற்சி மருத்துவர்கள் மட்டுமே தொடர்ந்து சிகிச்சை அளித்தார்களாம். வெள்ளத்துரை, அங்கிருந்த டாக்டர்களுடன் ஆவேசமான வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. 'டெங்கு காய்ச்சலுக்குப் பயப்படாதீங்க. அரசாங்க ஆஸ்பத்திரிக்கு வாங்கன்னு நீங்கதானய்யா விளம்பரம் பண்றீங்க. இங்க வந்தா, ட்ரீட்மென்ட் கொடுக்காமலே கொல்றீங்க. நீங்க எதுவும் சொல்லாம இருந்தா, நாங்க பிரைவேட் ஆஸ்பத்திரிக்காவது கொண்டுபோயிருப்போம்ல' என்று அவர் சண்டை போட்டார். ஆனாலும் அடுத்து சிகிச்சை இல்லாமல் போகவே, உடனே தனியார் மருத்துவமனையில் சேர்த்து தன் மருமகனைக் குணப்படுத்தி வருகிறார்.

இப்போது ஏரியாவில் பிரச்னை விஸ்வருபம் எடுத்துள்ளதால், கலெக்டர் அன்சுல் மிஸ்ரா கடந்த ஒரு வாரமாகவே மேலூர் பகுதியில் ஆய்வு நடத்திவருகிறார். மாநில சுகாதாரத் துறை செயலாளர் பரஞ்சோதி, நகராட்சிகளின் மண்டல இயக்குனர் குபேந்திரன் உள்ளிட்டோரும் மேலூர் வந்து பார்வையிட்டுத் திரும்பி உள்ளார்கள்.

மதுரையில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனையில் இந்த கண்ணாமூச்சி ஆட்டம்தான் தொடர்கிறது. டெங்கு இருக்கிறதா, இல்லையா என்பது தெரியாமலே பலரும் பலியாகிவருகிறார்கள். சிகிச்சைக்காக அட்மிட் ஆகிறவர்களுக்கு என்ன சிகிச்சை அளிக்கிறார்கள் என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஏனென்றால் டெங்கு இருப்பதையே இன்னமும் ஒப்புக்கொள்ளாதவர்கள், அதற்கு எப்படி சிகிச்சை அளிப்பார்கள்?

- கே.கே.மகேஷ், படங்கள்: பா.காளிமுத்து