தமிழகத்தில் சாதிய வன்முறை பெருகி வருகிறது என்பதற்கு உதாரணமாக ஒரு சப்-இன்ஸ்பெக்டரே உயிரை இழந்து இருக்கிறார்!

ஆண்டுதோறும் அக்டோபர் 27-ம் தேதி மருது சகோதர்களின் குருபூஜை சிவகங்கை மாவட்டத்தில் தடபுடலாக நடைபெறும். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், திருப்பத்தூர் மற்றும் காளையார்கோவிலுக்குச் சென்று அஞ்சலி செலுத்துவார்கள்.

அப்படி, கடந்த 27-ம் தேதி காலை புதுக்குளத்தில் இருந்து சிலர் சுமோ காரில் காளையார்கோவில் புறப்பட்டனர். வழியில், வேம்பத்தூர் மிக்கேல்பட்டினம் ஆட்டோ ஸ்டாண்டில் வைக்கப்பட்டு இருந்த

மருது பாண்டியர் படத்துக்கு மாலை அணிவித்துவிட்டு, ஆர்ப்பாட்டமாக வலம் வந்தனர்.

அப்போது, அஞ்சலி செலுத்த வந்த செல்லப்பாண்டியன் என்பவருக்கும், சுமோவில் இருந்த பிரபு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. பிரபு தரப்பினர் செல்லப்பாண்டியனை கத்தியால் குத்திவிட்டுத் தப்பி ஓடினர்.

தகவல் அறிந்து மானாமதுரை டி.எஸ்.பி. கருணாநிதி, சப்-இன்ஸ்பெக்டர் ஆல்வின் சுதன் உள்ளிட்ட போலீஸார் அவர்களைப் பிடிக்கச் சென்றனர். வேம்பத்தூர் அருகே பிரபு தரப்பினரை நிறுத்திய போலீஸார், காரின் மேற்பகுதியில் அமர்ந்து இருந்தவர்களைக் கீழே இறங்கச் சொன்னார்கள். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் டி.எஸ்.பி. காரை சேதப்படுத்திய பிரபு தரப்பினர், ரோட்டில் இருந்து குளத்துக்குள் காரைத் தள்ளிவிட்டனர். அதைத் தடுக்க முயன்ற எஸ்.ஐ. ஆல்வின் சுதனுக்கு நெஞ்சில் கத்திக்குத்து விழுந்தது. கழுத்தின் பின்புறமும் வெட்டினர். இதேபோல ஏட்டு சிவகுமார், உளவுப் பிரிவு காவலர் கர்ணன் ஆகியோருக்கும் கத்திக் குத்து விழுந்தது.

ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர்களை ஆம்புலன்ஸ் வரவழைத்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு போலீஸார் கொண்டுசெல்ல... வழியிலேயே ஆல்வின் சுதன் இறந்து விட்டார். ஆல்வினுடன் 2011 பேட்ஜில் தேர்வான சில சப்-இன்ஸ்பெக்டர்களும் நண்பர்களும் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். அவர்கள் நம்மிடம், ''ஆல்வினின் அப்பா ராமேஸ்வரத்தில் மீன்பிடித் தொழில் செய்து வந்தார். முதலில், சிறைக்காவலர் பணியில் சேர்ந்த ஆல்வின் அதன்பிறகு, போலீஸ் தேர்வில் கலந்துகொண்டு இரண்டாம் நிலைக் காவலர் ஆனார். ஆனாலும், தொடர்ந்து முயற்சி செய்து எஸ்.ஐ-யாகத் தேர்வு ஆனார். 2011 பேட்சில் பயிற்சி பெற்ற எஸ்.ஐ-கள் பட்டாலியனைத் தலைமையேற்று வழி நடத்தியவர் ஆல்வின். துப்பாக்கி சுடுதலிலும் அவர்தான் ஃபர்ஸ்ட். பரமக்குடிச் சம்பவத்துக்குப் பிறகு, பந்தோபஸ்து பணிக்குச் செல்லும் போலீஸார் துப்பாக்கி எடுத்துச் செல்லக்கூடாது என்று உயர் அதிகாரிகள் உத்தரவு போட்டுவிட்டனர். துப்பாக்கி வைத்திருந்தால், அவர்களால் ஆல்வினைக் கொல்ல முடிந்து இருக்காது'' என்று வருத்தப்பட்டனர்.

கொலைகாரர்கள் சென்ற சுமோ கார் நம்பரை அனைத்து ஸ்டேஷன்களுக்கும் சொல்லி, உஷார்படுத்தினர். சிவகங்கை - கல்லல் ரோட்டில் செம்பனூர் என்ற இடத்தில் பந்தோபஸ்து பணியில் இருந்த தேனி மாவட்ட போலீஸார், அந்த காரை மடக்கிப் பிடித்தனர். அதில் இருந்த 10 பேரையும் பிடித்து கல்லல் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டுசெல்ல... டி.ஐ.ஜி., எஸ்.பி. உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு குவிந்து விட்டனர். முக்கியக்குற்றவாளியான பிரபு உள்ளிட்டவர்கள் வேறு வாகனத்துக்கு மாறித் தப்பிச்சென்றுவிட்டதும், வழியில் வேறு நபர்களுக்கு லிஃப்ட் கொடுத்து அந்த காரில் அழைத்து வந்திருப்பதும் தெரியவந்தது. புதுக்குளம் அய்யனார், பாரதி உள்ளிட்ட சிலர் சிக்கி உள்ளனர். இவர்கள் மீதும், தப்பியோடிய ரவுடி பிரபு மீதும் சிவகங்கை, திருப்பாச் சேத்தி, சிப்காட் காவல் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இப்போது அவர்களை சிவகங்கைக்கு கொண்டுசென்று விசாரித்து வருகிறார்கள் போலீஸார்.

மார்ச்சுவரியில் இருந்த எஸ்.ஐ.ஆல்வின் சுதன் உடலுக்கு, மறுநாள் காலையில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜு ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். ஆல்வின் சுதன் குடும்பத்துக்கு 5 லட்ச ரூபாய் நிவாரணமும், காயம் அடைந்த போலீஸாரின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் நிவாரணமும் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்தைப் பார்வையிட வந்த டி.ஜி.பி. ராமானுஜத்திடம், ''போலீஸ் அதிகாரிகள் துப்பாக்கி கொண்டுபோகத் தடைவிதித்தது ஏன்?'' என்று கேட்டோம். ''அப்படி எந்தத் தடையும் விதிக்கவில்லை'' என்றார்.

முக்கியக் குற்றவாளியான பிரபுவை தங்கள் கஸ்டடிக்குப் போலீஸ் கொண்டு வந்துவிட்டதாக கடைசி நேரத் தகவல்கள் பரபரக்கின்றன. அதனால், எந்த நிமிடங்களிலும் சில என்கவுன்ட்டர்களை எதிர்பார்க்கலாம்!

- கே.கே.மகேஷ்,

படங்கள்: சாய்தர்மராஜ்,
பிரதீப் ஸ்டீபன் ராஜ்

கதறிய தந்தை!

இறந்த எஸ்.ஐ. ஆல்வின் சுதன் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கைலாசபுரத்தைச் சேர்ந்தவர். 27 வயது இளைஞரான ஆல்வின் திருமணம் ஆகாதவர்.

ஆல்வினின் தந்தை தவசுபால், ''நான் கஷ்டப்படுறதை உணர்ந்து, சின்ன வயசுலேயே ரொம்ப பொறுப்பா இருந்தான். எங்களோட ஒரே நம்பிக்கை அவன்தான். ராமேஸ்வரத்தில் வாடகை வீட்டில் கஷ்டப்பட்டப்ப, 'கவலைப் படாதீங்கப்பா... நம்ம ஊர்ல சொந்த வீடு கட்டுவோம்’னு சொன்னான். அப்படியே வீடு கட்டிட்டான். கிரகப்பிரவேசத்துக்குக்கூட அவன் வரலை. கல்யாணமாகி இந்த வீட்டுல புள்ளைகுட்டிகளோடு வாழ்வான்னு கனவு கண்டேன். ஆனா, புதுவீட்டுக்குப் பிணமாத்தான் வருவான்னு நினைக்கவே இல்லை'' என்று கதறினார்.

- ஆன்டனிராஜ், படம்: எல்.ராஜேந்திரன்