Election bannerElection banner
Published:Updated:

கேரளா: பலாத்கார வழக்கில் 18 ஆண்டுகளுக்கு பின்னர் சிறுமிக்கு கிடைத்த நீதி!

கேரளா:  பலாத்கார வழக்கில் 18 ஆண்டுகளுக்கு பின்னர் சிறுமிக்கு கிடைத்த நீதி!
கேரளா: பலாத்கார வழக்கில் 18 ஆண்டுகளுக்கு பின்னர் சிறுமிக்கு கிடைத்த நீதி!

கேரளா: பலாத்கார வழக்கில் 18 ஆண்டுகளுக்கு பின்னர் சிறுமிக்கு கிடைத்த நீதி!

கேரளா:  பலாத்கார வழக்கில் 18 ஆண்டுகளுக்கு பின்னர் சிறுமிக்கு கிடைத்த நீதி!

கொச்சி: கேரள மாநிலத்தை உலுக்கிய சூரியநெல்லி பாலியல் பலாத்கார வழக்கின் முக்கிய குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்தும்,  இதர குற்றவாளிகளுக்கு 13 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் விதித்து  நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கேரள மாநிலம் சூரியநெல்லியை சேர்ந்த 16 வயது சிறுமி 1996 ஆம் ஆண்டு, 40க்கும் மேற்பட்டவர்களால் கேரளா மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தில் சிறுமியை சீரழித்தவர்களில் அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் என பலருக்கும் தொடர்பு இருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் கிளம்பியது. அப்போதைய காங்கிரஸ் பிரமுகர் குரியனுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கில் இருந்து குரியன் விடுவிக்கப்பட்டார். 41 பேர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கீழ் நீதிமன்றம், அவர்களில் 5 பேரை விடுதலை செய்து, 36 பேருக்கு தண்டனை வழங்கியது. இதில் வழக்கறிஞர் தர்மராஜன் என்பவருக்கு மட்டும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது.

இதனை எதிர்த்து, குற்றவாளிகள் தரப்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அப்போது, வழக்கறிஞர் தர்மராஜன் என்பவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை 5 ஆண்டுகள் சிறை தண்டனையாக குறைத்தும், மற்றவர்களை விடுதலை செய்தும் தீர்ப்பு வழங்கியது.

இதை எதிர்த்து கேரள அரசு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. அதில், சமீபத்தில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்,  உயர் நீதிமன்றம் விதித்த தீர்ப்பை ரத்து செய்தது. சூரிய நெல்லி சிறுமி பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கை கேரள உயர் நீதிமன்றம் மறு விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மறுவிசாரணை நடைபெற்று வந்தபோது, குற்றஞ்சாட்டப்பட்ட 35 பேரில் 5 பேர் மரணம் அடைந்துவிட்டனர்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய கேரள உயர் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்கு மூலங்கள் உண்மைதான் என்பதற்கான ஆதாரத்தின் அடிப்படையில் முதல் குற்றவாளியான தர்மராஜனுக்கு ஆயுள் தண்டனையும், இதர 23  குற்றவாளிகளுக்கு 13 ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனையும் வழங்கி நீதிபதிகள் கே.டி.சங்கரன் மற்றும் எம்.எல்.ஜோசப் பிரான்சிஸ் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு