Published:Updated:

விழுப்புரம் அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு!

Vikatan Correspondent
விழுப்புரம் அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு!
விழுப்புரம் அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகம் அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை, 16 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்ட நிலையில், சிகிச்சைபலனின்றி உயிரிழந்தது. 

விழுப்புரம் அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு!

தியாகதுருகம் அருகே உள்ள பள்ளகசேரியை சேர்ந்த ராமச்சந்திரன்- அஞ்சலை ஆகியோரின் 3 வயது மகள் மதுமிதா. சனிக்கிழமையன்று காலை 9 மணிக்கு ராமச்சந்திரன் தனது மகள் மதுமிதாவுடன் பழனி என்பவரின் தோட்டத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது, தோட்டத்தில் மதுமிதா விளையாட சென்றுவிட்டார். ராமச்சந்திரன் தனது வேலையை பார்க்க சென்று விட்டார்.

மூடப்படாத ஆழ்துளை கிணறு

இந்நிலையில், தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த மதுமிதா, மூடப்படாத நிலையில் இருந்த 500 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தாள். மகளின் அலறல் சத்தம் கேட்டு ராமச்சந்திரன் ஓடிவந்துள்ளார். மகள் ஆழ்துளை கிணற்றில் விழுந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

பக்கவாட்டில் பள்ளம் தோண்டப்படுகிறது

தீயணைப்பு வீரர்கள் 5 வண்டிகளில் விரைந்து வந்து குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 3 பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. 30 அடி வரை பள்ளம் தோண்டப்பட்டு, 30 அடி பள்ளத்தின் பக்கவாட்டில் துளை போடும் பணியும்  மேற்கொள்ளப்பட்டது.

2 சிலிண்டர்களில் ஆக்சிஜன் செலுத்தம்

மேலும் குழந்தைக்கு மூச்சி திணறல் ஏற்படாமல் இருக்க 2 சிலிண்டர்கள் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வந்தது. தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வண்டிகள் நிறுத்தப்பட்டிருந்தன.

ரோபோட்டிக் மூலம் மீட்பு நடவடிக்கை

திருச்சி மற்றும் மதுரையில் வந்த மீட்புக்குழுவினரும்  ரோபோட்டிக் இயந்திரம் மூலம் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

இந்நிலையில் 16 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் இன்று அதிகாலை 2.45 மணி அளவில் சிறுமி மீட்கப்பட்டாள். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள்.

இதனை அறிந்த அப்பகுதி மக்கள் மிகுந்த துயருற்றனர். உயிரிழந்த சிறுமியின் பெற்றோர் கதறி அழுதது மீட்புக்குழுவினரையும் கலங்க வைத்தது.