அந்த இரண்டு பேருமே சகோதரர்கள். ஒருவரை ஒருவர் கொல்வதற்குத் திட்டமிட்டனர். ஆற்றில் குளிக்கப் போகும்போது கொன்றுவிடுவது என்று நினைத்தனர். இருவரது இடுப்பிலும் கத்தி இருந்தது. ஒருவரைக் குத்த இன்னொருவர் முயற்சிக்கும்போது இருவருமே தண் ணீருக்குள் மூழ்கினர். தப்பித்து விட்டனர். இது, தந்திரக் கதைகளில் ஒன்று!

ஆனால் நிஜத்தில்...? கடந்த வாரத்தில் டெல்லியில் ஒரு சம்பவம்... சகோதரர்கள் இருவருக்குள் நடந்த சண்டை இருவரது உயிரையும் பறித்து விட்டது. இவர்கள் இருவரும் சாமானியர்கள் அல்ல. பல்லாயிரம் கோடி பணத்துக்குச் சொந்தக்காரர்கள்.

டெல்லி, நொய்டா, லக்னோ, மொஹ்ரதாபாத், லூதியானா போன்ற நகரங்களில் வேவ்ஸ் சாராயத் தொழிற்சாலை, வேவ்ஸ் ரியல் எஸ்டேட், வேவ்ஸ் சர்க்கரை ஆலை, வேவ்ஸ் மல்டிஃப்ளெக்ஸ் சினிமா அரங்குகள், வேவ்ஸ் பேப்பர் மில்கள், வேவ்ஸ் குளிர்பான பாட்டில் தயாரிப்புத் தொழிற்சாலைகள் என, கொடி கட்டிப் பறக்கும் நிறுவனங்கள்தான், சந்தா குழும நிறுவனங்கள். இதன்அதிபர் குர்தீப் சிங் சந்தா என்ற பான்டி சந்தாவும் அவருடைய இளைய சகோதரரான ஹர்தீப் சந்தாவும்தான் ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு சாக... ஆடிப்போய் இருக்கிறது டெல்லி வட்டாரம். இவ்வளவு சொத்துக்கள் இருந்தும் ஒரு பண்ணை வீட்டுக்காக செத்துப்போயிருக்கிறார்கள்.

தெற்கு டெல்லியின் சட்டர்பூர் நகரில் இருக்கிறது வேவ்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 30 ஏக்கர்

நிலத்தில் அமைந்த பண்ணை வீடு. கடந்த 17-ம் தேதி காலை 10.30 மணிக்கு பான்டி சந்தா, தன் நண்பரான உத்தர்கண்ட் நகர சிறுபான்மைத் துறை அதிகாரி சுக்தேவ் சிங்குடன் பண்ணை வீட்டுக்கு வந்தார். அந்த வீட்டின் முகப்பில் இருந்த ஹர்தீப் சிங்கின் பெயரை தன் ஆட்களுடன் கறுப்பு பெயின்டைக்கொண்டு அழிக்க முற்பட்டார். உடனே, பண்ணையில் இருந்த ஆட்கள், ஹர்தீப் சிங்குக்கு போனில் தகவல் கொடுக்க... நொய்டாவில் இருந்து அவசர அவசரமாக பண்ணை வீட்டுக்கு வந்தார். தன் அண்ணன் பான்டி சந்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை கைகலப்பாக மாற... ஆவேசம் அடைந்த ஹர்தீப் சிங், தன்னிடம் இருந்த 9 எம்.எம். பிஸ்டலால் பான்டி சந்தாவை சரமாரியாக சுட... அந்த இடத்திலேயே இறந்தார் பான்டி சந்தா. இதைப்பார்த்த சுக்தேவ் சிங்கின் பாதுகாப்பு அதிகாரி சச்சின் தியாகி, தன் துப்பாக்கியால் ஹர்தீப் சிங்கைச் சுட... அதே இடத்தில் அவரும் இறந்தார்.

பாகிஸ்தானில் இருந்து பிழைப்புக்காக இந்தியா வந்தவர் குல்வந்த் சிங் சந்தா. இவரின் மகன்கள்தான் குர்தீப் சிங் சந்தா எனப்படும் பான்டி சந்தா, ஹர்தீப் சிங் சந்தா மற்றும் ராஜிந்தர் சந்தா. 1950-களில் ராம்நகரில் உள்ள ஒரு ஒயின் ஷாப்புக்கு முன் சைடு டிஷ் விற்றுப் பிழைப்பை தொடங்கியவர் குல்வந்த் சிங். கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தவர், அதே ஒயின் ஷாப்பை டெண்டருக்கு எடுத்தார். அதில் பணம் கொட்ட... படிப்படியாக பல்வேறு இடங்களில் ஒயின் ஷாப்களை ஏலம் எடுத்தார். அடுத்து சாராயத் தொழிற்சாலை, ரியல் எஸ்டேட் என்று தொழில்களில் இறங்க... அனைத்தும் ஏறுமுகம்தான்.

2011-ம் ஆண்டு அவர் இறந்தபோது அவரின் சொத்து மதிப்பு சில ஆயிரம் கோடிகள். அப்பாவின் இறப்புக்குப் பிறகு, பொறுப்புகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டார் மூத்த மகன் பான்டி சந்தா. சொத்தைப் பிரித்துத் தரச்சொல்லி கடந்த சில மாதங்களாகவே ஹர்தீப் சிங், தன் அண்ணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்து உள்ளார். அதன் உச்சக்கட்டம்தான் இந்த மரணங்கள்.

சந்தா குரூப்ஸின் வருட டர்ன் ஓவர் 2,500 கோடி என்கிறார்கள். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சந்தா குரூப்ஸ் நிறுவனத்தின் காட்டில் மட்டும் எப்போதும் மழை. ''சந்தா குரூப்ஸுக்கு சாராயத் தொழிலில் 14 ஆயிரம் கோடி ரூபாய், ரியல் எஸ்டேட்டில் 10 ஆயிரம் கோடி, புதிதாகத் தொடங்கப்பட்ட சந்தா ஃபுட்ஸ் நிறுவனத்துக்கு 25 ஆயிரம் கோடி என்று ஏகப்பட்ட வருமானம். அவர்களுடைய சொத்து மதிப்பே 50 ஆயிரம் கோடியைத் தாண்டும். உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி ஆட்சியின்போதே பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டத்துக்கான குத்தகையை பல ஆயிரம் கோடிக்கு இவர்களுடைய நிறுவனம் எடுத்து இருக்கிறது. பல சாராயத் தொழிற்சாலைகளை அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தும் வகையில் குறைந்த ஏலத்தொகைக்கு இவர்கள் ஏலம் எடுத்து நடத்தினர். அந்த அளவுக்கு சந்தா நிறுவனத்துக்கு எல்லா இடத்திலேயேயும் பவர். கடந்த பிப்ரவரி மாதம் சந்தா நிறுவனத்தில் சி.பி.ஐ. ரெய்டு நடத்தப்பட்டது. பல டாக்குமென்ட்கள் கண்டுபிடிக்கப்பட்டும், நடவடிக்கை எதுவும் இல்லை. சி.ஏ.ஜி. ரிப்போர்ட்டும் உத்தரப்பிரதேச அரசுக்கு சந்தா நிறுவனத்தால் 1,200 கோடி நஷ்டம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது'' என்கிறது டெல்லி மீடியாக்கள். இத்தனை கோடிக்கு அதிபதிகள், திடீரென செத்துப்போய் விட்டனர்.

வழக்கை விசாரித்து வரும் டெல்லி கூடுதல் துணை ஆணையர் ராஜன் பகத், ''பான்டி சந்தா உடலில் 12 குண்டுகளும் ஹர்தீப் உடலில் எட்டு குண்டுகளும் பாய்ந்துள்ளன. முதல்கட்டமாக 15 பேரைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகிறோம். தடயவியல் நிபுணர்களின் அறிக்கையும் வந்த பிறகுதான் வழக்கின் முழுநிலைமையும் தெரிய வரும். ஏற்கெனவே சில வாரங்களுக்கு முன், அந்த பண்ணை வீட்டில் துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும் சொல்கிறார்கள். அது தொடர்பாகவும் விசாரித்து வருகிறோம்'' என்கிறார்.

இன்னும் கொலை பரபரப்பே அடங்காத நிலையில், இவ்வளவு சொத்துக்கும் அடுத்த வாரிசு யார் என்ற சர்ச்சையை டெல்லி மீடியாக்கள் கிளப்பி விட்டுள்ளன!

- ஆ.அலெக்ஸ் பாண்டியன்