டெங்கு காய்ச்சல்... தமிழகத்தின் பல நகரங்களில் பரவலாக இருக்கிறது. ஆனால், மதுரைக்குப் பக்கத்தில் உள்ள மேலூரில் மொத்தமாக இருக்கிறது.

மேலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சுமார் மூன்றரை லட்சம் மக்களும், இப்போது டெங்கு காய்ச்சல் பீதியில் மிரண்டு கிடக்கின்றனர். தினமும் 300 பேர் வரை, 'டெங்கு’ கண்டறியும் எலிசா பரிசோதனைக்கு வருகிறார்கள். பலருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் சேர்கிறார்கள்; பலர் குணமாகித் திரும்புகிறார்கள். ஆனாலும், டெங்கு மரணங்களை முற்றிலுமாகத் தடுக்க முடிய வில்லை. மேலூர் நகரத்தையும் ஏ.வல்லாலபட்டி, பழைய சுக்காம்பட்டி, புதுசுக்காம்பட்டி,

எஸ்.கல்லாம்பட்டி, அரிட்டாபட்டி, கொட்டகுடி, ஆலம்பட்டி, சென்னக ரம்பட்டி, தும்பைப்பட்டி, கீழவளவு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களையும் சுனாமியாய் சுழற்றி அடிக்கிறது டெங்கு!

கடந்த அக்டோபர் 10-ம் தேதி, சாத்தமங்கலம் கிராமத்தில் தேவதர்ஷினி என்ற ஆறு வயதுச் சிறுமியைப் பலிகொண்டு தனது வேட்டையைத் தொடங்கியது டெங்கு. இதுவரை இந்தப் பகுதியில் மட்டும் 44 பேர்களை அள்ளிச்சென்றதாக அலறுகிறார்கள் மக்கள். கடந்த 18-ம் தேதி ஒரே நாளில் மட்டுமே, சொக்கப்பட்டி சிறுவன் கார்த்திகேயன், கீழப்பட்டியைச் சேர்ந்த வேலு மணி, பழையூர்பட்டி பள்ளி மாணவன் பரத், புதுச்சுக்காம்பட்டி பாமா, உடையான்பட்டி விஜயா என்று ஐந்து பேரை விழுங்கியது ஃபீவர். ஆனாலும், 'அத்தனையும் டெங்கு மரணங்கள் அல்ல. வைரஸ் ஃபீவர் போன்ற பல்வேறு பாதிப்புகளால் இறந்தனர்’ என்று அடக்கி வாசிக்கிறார்கள் அதிகாரிகள். மேலூரில் டெங்கு சாவுகள் தொடங் கியதுமே நேரடி விசிட் அடித்து சுகாதாரப் பணி களையும் விழிப்பு உணர்வு பிரசாரங்களையும் முடுக்கி விட்டார் கலெக்டர் அன்சுல் மிஸ்ரா. சாவு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போவதை அடுத்து, டெங்கு பாதித்த கிராமங்களுக்கு 16-ம் தேதி விசிட் அடித்தார் மாநில சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன்.

டெங்கு தடுப்பு நடவடிக்கைகளைப் பார்வை யிட்டவர், ''தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 54 பேர் பலியாகி இருக்கிறார்கள். மதுரை மாவட்டத்தில் மட்டும் 14 பேர் இறந்து இருக்கின்றனர். மற்றவர்கள் வேறு காரணங்களால் இறந்தனர். ஆனால், அத்தனை பேருமே டெங்கு காய்ச்சலுக்குப் பலியானதுபோலவே பீதியைக் கிளப்புகிறார்கள்'' என்று சொல்லிவிட்டுப் போனார். அடுத்த இரண்டாவது நாளே மேலூர் பகுதியில் ஐந்து பேர் காய்ச்சலுக்குப் பலியானதுதான் துயரத்தின் உச்சம்!

இதுகுறித்து நம்மிடம் ஆதங்கத்துடன் அந்த வட்டாரத்துப் பொதுமக்கள் பேசினர். ''கழிவு நீர் கால்வாய்களை ஆக்கிரமிச்சு அடைத்து விட்டதால், பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. குடிநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்தும் வருடக்கணக்காகிறது. கொசுக்கள் உற்பத்தி ஆகும் வழிகளை எல்லாம் திறந்துவெச்சுட்டு, 'புகை அடிக் கிறோம்... பவுடர் போடுறோம்’னு சொல்றாங்க. தொடர்ந்து 10

நாட்களாவது புகை மருந்து அடித்தால்தான் கொசுவை ஓரளவுக்காவது ஒழிக்க முடியும்.

போன வாரம்தான் மேலூர் ஜி.ஹெச்-சுக்கு 'எலிசா டெஸ்ட்’ வசதி வந்திருக்கிறது. தினமும் 14 மணி நேரம் கரன்ட் கட் ஆவதால், 'எலிசா டெஸ்ட்’ செய்வதிலும் சிக்கல். பரி சோதனையில் பாசிட்டிவ் ரிசல்ட் வந்தாலும், மறைக்கிறார்களே தவிர சொல்வது இல்லை'' என்கிறார்கள்.

டெங்குப் பலிகள் குறித்து தொகுதி எம்.எல்.ஏ-வான சாமியிடம் பேசினோம். ''அதிகாரிகளைக் கேட்டால் டெங்கு இல்லைங்கிறாங்க. ஆனாலும், அப்பாவி மக்கள் இறந்துபோறதை நெனச்சா, மனசுக்குக் கஷ்டமா இருக்கு. வழக்கமா எதிர்க் கட்சிக்காரங்கதான் சட்டமன்றத்தில் கவனஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வருவாங்க. ஆனா, இந்தப் பிரச்னைக்காக நான் கொண்டு வந்தேன். அம்மா அவர்கள் உத்தரவு போட்டதால் சுகாதாரத் துறை செயலாளரே ஸ்பாட்டுக்கு வந்தார். காய்ச்சல்னு வர்றவங்களுக்கு ஸ்பெஷல் கேர் எடுக்கச் சொல்லி மீனாட்சி மிஷன், அப்போலோ மருத்துவமனைகளுக்கும் பேசி இருக்கேன்'' என்றார் விரக்தியுடன்.

கலெக்டர் அன்சுல் மிஸ்ராவோ, ''மதுரை மாவட் டத்தில் இதுவரை 15 பேர் மட்டும்தான் டெங்கு பாதிப்பால் இறந்திருக்காங்க. மற்றவர்களுக்கு எல்லாம் வேறு காரணங்கள். 18-ம் தேதி இறந்த ஐந்து பேரில் ஒருத்தருக்கு மட்டும்தான் டெங்கு. கடந்த மூன்று மாதங்களில் டெங்கு இருப்பதாகக் கண்டறியப்பட்ட சுமார் 1,000 பேருக்கு மேல் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணம் அடைந்து இருக்கிறார்கள் 100 சதவிகிதம் டெங்கு கொசுவை ஒழித்தால்தான் டெங்கு ஃபீவர் வராதுன்னு சொல்ல முடியும். ஆனால், அது நடைமுறை சாத்தியம் இல்லாதது. ஆனாலும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். கொசு உற்பத்தி ஆகும் இடத்தைக் கண்டுபிடிக்கிறதுதான் முக்கியமான வேலை. அந்தப் பணிக்காக மாவட்டத்தில் இருக்கும் அத்தனை துறைகளையும் களத்தில் இறக்கி விட்டிருக்கிறோம்'' என்று சொன்னார்.

கொசுவின் அராஜகத்தைக் கட்டுப்படுத்துங்க ஸார்!

- குள.சண்முகசுந்தரம்

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி