Published:Updated:

''யானை, சிங்கம், புலிக்குப் பதில் சொல்வேன்... பூச்சிக்குப் பதில் சொல்ல முடியாது!''

''யானை, சிங்கம், புலிக்குப் பதில் சொல்வேன்... பூச்சிக்குப் பதில் சொல்ல முடியாது!''

''யானை, சிங்கம், புலிக்குப் பதில் சொல்வேன்... பூச்சிக்குப் பதில் சொல்ல முடியாது!''

''யானை, சிங்கம், புலிக்குப் பதில் சொல்வேன்... பூச்சிக்குப் பதில் சொல்ல முடியாது!''

Published:Updated:
##~##

காவிரிப் பிரச்னை தீர்ந்தாலும் தீரலாம்... நடிகர் சங்க நில விவகாரம் முடிவுக்கு வராதுபோல் இருக்கிறது! 

சென்னை - தி.நகர் ஹபிபுல்லா சாலையில் அமைந்து உள்ளது 18 கிரவுண்ட் பரப்பளவு உள்ள தென்னிந்திய நடிகர் சங்கம். ஆடிட் டோரியம் இருந்த அந்த விசாலமான இடம், இப்போது இடிக்கப்பட்டு வெறிச்சோடிக் கிடக்கிறது. ஒரு தனியார் நிறுவனத்துக்கு அந்த இடம் குத்தகைக்கு விடப்பட்டு பிரமாண்டமான கட்டடம் கட்டத் திட்டமிட்டனர். அதுதான் சர்ச்சையைக் கிளப்பியது. 'பூச்சி’ முருகன் மற்றும் காஜா இருவரும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்​​தனர். '1987-ல் நடிகர் சங்கத்தில் அறக்கட்டளை அமைக்கப்பட்டது. அப்போது நியமிக்கப்பட்ட ஒன்பது பேர் கமிட்டியை சரத்குமாரும் ராதாரவியும் கலைத்து விட்டனர். அதோடு, நிலத்தை குத்தகைக்கு விடும் அதிகாரத்தை ராதாரவிக்கு சரத்குமார் கொடுத்தார். பின்னர், எஸ்.பி.ஐ. சினிமாஸ் நிறு வனத்துக்கு தலைவர், செயலாளர் இருவரும் சேர்ந்து குத்தகை ஒப்பந்தம் போட்டனர். குத்தகைக்குவிட அதிகாரம் கொடுத்ததும், குத்தகை ஒப்பந்தமும் செல்லாது என்று நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ என்பதுதான் வழக்கு. 'நடிகர் சங்க நிலத்தில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது’ என்று அந்த வழக்கில் நீதிமன்றம் இப்போது இடைக்காலத் தடை விதித்து இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''யானை, சிங்கம், புலிக்குப் பதில் சொல்வேன்... பூச்சிக்குப் பதில் சொல்ல முடியாது!''

நடிகர் சங்க விவகாரம் குறித்து, அதன் முன்னாள் தலைவரும் மூத்த நடிகருமான

''யானை, சிங்கம், புலிக்குப் பதில் சொல்வேன்... பூச்சிக்குப் பதில் சொல்ல முடியாது!''

எஸ்.எஸ்.ராஜேந்திரனிடம் பேசினோம். ''நடிகர் சங்க நிலத்தை வாங்கிய பணத்தில், நான் நாடகம் போட்டுக் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணமும் இருக்கிறது. 1987-ல் நான் அமைத்த அறக்கட்டளையில் ராஜ சுலோச்சனா, 'தங்கப்பதக்கம்’ ஸ்ரீகாந்த், 'சங்கிலி’ முருகன் எல்லாம் இருந்தனர். அவர்கள் எல்லாம் இப்போது எங்கே? அந்த ஒன்பது பேர் அனுமதி இல்லாமல் யாருக்கும் குத்தகைக்குத் தர முடியாது. நடிகர் சங்கத்தில் நடப் பது எல்லாம் மர்மமாக இருக்கிறது'' என்றார்.

நடிகர் சங்கத்தின் உறுப்பினரான நாசரிடம் கேட்டபோது, ''நான் நடிகர் சங்கத்துக்குப் போய் ரொம்ப நாளாகி விட்டது. இப்போது என்ன நடக்கிறது என்றே எனக்குத் தெரியவில்லை. சங்க நிலத்தைக் குத்தகைக்கு விடுவதற்கு முன், பொதுக்குழுவைக் கூட்டி எல்லோரி​டமும் ஒப்புதல் வாங்கி இருக்கலாம். முன்பு எல்லாப் பிரச்னைகளையும் அனைவரும் உட்கார்ந்து பேசித் தீர்ப்பார்கள். இப்போது தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் எல்லாவற்றிலும் உடனே கோர்ட் டுக்குப் போய்விடுகிறார்கள். இது எங்கே போய் முடியப்போகிறதோ..?'' என்று வருத்தப்பட்டார்.

'பூச்சி’ முருகன் வழக்கு, எஸ்.எஸ்.ஆர், நாசர் கருத்துக்கள் குறித்து நடிகர் சங்கச் செயலாளர் ராதாரவியிடம் விளக்கம் கேட்டோம்.

''எஸ்.எஸ்.ஆர். பெரியவர். அவருடைய கருத்தை மறுத்துப் பேச விரும்பவில்லை. நடிகர் சங்க நிலத்தை சத்யம் சினிமாஸ் நிறுவனத்துக்கு குத்தகை விடுவது குறித்துப் பேச பொதுக்குழுவைக் கூட்டினோம்.

''யானை, சிங்கம், புலிக்குப் பதில் சொல்வேன்... பூச்சிக்குப் பதில் சொல்ல முடியாது!''

எல்லோருடைய ஒப்புதலும் வாங்கி​னோம். அதன்பிறகே, ஒப்பந்தம் போட் டோம். பொதுக்குழு கூட்டுவது குறித்து எல்லா நடிகர், நடிகைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி விட்டே நடத்தினோம். நாசர் ஏனோ அதில் கலந்து கொள்ளவில்லை.

சமீபத்தில் 'சிங்கம்-2’ படப்பிடிப்பில் நாசரைச் சந்தித்தேன். அப்போதுகூட, 'ஏன் சங்கத்துக்கு வராம இருக்கீங்க... அடுத்தமுறை கமிட்டி உறுப்பினருக்கு நில்லுங்க’ என்று சொல்லிவிட்டுத்தான் வந்தேன். ஆனால், 'பூச்சி’ முருகன்தான் தேவையில்லாமல் பிரச்னை செய்கிறார். வாகை சந்திரசேகருக்குப் பதிலாக, தன்னைப் பொருளா​ளராக நியமிக்கச்சொல்லி 'பூச்சி’ முருகன் கேட்டார். மறுத்து விட் டோம். அந்தக் கோபத்தில்தான் கோர்ட் படி ஏறி இருக்கிறார். நடிகர் சங்கத்தில் சாதிப் பிரச்னையைக் கொண்டுவந்து குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார். யானை, சிங்கம், புலிக்கு எல்லாம் நான் பதில் சொல்வேன். ஆனா, சும்மானாச்சுக்கும் புகார் கொடுக்கும் பூச்சிக்கு என்னால் பதில் சொல்ல முடியாது'' என்று படபடத்தார்.

வழக்குத் தொடுத்து இருக்கும் பூச்சி முருகனிடம் பேசினோம். ''வாகை சந்திரசேகர் நான் சார்ந்த தி.மு.க-வின் சிறந்த பேச்சாளர். அவருக்கும் எனக்கும் சண்டை மூட்டிவிட நினைக்கிறார் ராதாரவி. நான் கலப்புத் திருமணம் செய்துகொண்டவன். எங்கள் வீட்டிலேயே சாதி இல்லை. அப்புறம் எப்படி நடிகர் சங்கத்தில் நான் சாதிக் குழப்பத்தை ஏற்படுத்துவேன்? ராதாரவி, சரத்குமார் இருவரும் நடிகர் சங்கத்தை கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விட்டனர் என்று மூத்த நடிகர்கள் அனைவரும் வெளியில் சொல்ல முடியாமல் புலம்பி வருகிறார்கள். இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், என்னால் இதற்கு மேல் பதில் சொல்ல முடியாது. அவர்கள் இருவரும் தன்னிச்சையாகச் செய்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து விட்டது'' என்று சீறினார்.

சினிமாவைவிட நடிகர் சங்கத்தில் நிறையவே ஸ்டன்ட் காட்சிகள் நடக்கும்போல் தெரிகிறது!

- எம். குணா, படங்கள்: வீ.நாகமணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism