வழக்கமாக சி.பி.ஐ-யின் செயல்பாடுகள்தான் விமர்சனத்துக்கு உள்ளாகும். ஆனால் இப்போது, சி.பி.ஐ-யின் இயக்குனர் நியமனமே சர்ச்சையில் சிக்கி உள்ளது. இந்த விவகாரத்தை எடுத்துக்கொண்டு சென்னை, உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடுத்துள்ளார், ஜெபமணி மோகன்ராஜ். இவர், தமிழகக் காவல் துறையில் பணியாற்றியவர். ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த சிறப்பு விசாரணைக் குழு வில் இடம்பிடித்து, 'விசாரணை நேர்மையாக நடைபெறவில்லை’ என்று அந்தக் குழுவைக் குற்றம் சாட்டி, விருப்ப ஓய்வு பெற்று வெளியேறியவர். அவரிடம் பேசினோம்.

''நாட்டின் மிகஉயர்ந்த தன்னிச்சையான அதிகார அமைப்பு என்று சி.பி.ஐ. குறித்து சிலாகித்த காலம் மலையேறி விட்டது. அதன் நடவடிக்கைகள் மீது மக்களுக்கும் நம்பிக்கை போய்விட்டது. இப்போது மத்திய அரசின் விருப்பத்துக்கு ஏற்ப ஏவல் வேலை செய்யும் அமைப்பாகத்தான் சி.பி.ஐ. செயல்படுகிறது. அந்த அமைப்பைச் சீரமைக்கும் வேலையைச் செய்யாமல், நீதிமன்றத்தால் குற்றம் நிரூபிக்கப்பட்டு கண்டனத்துக்கு ஆளான ரஞ்சித் சின்ஹாவை இயக்குனராக நியமித்துள்ளார் பிரதமர். அதை எதிர்த்துத்தான் நான் வழக்குத் தொடர்ந்துள்ளேன்.

இந்தியாவின் மானத்தைக் கப்பலில் ஏற்றிய ஊழல்களில் ஒன்று, லல்லு பிரசாத் யாதவ் சம்பந்தப்பட்ட

மாட்டுத் தீவன ஊழல். அப்போது சி.பி.ஐ-யில் பணிபுரிந்த பிஸ்வாஸ் என்பவர் மிக நேர்மையாக விசாரித்து, அந்த ஊழல் குறித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை அனுப்பிக் கொண்டு இருந்தார். ஆனால், அவர் அனுப்பிய நான்காவது அறிக்கை, வழக்கின் போக்கைத் திசை திருப்பும் வகையில் மிகவும் மென்மையாக இருந்தது. ஏதோ குளறுபடி என்பதை நீதிமன்றமே கண்டுபிடித்தது.

'பிஸ்வாஸ் அறிக்கை ஏன் மழுப்பலாக உள்ளது?’ என்பதைக் கண்டறிய தன்முனைப்பாக நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போதுதான், பிஸ்வாஸ் அனுப்பிய அறிக்கையை, சி.பி.ஐ. டி.ஐ.ஜி-யாகப் பணிபுரிந்த ரஞ்சித் சின்ஹா திருத்தி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார் என்பது வெளிச்சத்துக்கு வந்தது. இதை வன்மையாகக் கண்டித்த பாட்னா உயர் நீதிமன்றம், ரஞ்சித் சின்ஹா அந்த வழக்கில் தலையிடவே கூடாது என்று உத்தர விட்டது.

மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ரயில்வே பாதுகாப்புப் படையின் இயக்குனராக இதே ரஞ்சித் சின்ஹாவை நியமித்தார் லல்லு. பதவிக்கான தகுதியை ரஞ்சித் சின்ஹா பெறும் வரை, ரயில்வே பாதுகாப்பு படைத் தலைவர் பதவியை லல்லு பிரசாத் காலியாகவே வைத்திருந்தார். ரஞ்சித் சின்ஹா அந்த அளவுக்கு லல்லு பிரசாத் யாதவின் கையாளாக இருந்தார். அதற்குக் கைமாறாக அவருடைய மனைவி ரீனா சின்ஹாவுக்கு பாட்னாவில் உள்ள

புகழ்பெற்ற மில்லர் பள்ளியின் தலைமை ஆசிரியர் பதவியை லல்லு வழங்கினார். இப்படி ஊழல் குற்றச்சாட்டை மறைக்க உதவிபுரிந்து, அதற்கு கைமாறு பெற்று, பாட்னா உயர் நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளான ஒருவரை சி.பி.ஐ-யின் இயக்குனராக நியமிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? 2ஜி அலைக்கற்றை வழக்கில் தீர்ப்பு வெளியாகும் சமயத்தில் இவர் பதவியில் இருந்தால், மாட்டுத் தீவன ஊழல் போலவே, இந்த வழக்கையும் நீர்த்துப்போகச் செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.

சின்ஹாவின் நியமன அறிவிப்பை பிரதமர் வெளியிட்டதுமே, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலை வரான சுஷ்மா ஸ்வராஜும், அருண் ஜெட்லியும், 'இந்த நியமனம் கூடாது... உடனடியாக ரத்து செய்ய வேண்டும்’ என்று கடிதம் எழுதினர். ஆனால், பிரதமர் அவற்றை நிராகரித்து விட்டார். தகுதிஅற்றவர்களுக்கும், அரசியல்வாதிகள் செய்த முறைகேடுகளை மறைக்க உதவும் அதிகாரிகளுக்கும்தான் இந்த ஆட்சியில் உயர் பதவிகள் கொடுக்கப்படுகின்றன. இது தொடரக் கூடாது என்பதற்காகத்தான் வழக்குத் தொடுத்திருக்கிறேன்'' என்று ஆவேசமாகப் பேசினார்.

ஜெபமணி மோகன்ராஜுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர் மணிகண்டனைச் சந்தித்து வழக்கின் நிலை குறித்துக் கேட்டோம்.

''குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளியை இதுபோன்ற உயர்ந்த பதவிகளில் நியமனம் செய்யக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் பல வழக்குகளில் தீர்ப்பளித்து இருக்கிறது. அவற்றை நீதிமன்றத்தில் எடுத்து வைத்துள்ளேன். பாட்னா விவகாரத்தில் ரஞ்சித் சின்ஹா என்னென்ன மோசடிகளில் ஈடுபட்டார் என்பது ஊர்அறிந்த விஷயம். அதற்கு பாட்னா நீதிமன்றமே சாட்சி. இந்த வழக்குக்கு ஏராளமான ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. அவை எல்லாம் துறை ரீதியான ஆவணங்கள் என்பதால், முதல் கட்டமாக மத்திய அரசிடம் அவற்றைக் கேட்டு விண்ணப்பித்து உள்ளோம். 'ஒரு வாரத்தில் சமர்ப்பிக்க வேண்டும்’ என்று நீதிமன்றமும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அவை கிடைத்ததும் வழக்கு சூடு பிடிக்கும்'' என்றார் உற்சாகத்துடன்.

டெல்லியில் செய்யப்பட்டுள்ள ஒரு நியமனம், சென்னையில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது!

- ஜோ.ஸ்டாலின்

படம்: ஜெ.வேங்கடராஜ்