யாருடைய பிறந்த நாள் விழாவிலும் மரணத்தைப்பற்றி பேச மாட்டார்கள். ஆனால், சர். பி.டி.தியாகராய மஹாலில் நடந்த நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யரின் 98-வது பிறந்த நாள் விழாவில் மரண தண்டனைக்கு எதிராகப் பலரும் உணர்ச்சி பொங்கப் பேசினார்கள்.

கல்வியாளர் வசந்திதேவி, ''கசாப் தூக்கில் போடப்பட்ட நாளில், கேவலமாக அருவருப்பான வகையில் தீபாவளியைப்போல் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடுகின்றனர். இது மனித உயிர்களின் மேல் அன்பு இல்லாததைக் காட்டுகிறது. மக்களுக்கு மனித உரிமைகளைப்பற்றிய விழிப்பு உணர்வுக் கல்வியை அளிக்க வேண்டும். இதற்காகத்தான் கிருஷ்ணய்யர் ஒரு நூற்றாண்டு காலமாகப் பாடுபட்டு வருகிறார். அவர் நினைத்ததுபோல சமத்துவ சமுதாயம் பிறக்க வேண்டும்'' என்றார்.

'மனித நேயர் கிருஷ்ணய்யர்’ விருது, நடிகர் மம்மூட்டிக்குக் கொடுக்கப்பட்டது. மம்மூட்டி சார்பாக பாடகர் உன்னிகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். மரண தண்டனைக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த வழக்கறிஞர்கள் வடிவாம்பாள், சுஜாதா, கயல்விழி ஆகியோர் 'செங்கொடி விருது’ கொடுத்துக் கௌரவிக்கப்பட்டனர்.

மனித உரிமைப் போராளியும் மரண தண்டனை எதிர்ப்பாளருமான வழக்கறிஞர் யுக் மோகித் சவுத்ரியின் பேச்சில் ஏக காரம். ''நீங்கள் எனக்கு அளித்த மனிதநேய விருது என்னை பெருமைப்படுத்துவதாக இருந்தாலும், கசாப் தூக்கில் போடப்பட்ட சில நாட்களில் வாங்குவதற்காக வெட்கப்படுகிறேன். ஐ.நா-வில் உலக நாடுகளின் ஆதரவோடு மரண தண்டனைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இரண்டாவது நாளில், கசாப்பைத் தூக்கில் போடுகின்றனர். இது இந்திய அரசின் ஆணவப்போக்கையே காட்டுகிறது. கசாப்பை ரகசியமாகத் தூக்கிலிட்டது ஏன்? காந்தி கொள்கைகளைப் பின்பற்றி ஆட்சி நடத்தும் நமக்கு கருணை வேண்டமா? கசாப்பை மன்னித்து இருந்தால், உலகின் நன்மதிப்பை இந்தியா பெற்று இருக்கும். இந்தத் தண்டனை, இந்திய மக்களை கருணை இல்லாதவர்களாகக் காட்டிவிட்டது. தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட வேண்டும். அதற்காக நாம் பாடுபட வேண்டும்'' என்று பேசி முடித்தபோது, அரங்கில் இருந்த ஒருவர் எழுந்து, ''சின்னக் குழந்தைனுகூடப் பார்க்காம கற்பழிக்கிறவங்களுக்கும் மரண தண்டனை கூடாதா?'' என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

''பழிக்கு பழி என்பது சரியானது அல்ல. ஒருவர் நம் வீட்டில் திருடினால், நாம் அவர் வீட்டில் திருடுகிறோமா? வன்புணர்ச்சியால் பாதிக்கப்பட்டவர், திரும்பவும் வன்புணர்ச்சி செய்வாரா? நான் அந்த நபருக்குத் தண்டனை வேண்டாம் என்று சொல்லவில்லை. கடுமையான தண்டனைகள் கொடுக்கலாம்'' என்று நிதானமாகப் பதில் அளித்தார்.

மரண தண்டனையை எதிர்க்கும் அடையாளமாகவே கருதப்படுகிறார் கிருஷ்ணய்யர்!

- நா.சிபிச்சக்கவர்த்தி

படம்: இ.ராஜவிபீஷிகா