'நம்பிக்கை மருத்துவர் தெய்வநாயகம்’ என்ற தலைப்பில் ஜூ.வி-யில் வெளியான கட்டுரையில், தென் இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை மருத்துவக் கல்லூரியில் 1981-ம் ஆண்டு நெஞ்சக நோய்ச் சிகிச்சை முதுநிலை பட்டப்படிப்பு தொடங்கப்பட்டது என்றும், அதை ஏற்படுத்தியது டாக்டர் தெய்வநாயகம் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. நான் அரசு மருத்துவராகப் பணியாற்றியபோது, டெல்லியில் உள்ள வல்லபாய் படேல் செஸ்ட் இன்ஸ்டிடியூட் தலைவர் டாக்டர் விஸ்வநாதனை அணுகி, நெஞ்சக நோய் முதுநிலைப் படிப்புக்கான பாடத்திட்டத்தை வாங்கி வந்தேன். 1967-ம் ஆண்டு முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் அறிவுரைப்படி, நானும் ஸ்டான்லி மருத்துவமனையில் 10 டாக்டர்களும் சேர்ந்து அதை ஒரு திட்டமாகத் தயாரித்து அமைச்சர் சாதிக் பாட்ஷாவிடம் கொடுத்தோம். அதன் பிறகு, 1981-ல் முதுநிலை பட்டப்படிப்பு தொடங்கப்பட்டது. அப்போது, அதற்கு மூன்று ஸீட்கள் மட்டும்தான் அனுமதி. அதில், எனக்கும் டாக்டர் நச்சினார்க் கினியன், டாக்டர் குழந்தைவேலு ஆகிய மூவருக்கும்தான் ஸீட் வழங்கப்பட்டது.

- டாக்டர் கலாநிதி, சென்னை-40.