கருகிய பயிரைக் காப்பாற்ற முடியாத காரணத்தால் நாகை மாவட்ட விவசாயி ராஜாங்கம் தற்கொலை செய்துகொண்ட பிறகும், தண்ணீர் தர மறுக்கிறது கர்நாடகம். உச்ச நீதிமன்றம் உத்தரவு போட்டாலும், கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் வர இனி வாய்ப்பே இல்லை என்ற நிலை இருப்பதால், காவிரி டெல்டா கிராமங்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளன.

அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆதிநாராயணன், ''ஒவ்வொரு விவசாயியும் குறைந்தபட்சம் மூன்று ஏக்கரில் இருந்து அதிகபட்சம் 15 ஏக்கர் வரை சம்பா சாகுபடி செய்து இருக்காங்க. தண்ணீர் இல்லாமல் ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்படும். இதை எப்படி எங்களால் தாங்கிக்கொள்ள முடியும்? காவிரி தண்ணீர் வராதுன்னு தெரிந்து விட்டதால், வங்கிகளும் கடன் தர மறுக்கின்றன. வெளியில் அதிக வட்டிக்குக் கடன் வாங்கித்தான் சாகுபடி செய்து

இருக்காங்க. இனி, பயிரைக் காப்பாத்துறது கஷ்டம். கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் எத்தனை உசுர் போகப்போகுதோ...'' என்று மனம் நொந்து பேசினார்.

''தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களில், சுமார் 12 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடந்துள்ளது. இதில் முடங்கியுள்ள மொத்தத் தொகை, 1,800 கோடி ரூபாய். உற்பத்தி வெற்றிகரமாக அமைந்தால், 22 லட்சம் டன் நெல் கிடைக்கும். இதன்மதிப்பு 28 ஆயிரம் கோடி ரூபாய். இந்தத் தொகை முழுவதையுமே இழக்கக் கூடிய அபாயம்தான் இருக்கிறது'' என பதறுகிறார் காவிரி உரிமை மீட்புக் குழுவைச் சேர்ந்த திருப்பந்துருத்தி சுகுமாறன். அவரே தொடர்ந்து, ''தமிழ் நாட்டில் இருந்து சுமார் 700 அறுவடை இயந்திரங்கள் கர்நாடகாவுக்குச் சென்றுள்ளன. அங்கு, அறுவடைப் பணிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டன. அவர்களுக்கு இப்போது தண்ணீர் தேவை இல்லை. அங்குள்ளஅணைகளில் 80 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. ஆனாலும், நமக்குக் குறைந்த பட்ச தண்ணீர் கூட தர மறுக்கிறார்கள். பாடுபட்டு வளர்த்த பயிர்கள், எங்க கண் முன்னாலே கருகுவதைக் கண்டு கலங்கிப்போய் நிற்கிறோம்'' என்றார்.

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், ''வழக்கறிஞர்களின் வாதங்களையும் பொறியாளர்களின் புள்ளி விவரங்களையும் மட்டுமே தமிழக முதல்வர் ஜெயலலிதா முழுமையாக நம்பி இருக்கிறார். இது, தவறான போக்கு. காவிரித் தீர்ப்பாயம் 2007-ம் ஆண்டு அளித்த இறுதித் தீர்ப்பின்போதே, ஐந்து தொகுதிகளாக அனைத்துத் தகவல்களையும் கொடுத்து விட்டன. ஆனாலும் கூட, வழக்கை ஐந்து ஆண்டுகளாக உச்ச நீதிமன்றம் இழுத்தடிக்கிறது. மத்திய அரசோ, வெளிப்படையாகவே கர்நாடகாவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. காவிரித் தீர்ப்பாயத்தின் தலைவராக இருந்த என்.பி.சிங் தன் பதவியை ராஜினாமா செய்து பல மாதங்கள் ஆகியும்கூட, தீர்ப்பாயத் தலைவர் பதவி நிரப்பப்படாமலேயே இருக்கிறது. காவிரிப் பிரச்னைக்காக ரயில் மறியல் செய்த தமிழக விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்கிறது மத்திய அரசு. ஆனால், இதே பிரச்னைக்காக ரயில் மறியல் செய்த கன்னடர்கள் மீது, எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. அவர்களுக்குச் சாதகமாக மத்திய அரசு செயல்படுகிறது.

தமிழக மக்களைத் திரட்டி, ஜனநாயக வழியில் தன் பலத்தைக் காட்டி மத்திய அரசை ஜெயலலிதா நிர்ப்பந்திக்க வேண்டும். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, ஒருமித்த குரலில் போராட வேண்டும். இதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்கா விட்டால், மக்களிடம் அவர்கள் அம்பலப்பட்டுப்போவார்கள். இந்த இக்கட்டான சூழலைப் பார்த்து தி.மு.க., தே.மு.தி.க. போன்ற கட்சிகள் உள்ளூர மகிழ்கின்றன. இது மக்களுக்குச் செய்யும் துரோகம். காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், டிசம்பர் 8-ம் தேதி விவசாயிகள் பேரணி தஞ்சையில் நடைபெற உள்ளது. கர்நாடகத்தை நிர்ப்பந்திக்க ஜெயலலிதாவுக்குத் துணை நிற்போம்'' என்றார்.

பயிர்கள் மட்டுமல்ல.. டெல்டா மாவட்டத்தில் மனித உயிர்களும் வாடிக்கிடக்கின்றன!

- கு. ராமகிருஷ்ணன்

படங்கள்: கே.குணசீலன்