Published:Updated:

ஐ.எஸ்.ஐ. உளவாளி ஜாகிர் உசேனின் கூட்டாளிகள் இருவர் சென்னையில் கைது!

Vikatan Correspondent
ஐ.எஸ்.ஐ. உளவாளி ஜாகிர் உசேனின் கூட்டாளிகள் இருவர் சென்னையில் கைது!
ஐ.எஸ்.ஐ. உளவாளி ஜாகிர் உசேனின் கூட்டாளிகள் இருவர் சென்னையில் கைது!
ஐ.எஸ்.ஐ. உளவாளி ஜாகிர் உசேனின் கூட்டாளிகள் இருவர் சென்னையில் கைது!

சென்னை: ஐ.எஸ்.ஐ. உளவாளி ஜாகிர் உசேனின் கூட்டாளிகள் இருவரை போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர்.

ஐ.எஸ்.ஐ. உளவாளி ஜாகிர் உசேனின் கூட்டாளிகள் இருவரை தமிழக போலீசார் சென்னையில் நேற்றிரவு கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் பெயர்கள் முகமது சலீம் மற்றும் சிவபாலன் என போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், அவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன், சென்னை மண்ணடியில் கியூ பிரிவு போலீசாரால் ஐ.எஸ்.ஐ. அமைப்பைச் சேர்ந்த ஜாகிர் உசேன், என்பவர் கைது செய்யப்பட்டார்.

அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.