Published:Updated:

ரயில் குண்டு வெடிப்பு: சுவாதி தங்கிய விடுதியில் போலீசார் ஆய்வு!

Vikatan Correspondent
ரயில் குண்டு வெடிப்பு: சுவாதி தங்கிய விடுதியில் போலீசார் ஆய்வு!
ரயில் குண்டு வெடிப்பு: சுவாதி தங்கிய விடுதியில் போலீசார் ஆய்வு!
ரயில் குண்டு வெடிப்பு: சுவாதி தங்கிய விடுதியில் போலீசார் ஆய்வு!

பெங்களூரு: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பலியான சுவாதி தங்கியிருந்த விடுதியில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று காலை நடந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஆந்திரா மாநிலம், குண்டூரைச் சேர்ந்த சுவாதி என்ற 23 வயது பெண் பொறியாளர் பலியானார். மேலும், 14 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று காலை பெங்களூரு சென்றனர். அங்கு சுவாதி தங்கியிருந்த விடுதியில் ஆய்வுகள் மேற்கொண்டனர். மேலும், சுவாதி எப்போது விடுதியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். எந்த ரயில் நிலையத்திற்கு சென்று ரயில் ஏறினார் என்பது போன்ற தகவல்களையும் சேகரித்தனர்.

இதையடுத்து, பெங்களூர் காவல்துறை உயரதிகாரிகளிடமும், தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆலோசனை நடத்தினர். மேலும், சுவாதி விடுதியில் இருந்து புறப்பட்டு சென்ற காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோவையும் தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆய்வு செய்தனர்.