Published:Updated:

ரயில் குண்டு வெடிப்பு: சந்தேகத்திற்குரிய நபர் வீடியோ வெளியீடு!

Vikatan Correspondent
ரயில் குண்டு வெடிப்பு: சந்தேகத்திற்குரிய நபர் வீடியோ வெளியீடு!
ரயில் குண்டு வெடிப்பு: சந்தேகத்திற்குரிய நபர் வீடியோ வெளியீடு!
ரயில் குண்டு வெடிப்பு: சந்தேகத்திற்குரிய நபர் வீடியோ வெளியீடு!

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்த சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் நபர் அடங்கிய வீடியோ பதிவை சி.பி.சி.ஐ.டி. காவல்துறை வெளியிட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் சுவாதி என்பவர் பலியாகியுள்ளார். மேலும், 14 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் சந்தேகப்படும் நபர் குறித்த வீடியோ பதிவை சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. இன்று வெளியிட்டார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''இந்த வீடியோ சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பதிவானது. இதில் ஒரு நபர் ரயிலில் இருந்து இறங்கியதும் வேகமாக ஓடுகிறார். அந்த நபர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே, அந்த நபரே விசாரணைக்கு ஆஜரானால் நல்லது. இல்லாவிட்டால், அவரை கண்டுபிடித்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும். இருப்பினும் அவர்தான் குற்றவாளி என்று கூறமுடியாது.

ரயில் குண்டு வெடிப்பு: சந்தேகத்திற்குரிய நபர் வீடியோ வெளியீடு!

அதிகாலை 5.40 மணிக்கு வர வேண்டிய ரயில் ஒன்றரை மணி நேரம் தாமதமாக வந்திருக்கிறது. சென்னையில் வெடிகுண்டு வைத்ததற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. ரயில் 9வது பிளாட் பாரத்திற்கு வந்த 10 நிமிடத்தில் குண்டு வெடித்துள்ளது. ரயில் சரியான நேரத்திற்கு வந்திருந்தால், ஆந்திர எல்லையில் குண்டுகள் வெடித்திருக்கும்.

மேலும், உடைந்த கடிகார பகுதி ஒன்று கிடைத்துள்ளது. அதை வைத்து பார்க்கும் போது, டைமர் பாம் பயன்படுத்துள்ளதாக தெரிகிறது. பெங்களூருவிலும் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் நடத்திய விசாரணையிலும் துப்பு கிடைத்துள்ளது'' என்றார்.