Published:Updated:

தூக்குப் போட்டாரா... மாத்திரை சாப்பிட்டாரா?

ஐஸ்வர்யா மரணம் எழுப்பும் கேள்விகள்

தூக்குப் போட்டாரா... மாத்திரை சாப்பிட்டாரா?

ஐஸ்வர்யா மரணம் எழுப்பும் கேள்விகள்

Published:Updated:
##~##

'உயிர்த் தியாகம் செய்​தாவது கூடங்குளம் அணு மின் உலை​யைத் திறக்க உறுதி ஏற்க வேண்டும்’ என இரண்டு மாதங்​களுக்கு முன், காஞ்சி​யில் இளைஞர் காங்கிரஸ் நடத்திய கூட்டத்தில் முழங்கினார் ஐஸ்வர்யா. சமீபத்தில் நடந்த இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் காஞ்சிபுரம் பாராளுமன்றத் தொகுதி இளை​ஞர் காங்கிரஸ் தலைவியாக தேர்வு செய்யப்​பட் டவர். இவரது திடீர் மரணம் பலத்த சர்ச்சை​யைக் கிளப்பி உள்ளது! 

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், மத்திய அமைச்சர் ஜி.கே.வாச னின் தீவிர ஆதரவாளருமான எஸ்.டி.நெடுஞ்செழியனின் மகள்​ ஐஸ்வர்யா. மூன்று மாதங்​களுக்கு முன், காங்கிரஸ் கட்சியின் பாராளு​மன்றத் தொகுதித் தலைவர் தேர்தலில் காஞ்சிபுரம் தொகு​திக்குப் போட்டியிட்டு, மாநிலத் திலேயே அதிக வாக்குகள் வித் தியாசத்தில் வெற்றி பெற்றவர். சிரித்த முகம்,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தூக்குப் போட்டாரா... மாத்திரை சாப்பிட்டாரா?

அளவான பேச்சு, பெரியவர்களிடம் மரியாதை என வளைய வந்தவர், சீரிய​ஸான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகத் தகவல் பரவியது. கடந்த 11-ம் தேதி அவர் இறந்து விட்டதாக இறுதித் தகவல் வந்துசேர, சோகமானது காஞ்சிபுரம் காங்கிரஸ் வட்டாரம்.

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி பொருளாளர் ஓ.வி.அமர்​நாத், ''23 வயதில் ஐஸ்வர்யாவுக்குப் பெரிய பொறுப்பு கிடைத்தது. இன்ஜினீயரிங் பட்டதாரி. சிறு வயதில் இருந்தே அரசியல் ஆர்வம் அதிகம். ஒரே மகளின் ஆசைக்கு நெடுஞ்செழியனும் குறுக்கே நிற்கவில்லை. நான்கு வருடங்களுக்கு முன், காங்கிரஸ் கட்சியில் அடிப்படை உறுப்பினர் ஆனார். தன் எண்ணம் நிறைவேறிய மகிழ்ச்​சியில், கட்சிக் கூட்டங்களில் கலந்துகொண்டு துடிதுடிப்போடு வலம் வந்தார். மூத்த நிர்வாகிகளிடம் மரியாதை, சிறியவர்களை சரிக்குச்சமமாக நடத்துவது என்ற அவரின் இயல்பு எல்லோருக்கும் பிடிக்கும். காஞ்சியில் அவரது அணுகுமுறையால் இளைஞர்கள் இடையே ஓர் எழுச்சி உருவானது. அந்த நம்பிக்கைகள் ஒரே நாளில் தகர்ந்து விட்டதில் நாங்கள் நொந்துபோய் இருக்கிறோம்'' என்றார் வேதனையோடு.

'ஐஸ்வர்யாவின் மரணத்துக்குக் காரணம், காதல் விவ காரம்தான். காங்கிரஸில் முக்கியப் பொறுப்பில் உள்ள தலைவர் ஒருவரை ஐஸ்வர்யா காதலித்தார். அதை அவருடைய குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால், அவர் தற்கொலை செய்து கொண்டார்’ என்ற தகவல் காங்கிரஸ் வட் டாரத்தில் பரபரப்பாக அடிபடுகிறது.  

இறுதி மரியாதை செலுத்தவந்த இளைஞர் காங்கிரஸின் மாநிலத் தலைவர் யுவராஜிடம் பேசினோம். ''ஐஸ்வர்யா, இளைஞர் காங்கிரஸுக்குக் கிடைத்த பொக்கிஷம். செல்வச் செழிப்பான குடும்பம் என்றாலும், ரொம்ப எளிமையாகவே அனைவரிடமும்

தூக்குப் போட்டாரா... மாத்திரை சாப்பிட்டாரா?

பழகுவார். இன்ஜினீயரிங் படித்த அவர், எப்படியோ செட்டில் ஆகி இருக்கலாம். ஆனால், அரசியலில் குறிப்பாக காங்கிரஸ் கட்சி மீது அவருக்கு அதிக ஈடுபாடு. அவருடைய வேலைகளைப் பார்த்து, எதிர்காலத்தில் என்னென்னவோ சாதிப்பார் என்று கட்சியின் மூத்தவர்கள் எல்லோரும் நம்பினர். ஆனால், விதி வேறு முடிவு எடுத்து விட்டது'' என்றவரிடம், ஐஸ்வர்யாவின் மரணம் குறித்து எழுப்பப்படும் சந்தேகங்கள் குறித்து கேட்டோம். ''அனைத்தும் சுத்தப் பொய். எந்த நேரமும் காங்கிரஸும் கட்சிப் பணியும்தான் அவருடைய சிந்தனையில் இருந்தது. ஓர் ஆணின் இறப்புக்குக் கேள்வி எழுப்பாத இந்தச் சமூகம், அதுவே பெண் என்றால் வாய் கூசாமல் என்னென்னவோ பேசுகிறார்கள். ஒரே மகளை இழந்த துக்கத்தில் இருக்கும் அவரின் பெற்றோருக்கு இது எத்தகைய மன வலியை ஏற்படுத்தும் என்பதை யாரும் உணராதது வேதனை.  அவருக்குச் சின்ன வயதில் இருந்தே மைக்ரேன் என்ற ஒற்றைத் தலைவலி பிரச்னை இருந்தது. அதற்காக 10 வருடங்களுக்கும் மேலாக சிகிச்சை எடுத்து வந்தார். கடந்த 5-ம் தேதி காலையில் வழக்கம்போல தலைவலிக்காக அந்த மருந்தைச் சாப்பிட்டிருக்கிறார். தன் அறைக்குச் சென்று, பிரைவசிக்காகக் கதவை உள்புறம் சாத்தி இருக்கிறார். அதனால், அவர் வலியால் துடித்தது மற்றவர்களுக்குத் தெரியாமல் போய்விட்டது. நீண்ட நேரம் வெளியில் வராததால், கதவைத் திறந்து சென்று மயக்கத்தில் இருந்தவரை மருத்துவமனையில் சேர்த்​தனர். ஒரு கட்டத்தில் மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் தடைபட்டு சுயநினைவை இழந்திருக்கிறார். கடந்த 11-ம் தேதி காலை இறந்து விட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர்'' என்றார் சோகமாக.

ஐஸ்வர்யாவின் பெற்​றோர் சார்பாகபேசியகாங்​கிரஸ் பிரமுகர் மலையூர் புருஷோத்தமன், ''ஐஸ்வர்யா பிறக்கும்போதே ஒற்றைக் கிட்னியுடன் பிறந்தவர். அதோடு அவருக்கு மைக்ரேன் தலைவலியும் இருந்தது. தலை வலிக்கான மாத்திரையை சம் பவம் நடந்த அன்று வலியின் வேதனையால் கூடுதலாக எடுத்துக் கொண்டார். அது வலியை அதிமாக்கிவிட, அதைத் தாங்க முடியாமல் தற் கொலை முடிவுக்குச் சென்று விட்டார். அப்படி இருக்கும்​போது ஐஸ்வர்​யாவின் மரணத்தை 'காதல் தோல்வி’ என்று கொச்சைப்படுத்துவது வேதனையின் உச்சம்'' என்று வருத்தப்பட்டார்.

வழக்கின் விசாரணை அதிகாரி​யான அடையாறு உதவி ஆய்வாளரான தினேஷ்குமார், ''ஐஸ்வர்​யாவுக்குத் தீராத வயிற்று வலி இருந்ததாகவும், வயிற்று வலி கடுமையாகி அதைத் தாங்க முடியாமல் தனது அறையில் துப்பட்டாவில் தூக்கு மாட்டிக்கொண்டதாகவும் அவரது குடும்பத்தினர் புகார் தந்துள்ளனர். தூக்கில் தொங்கியவரை உடனே மீட்டு மலர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். குடும்பத்தினர் தந்த புகாரின் அடிப்படையில் சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்திருக்​கிறோம். பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைக்காத வரை எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது. அறிக்கை வந்த பின் அடுத்தக் கட்ட விசாரணை தொடங்கும். வேறு ஏதாவது தடயம் கிடைத்தால் அதையும் விசாரிப்போம்'' என்றார்.

ஓர் இளம் தலைவியின் மரணம் பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது. அத்தனை கேள்விகளுக்கும் விடை அளிக்கட்டும் காவல் துறை!

- எஸ்.கிருபாகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism