Published:Updated:

''கருணாநிதியும் கண்டுகொள்ளவில்லை!''

கருகும் பயிர்கள்.. பலியாகும் உயிர்கள்

''கருணாநிதியும் கண்டுகொள்ளவில்லை!''

கருகும் பயிர்கள்.. பலியாகும் உயிர்கள்

Published:Updated:

காவிரி நதி நீர்ப் பிரச்னை மனித உயிர்களைக் காவுவாங்கும் பிரச்னையாக மாறிவிட்டது. கருகும் பயிர்களைக் காணச் சகிக்காமலும் கடன் சுமையைத் தாங்க முடியாமலும் அடுத்தடுத்து விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ள... திகிலில் உறைந்து கிடக்கிறது டெல்டா.

''கருணாநிதியும் கண்டுகொள்ளவில்லை!''

கீழ்வேளூர் ராஜாங்கம், மகிழி செல்வராஜ், அபிவிருத்தீஸ்வரம் ஸ்ரீதரன், மயிலாடுதுறை பூமிநாதன் என

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''கருணாநிதியும் கண்டுகொள்ளவில்லை!''

நான்கு விவசாயிகள் அடுத்தடுத்து பலியான சோகத்தில் டெல்டா பகுதியே விக்கித்து நின்றது. இந்த நிலையில், திருத்துறைப்பூண்டி பகுதியில் இருந்து அடுத்த அதிர்ச்சி வந்தது. ஆண்டாங்கரை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அப்துல் ரஹ்மான், தன் வயலில் இருந்த மரத்திலேயே தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்டு விட்டார்.

அப்துல் ரஹ்மானின் மகன் மைதீனி​டம் பேசி​னோம். ''எங்க அப்பாவுக்கு வயல்தான் வீடு. பயிர்கள்தான் சொந்த​பந்தம். அவருக்கு கசாப்புத் தொழிலும் தெரியும். விவ சாயம் போக, மீதி நேரத்தில்தான் அந்தத் தொழில் செய்வாக. கடந்த 10 நாளாவே பயிரெல்லாம் கருகிருச்சு. தண்ணிக்கு வழியில்லை. அநியாயமா என் பயிரெல்லாம் சாகுதேனு புலம்பிக்​கிட்டே இருந்தாக. 8-ம் தேதி காலையில் எழுந்ததும் யார்கிட்டேயும் எதுவும் சொல்லாமப் போயிட்டாக. திடீர்னு ஒரு பையன் வந்து, 'உங்க அப்பா கருவை மரத்துல தூக்குல தொங்​குறார்’னு சொல்லிட்டுப் போனான்.

''கருணாநிதியும் கண்டுகொள்ளவில்லை!''

அலறித் துடிச்சு நாங்க போறதுக்குள்ள எல்லாமே முடிஞ்சிருச்சு. காவிரிப் பிரச்னைக்காக உசுரைவிடுற கடைசி மனு​ஷனா எங்க அப்பா இருக்கட்டும். இனியாவது மத்திய அரசும் மாநில அரசும் உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளைக் காப்பாத்தணும்'' என்று கண்ணீரோடு கோரிக்கை விடுத்தார்.

நாம் ஆண்டாங்கரையில் இருக்கும்போதே, திருத்துறைப்பூண்டி அருகில் இருக்கும் எழிலூர் நேமம் என்ற கிராமத்தைச் சேர்ந்த நாகூரான் என்ற விவசாயி பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்துவிட்ட தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்றோம். மூன்று ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்திருக்கிறார் நாகூரான். 11-ம் தேதி வயலுக்கு பூச்சி மருந்து அடித்துவிட்டு வருவதாகச் சென்றவர், அந்த பூச்சிக்கொல்லி மருந்தையே குடித்து விட்டார். ஆபத்தான நிலையில்​தான் இன்னும் இருக்கிறார்.

திருவாரூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் துணைச் செயலாளர் பி.ஆர்.பாண்டி​யன், ''ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டங்களில் 15 லட்சம் ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மொத்தச் செலவு கிட்டத்தட்ட 4,500 கோடி ரூபாய். இந்தப் பணத்தை திரும்ப எடுக்க, விவசாயிகள் ஐந்து வருடங்களாவது போராட வேண்டி இருக்கும். கடந்த ஜூன் மாதம் தண்ணீர் திறந்திருந்தால், இந்நேரம் சாகுபடி முடிந்திருக்கும். போதுமான இருப்பு இல்லாததால், செப்டம்பர் மாதம்தான் தண்ணீர்

''கருணாநிதியும் கண்டுகொள்ளவில்லை!''

திறக்கப்பட்டது. அதற்கு முன்பே உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. அதைவைத்து கர்நாடகாவில் இருந்து தண்ணீர் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில்தான் சாகுபடி செய்யத் தொடங்கினர். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதிக் காததோடு, காவிரி ஆணையத்தில் இருந்து வெளியேறி, இந்திய இறை​யாண்மைக்கு எதிராகவும் செயல்​பட்டு இருக்கிறார் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர். அதற்குக் காரணம் காவிரி நீர்ப் பிரச்னையை அவர்கள் தேர்தல் பிரச்னையாகப் பார்ப்பதுதான். மத்திய அரசும் மௌனமாக இருப்பதும் அதனால்தான். கர்நாடக அரசு கடந்த ஐந்து ஆண்டுகளாகவே திட்டம்போட்டு சுமார் 3,000 ஏரிகளை உருவாக்கி இருக்கிறது. உபரியாக இருக்கும் தண்ணீரை அவற்றில் சேமித்து வைக்கிறது. தமிழகத்துக்கு தண்ணீர் தரக் கூடாது என்பதையே குறிக்கோளாகக் கொண்டு, கர்நாடக முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியது, ரகசியக் காப்பு உறுதிமொழியை மீறியது, இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பது ஆகியவற்றைக் காரணம் காட்டி, ஷெட்டர் மீது உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுத்தாலே போதுமானது.

காவிரி நீர்ப்பாசன முறைக் கட்டமைப்பு என்பது உலகத்திலேயே சிறந்த பாசனமுறைக் கட்டமைப்பு. கடந்த 20 வருடங்களாகவே அது முறையாக பராமரிக் கப்படாததும் இந்த வறட்சிக்கு ஒரு முக்கியக் காரணம். தூர்வார ஒதுக்கப்படும் நிதி பெரும்பாலும் தனி நபர்களின் ஆதாய நிதியாகவே மாறிவிட்டது. அந்த நிதியில் இருந்து கட்டமைப்பு வசதியைப் பராமரித்து இருந்தால், இந்த அளவுக்குத் தண்ணீருக்காக நாம் அல்லல்படத் தேவை இல்லை.

பயிரைக் காப்பாற்றும் வழியே தெரியாமல்தான் விவசாயிகள் தற்கொலை முடிவுக்குப்​ போய்​விட்டனர். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சொந்த மாவட்டத்தில் இந்த உயிர்இழப்பு நடந்திருக்கிறது. அவரும் இதுவரை வாயைத் திறக்காமலே இருக்கிறார். அவரது கட்சி எம்.பி-க்களும் நாடாளுமன்றத்தில் பேசாமல் இருக்கிறார்கள். இந்தத் தற்கொலைகளை உடனே தடுத்து நிறுத்தவேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும் உண்டு. அதை உடனடியாகச் செய்ய வேண்டும்'' என்று வேண்டுகோள் வைத்தார்.

விவசாயிகளைக் கண்டுகொள்ள ஆளே இல்லையா..?

- வீ.மாணிக்கவாசகம், எம்.புண்ணியமூர்த்தி

படங்கள்: கே.குணசீலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism