Published:Updated:

தவளை போய் கொசு வந்தது டும்டும்டும்...

கொசுக்கள் சூழ்ந்த தமிழ்நாடு

தவளை போய் கொசு வந்தது டும்டும்டும்...

கொசுக்கள் சூழ்ந்த தமிழ்நாடு

Published:Updated:
##~##

'கொசுத் தொல்லை தாங்கலடா நாரா யணா’ எனக் கிண்டலுக்காக கவுண்டமணி சொல்லும் டயலாக் ரொம்பவே ஃபேமஸ். இப்போது நிஜமாகவே தமிழகத்தில் கொசுத் தொல்லை தாங்க முடியவில்லை. கொசுக்களும் கொசுக்கள் சார்ந்த இடங்களுமாகத் தமிழகம் மாறிவிட்டது. 80-களில் வந்த சினிமாக்களில் கனவுப் பாடல்களில் புகை மூட்டம் கிளம்புவதைப்போல், ஊரெங்கும் கொசுவுக்கு மருந்து அடிக்கிறார்கள். ஆனாலும், கொசு மட்டும் குறையவே இல்லை!

 திடீரென தமிழகத்தில் கொசு அதிகமாகக் காரணம் என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுற்றுச்சூழல் ஆர்வலரான தியோடர் பாஸ்​கரனிடம் பேசினோம். ''10 வருடங்களுக்கு முன் குறைந்த அளவுக்கு மழை பெய்து, தண்ணீர் நின்றால்கூட தவளைச் சத்தம் 'கொர்... கொர்’ என்று கேட்டுக்கொண்டே இருக்கும். ஆனால், இப்போது வயல்களுக்கு எல்லாம் பூச்சிக் கொல்லி மருந்துகளை

தவளை போய் கொசு வந்தது டும்டும்டும்...

அடித்ததால், தவளைகள் பெரும்பாலும் அழிந்து விட்டன. தவளைகள் அழிந்து போனதற்கும் கொசுவுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம். ஒரு குட்டையில் தண்ணீர் தேங்கி நின்றால், அங்கேதான் கொசு முட்டை வைக்கும். அதே தண்ணீரில்தான் தலைப்பிரட்டை என்று சொல்லப்படும் தவளைக் குஞ்சுகளும் இருக்கும். கொசுவின் முட்டையில் இருந்து லார்வா எனப்படும் கொசு வெளியில் வந்ததுமே, தண்ணீரில் நீந்தும் தலைப்பிரட்டைகள் அந்த லார்வாக்களை சாப்பிட்டுவிடும். இப்போது தவளைக் குஞ்சுகள் இல்லாததால் லார்வாக்கள் பெருகி, மனிதர்களைத் தாக்குகிறது. கொசுக்களின் பெருக்கத்தை இயற்கையாகவே கட்டுப்படுத்திவந்த தலைப்பிரட்டைகளை நாம் அழித்து​விட் டோம். அதனால் இப்போது, கொசுக்களை ஒழிக்க செயற்கையாக மருந்து​களைப் பயன்படுத்துகிறோம். எப்போதுமே இயற்கையை மீறும்போது பிரச்னைகள் ஏற்படுவது தவிர்க்க முடியாது.

அதோடு, கண்ட இடங்களில் குப்பை​களைக் கொட்டுவது, பராமரிப்பு இல்லாத சாக்கடைகள் என்று கொசுக்​கள் பெருகுவதற்குத் தேவையான அத்தனை வசதிகளையும் நாமே செய்து கொடுக்​கிறோம். இது எல்லாமே கொசுக்கள் உற்பத்தி அதிகமாவதற்கு அடிப்படைக் காரணங்கள்'' என்றார்.

மின் தடையும் ஒரு முக்கியக் காரணம் என்கிறார், நிழல் சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்த இளங்கோ.

தவளை போய் கொசு வந்தது டும்டும்டும்...

''தமிழ்நாட்டில் சென்னையைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 18 மணி நேரம் வரை பவர் கட் ஆகிறது. ராத்திரி ஒரு மணி நேரம்கூட நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. பவர் கட் காரணமாக கொசுவுக்கு எதிரான பொருட்கள் எதையும் பயன்படுத்த முடிவதில்லை. ஃபேன் போட்டால்கூட கொசுவிடம் இருந்து தப்பிக்கலாம். ஆனால், ஃபேன் சுற்ற மின்சாரம் வேண்டுமே? மாலை 6 மணிக்கு மேல்தான் வெளியில் இருக்கும் கொசுக்கள் எல்லாம் வீட்டுக்குள் வருகின்றன. அந்த நேரத்தில் மின்சாரம் இருப்பது இல்லை. அதனால், காற்று வருவதற்காக ஜன்னலைத் திறந்து வைக்கிறோம். அதுதான் கொசுக்களுக்கு வசதியாகிறது.

தமிழ்நாட்டில் கொசு உற்பத்தி அதிகமாகி... மக்களுக்கு நோய்கள் பெருகுவதற்குக்

தவளை போய் கொசு வந்தது டும்டும்டும்...

காரணம், தக்க பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காத தமிழக அரசுதான் என்பதை உறுதியாகச் சொல்வேன். கொசுக்களால் ஏற்படும் டெங்கு, மலேரியா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுத்தான் இன்று ஏராளமான மக்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதை அரசு மறுக் கத்தான் முடியுமா? இல்லை, மறைக்கத்தான் முடியுமா?'' என்று ஆவேசப்பட்டார்.

கொசுக்களைக் கட்டுப்படுத்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று, தமிழக அரசின் சுகாதாரத் துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டோம். ''கொசுக்களை அழிப்பதற்காக மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் மூலமாக எம்.எல்.ஓ. மருந்து அடிக்கிறோம். கொசுக்களை அழிப்பது ஒரு பக்கம் தொடர்ந்தாலும், கொசுக்கள் பெருகுவதைத் தடுப்பதுதான் முக்கியமானது. உங்கள் வீட்டுக்குக் கொசு வருகிறது என்றால், அது வேறு எங்கும் இருந்து வருவது இல்லை. உங்கள் வீட்டில் இருந்து 500 மீட்டருக்குள் உருவாகும் கொசுக்கள்தான் உங்களைத் தேடி வருகிறது. காரணம் கொசுக்கள் 200 மீட்டரில் இருந்து 500 மீட்டர் வரைதான் பறக்கும் திறன் கொண்டது. அதனால், உங்கள் வீட்டைச் சுற்றி எங்காவது கொசுக்கள் உருவாகும் இடம் இருக்கிறதா என்று பாருங்கள். திறந்த தண்ணீர்த் தொட்டி, தூக்கி எறிந்த டயர்கள், சிரட்டை போன்றவற்றில் தேங்கும் தண்ணீர்தான் கொசுக்கள் தங்குவதற்கும், முட்டை வைப்பதற்கும் சாதகமாக இருக்கும். இதைத் தவிர்த்தால் மட்டுமே கொசுக்களை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும். இதற்கு அரசாங்கம் மட்டும் மனது வைத்தால் முடியாது. பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம்'' என்றார்.

இந்தக் கட்டுரையை வாசித்து முடிப் பதற்குள் உங்களை எத்தனை கொசுக்கள் கடித்திருக்கு​மோ?

- கே.ராஜாதிருவேங்கடம்