Published:Updated:

இப்போது அமைதி காப்பதுதான் வீரம்!

திருமா கட்டளை

இப்போது அமைதி காப்பதுதான் வீரம்!

திருமா கட்டளை

Published:Updated:
##~##

விடுதலைச் சிறுத்தைகள் மீதும் அதன் தலைவர் தொல்.திருமாவளவன் மீது கடும் தாக்குதலைத் தொடுத்துள்ளார் டாக்டர் ராமதாஸ். இதற்கு எதிராகச் சிறுத்தைகளும் சீற... அவர்களைச் சாந்தப்படுத்த ஆரம்பித்திருக்கிறார் திருமாவளவன்! 

சமீபத்தில், சிவகாசியில் நடந்த திருமாவள​வனின் 50-வது பிறந்த நாள் விழாதான், ராம​தாஸுக்குப் பதில் சொல்லும் கூட்டமாக அமைந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திராவிடத் தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன் பேசும்போது, ''கலப்புத் திருமணம் செய்யக் கூடாது என்கிறார்கள். கொங்கு வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த நடிகர் சிவக்குமாரின் மகன் நடிகர் சூர்யா, வட மாநிலத்தைச் சேர்ந்த நடிகை ஜோதிகாவைத் திருமணம் செய்து கொள்ளவில்லையா? மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், வேறு சாதியைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்யவில்லையா. பணக்காரருக்கு ஒரு நீதி? ஏழைக்கு ஒரு நீதியா? நாடகக் காதல் என்​கிறார்கள். இல்லை இப்போது நாடக அரசியல்தான் நடக்கிறது'' என்றார்.

இப்போது அமைதி காப்பதுதான் வீரம்!

வழக்கமாக அனல் வீசும் திருமாவின் பேச்சு அன்று சாந்தமாக இருந்தது.

''டாக்டர் ராமதாஸ் நம் மீது ஏன் குறி வைத்துத் தாக்கு​கிறார்? இதுவரை அ.தி.மு.க., தி.மு.க. என்று மாறிமாறி அங்கம்வகித்து பதவி சுகம் அடைந்த அவருக்கு, இப்போது எந்தக் கூட்டணியிலும் சேர முடியாத நிலைமை. ஆனால், கருணாநிதியுடன் திருமாவளவன் நெருக்கமாக இருக்கிறானே, அரசியல் அரங்கில் விடுதலைச் சிறுத்தைகள் முக்கியத்துவம் பெறுகிறார்களே, நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றிபெற்றால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வளர்ந்து விடுமே என்ற ஆதங்கம்தான். திருமாவளவன் வளரக்கூடாது என்பதற்காக மற்ற சாதிச் சங்கங்களை ஒன்றிணைக்கிறார் ராமதாஸ். என்னை அவன், இவன் என்றுகூட ராமதாஸ் பேசுகிறார். என்னைவிட வயதில் மூத்தவர். பேசிவிட்டுப் போகிறார். என்னை நேரில் சட்டை​யைப் பிடித்து இழுத்து ராமதாஸ் வம்புக்கு இழுத்தாலும் நான் அமைதிதான் காப்பேன். எம்.பி. தேர்தல் முடியும் வரை இந்தப் பிரச்னையைக் கைவிட மாட்டார். நம்மை வம்புக்கு இழுப்பார்கள். ஆனால், யாரும் பலியாகக் கூடாது. வீச்சரிவாளால் வீரத்தையோ, தீரத்தையோ காட்டக்கூடாது. நெருக்கடியான நிலை​யிலும் அமைதி காப்பதுதான் வீரம்'' என்று முடித்தார்.

அமைதிதான் இப்போதைய தேவை.

- எம்.கார்த்தி படம்: ஆர்.எம்.முத்துராஜ்